ஹூண்டாயை வம்புக்கு இழுக்கும் சீன நிறுவனம்.. இந்தியர்கள் எது பக்கம் நிக்க போறாங்களோ!..
இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடல்களில் ஒன்றாக ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) இருக்கின்றது. பெரும் பணக்காரர்கள் வீட்டில்கூட இந்த கார் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. பத்து சொகுசு காரை வைத்திருப்பவர்கூட இந்த காரின் ஒரு யூனிட்டையாவது பொதுவான பயன்பாட்டிற்காக வாங்கி வைத்திருப்பார்கள். அந்த அளவிற்கே பலரின் பிரியமான கார் மடாலக கிரெட்டா உள்ளது. இந்த எஸ்யூவி காருக்கு போட்டியளிக்கக் கூடிய ஓர் கார் மாடலையே சீன நிறுவனம் ஒன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிஒய்டி (BYD) நிறுவனம்-தான் அதுவாகும். ஆனால், மின்சாரத்தில் இயங்கும் கிரெட்டாவிற்கான போட்டி மாடலையே அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அதேவேளையில், ஹூண்டாயும் கிரெட்டாவை தழுவிய எலெக்ட்ரிக் கார் மாடலை விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர உள்ளது என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. ஆகையால், பிஒய்டி நிறுவனத்தின் இந்த புதுமுக தயாரிப்பு கிரெட்டா-வின் இரண்டு அவதாரங்களுக்கும் (இசிஇ மற்றும் எலெக்ட்ரிக்) போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அது இந்தியாவின் பி-பிரிவிலேயே விற்பனைக்குக் கிடைக்கும். அதாவது, மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் பிரிவிலேயே அந்த பெயரிடப்படாத எலெக்ட்ரிக் விற்பனைக்குக் கிடைக்கும்.
இந்த பிரிவில் விற்கப்படும் வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த டிமாண்டை கருத்தில் கொண்டே ஹூண்டா-யும், மாருதி சுஸுகி-யும் அவர்களின் மின்சார கார் மாடலை தயார் செய்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் முன்னதாகவே தன்னுடைய எலெக்ட்ரிக் காரை பிஒய்டி விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.
அந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. ரூ. 20 லட்சத்திற்கும் குறைவான விலையே அதற்கு நிர்ணயிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், விலை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதேநேரத்தில் பிஒய்டி நிறுவனம் இந்த காரை 2025 ஆம் ஆண்டின் முதல் பாதிக்குள் விற்பனைக்குக் கொண்டு வந்துவிடும் என தெரிகின்றது.
இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் அடுத்து வரும் நாட்களில் விற்பனைக்கு வர இருப்பதாகக் கூறப்படும் ஹூண்டாய் கிரெட்டா இவி மற்றும் மாருதி இவிஎக்ஸ் ஆகியவற்றிற்கு இது மிகப் பெரிய போட்டியாக அமையும். பிஒய்டி நிறுவனம் தன்னுடைய இந்த பெயரிடப்படாத புதுமுக கார் மாடலை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற இருக்கும் பாரத் மொபிலிட்டி ஷோ-வில் காட்சிப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிஒய்டி நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் வருகையால் ஹூண்டாயை மட்டுமல்ல இப்போதைய மின்சார நான்கு சக்கர வாகன உலகின் தலைவனாக இருக்கும் டாடாவையும் அது வம்புக்கு இழுக்க இருக்கின்றது என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. இன்றைய நிலவரப்படி பிஒய்டி நிறுவனத்தின் கீழ் மூன்று எலெக்ட்ரிக் கார் மாடல்கள் மட்டுமே விற்பனையில் இருக்கின்றன.
அட்டோ 3 (Atto 3), சீல் (Seal) மற்றும் இ6 (e6) ஆகியவையே அவை ஆகும். இதில் இ6 கார் மாடலின் அப்கிரேட் செய்யப்பட்ட வெர்ஷனை இ-மேக்ஸ் 7 (eMAX7) எனும் புதிய பெயரில் அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாகவே நான்கவதாக ஓர் புதுமுக மிட்-சைஸ் எஸ்யூவி காரையும் பிஒய்டி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிஒய்டி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு சொகுசு மற்றும் ஆடம்பர கார் பிரியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டே அது இ6 அப்டேட் வெர்ஷனையும், இதைத்தொடர்ந்து புதுமுக எஸ்யூவி ரக கிரெட்டை போட்டியாளனையும் அது நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








