சீன தயாரிப்பிற்கு இந்தியர்கள் மத்தியில் குவியும் புக்கிங் மழை... மூனு மாசத்துல இவ்ளோ புக்கிங்கா..

சீனாவைச் சேர்ந்த பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான எலெக்ட்ரிக் கார் மாடல்களில் சீல்-ம் ஒன்றாகும். இது ஓர் செடான் ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த காரை சமீபத்திலேயே இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வந்தது பிஒய்டி நிறுவனம்.

இதைத்தொடர்ந்து புக்கிங் பணிகளையும் அது தொடங்கியது. இந்த காருக்கே தற்போது இந்தியர்கள் மத்தியில் புக்கிங் மழை பொழிந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, இதுவரை பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் காருக்கு 1000 புக்கிங்குகள் கிடைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Byd seal electric car

இதில், 500 புக்கிங்குகள் முதல் 15 நாட்களுக்கு கிடைக்கப்பட்டவை ஆகும். மீதமுள்ள 500 புக்கிங் கடந்த இரண்டு மாதங்களில் கிடைத்தவை ஆகும். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார் மாடல்களில் ஒன்றாக பிஒய்டி சீல் இருக்கின்றது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலையே 53 லட்சம் ஆகும்.

ஆன் ரோடில் இதன் விலை ரூ. 60 லட்சத்தைத் தொடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் கார் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும். டைனமிக் (Dynamic), பிரீமியம் (Premium) மற்றும் பெர்ஃபார்மன்ஸ் (Performance) ஆகியவையே அவை ஆகும்.

மூன்று தேர்வுகளும் வெவ்வேறு ரேஞ்ஜ் மற்றும் திறனை வெளிப்படுத்தும் வசதியைக் கொண்டிருக்கின்றன. டைனமிக் தேர்வு 204 பிஎஸ், 310 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதில், ஓர் முழு சார்ஜில் 510 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த ரேஞ்ஜ் திறனுக்காக சீல் டைனமிக் தேர்வில் 61.4 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதன், பிரீமியம் தேர்வில் அதிகபட்சமாக ஓர் முழு சார்ஜில் 650 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். இந்த ரேஞ்ஜ் திறனுக்காக 82.5 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த தேர்வில் 313 பிஎஸ் மற்றும் 360 என்எம் டார்க்கை வெளியேற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

பெர்ஃபார்மன்ஸ், சீல் எலெக்ட்ரிக் கார் மாடலில் இருப்பதிலேயே இதுதான் அதிக பவரை வெளியேற்றும் திறன் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இதில், 82.5 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 580 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும்.

இது ஓர் அனைத்து வீல் இயக்கம் கொண்ட தேர்வாகும். 530 பிஎஸ் மற்றும் 670 என்எம் டார்க்கையே இது வெளியேற்றும். பிஒய்டி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் செடான் காரை அதிக ரேஞ்ஜ் மற்றும் அதிக திறனை வெளியேற்றக் கூடியதாக மட்டுமல்ல அதிக பாதுகாப்பு அம்சங்களைத் தாங்கியதாகவும் தயார் செய்திருக்கின்றது.

அந்தவகையில், பயணிகளின் பாதுகாப்பிற்காக சீல் எலெக்ட்ரிக் கார் மாடலில் 9 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், முன் மற்றும் பின் பக்க பார்க்கிங் சென்சார், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா மற்றும் அடாஸ் அம்சம் ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதேபோல், இந்த காரில் தொழில்நுட்ப வசதிகளையும் சீன நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 15.6 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஹீட்டிங் மற்றும் வெண்டிலேஷன் வசதி கொண்ட பவர்டு முன் பக்க இருக்கை ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஆம்பியன்ட் லைட் ஆகிய அம்சங்களும் பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் காரை 150 kW சார்ஜிங் பாயிண்டில் வைத்தும் சார்ஜ் செய்துக்கொள்ள முடியும். இதை பயன்படுத்தும் பட்சத்தில் வெறும் 37 நிமிடங்களிலேயே 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை ஏற்றிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதேவேளையில், 11kW ஏசி சார்ஜரிலும் வைத்தும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். ஆனால், இதை பயன்படுத்தும்போது 0-100 சதவீத சார்ஜ் செய்ய அதிகபட்சமாக எட்டரை மணி நேரங்களுக்கும் அதிகமாக எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரை ஆர்க்ட்டிக் ப்ளூ (Arctic Blue), அரோரா ஒயிட் (Aurora White) அட்லண்டீஸ் கிரே (Atlantis Gray) மற்றும் காஸ்மோஸ் பிளாக் (Cosmos Black) ஆகிய நிற தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சீல் எலெக்ட்ரிக் காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக, அதிக விலையைக் கொண்டிருக்கின்ற போதிலும் இதற்கு சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதிக பிரீமியம், அதிக ரேஞ்ஜ் மற்றும் அதிக பாதுகாப்பு அம்சங்களை தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 21, 2024, 5:00 [IST]
English summary
Byd seal electric car received 1k booking with in 3 months
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+