இந்த காருக்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! பிஒய்டியின் இந்த காரில் என்னலாம் எதிர்பார்க்கலாம்?
பிஒய்டி நிறுவனம் நாளை தனது சீல் என்ற எலெக்ட்ரிக் செடான் காரை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் குறித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த காரை புக் செய்தால் சர்வதேச அளவில் நடக்கும் கால்பந்தாட்ட போட்டியை நேரில் பார்க்கும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சீனாவை சேர்ந்த பிஒய்டி என்ற நிறுவனம் இந்தியாவில் தனது கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் கார்களுக்கு இந்தியாவில் மக்கள் மத்தியில் நல்ல மவுசு இருப்பதால் தொடர்ந்து நிறுவனம் பல்வேறு கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து வருகிறது. அதன்படி பிஒய்டி என்ற எலெக்ட்ரிக் செடான் காரை இந்தியாவில் நிறுவனம் இறக்குமதி செய்து நாளை விற்பனைக்காக அறிமுகப்படுத்துகிறது.

இந்த கார் சர்வதேச மார்க்கெட்டில் டெஸ்லா மாடல் 3 மற்றும் பிஎம்டபிள்யூ ஐ4 ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது இந்தியாவைப் பொறுத்தவரை இந்த கார் ரூபாய் 50 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வர உள்ளதால் ஹூண்டாய் மற்றும் கியா இவி 6 ஆகிய கார்களுக்கும் விலை அடிப்படையில் போட்டியாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிஒய்டி நிறுவனம் வரும் ஏப்ரல் மாதம் 30-ம் தேதிக்குள் இந்த காரை புக் செய்பவர்களுக்கு 2024 சாம்பியன்ஷிப் கால்பந்தாட்ட போட்டியை நேரில் காணும் டிக்கெட் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் தான் இந்த கால்பந்தாட்ட போட்டிக்கு அதிகாரப்பூர்வ பார்ட்னர் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது.
பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் காரை பொறுத்தவரை சர்வதேச மார்க்கெட்டில் மூன்று விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு உள்ளது. டைனமிக், ப்ரீமியம் மற்றும் பெர்பார்மன்ஸ் என்ற வேரியன்ட்கள் விற்பனையில் இருக்கும் நிலையில் இந்த மூன்று வேரியன்டுகளும் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் உள்ள பேட்டரி ஆப்ஷனை பொருத்தவரை 82.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது
இந்த பிஒய்டி சீல் காருக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவு வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவிலும் இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மொத்தம் இரண்டு டன் எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது 800 எலெக்ட்ரிக் சிஸ்டத்தில் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதன் மோட்டாரை பொருத்தவரை 230 பிஎஸ் பவரையும் 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 570 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 150கிலோ வாட் டிசி பாஸ்ட் சார்ஜர் பொருத்தப்பட்டுள்ளது. இது 10-80 சதவீத பேட்டரியை வெறும் 37நிமிடத்தில் சார்ஜ் ஏற்றி விடும். இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4.8மீட்டர் நீளம் 1.87மீட்டர் அகலம் மற்றும் 1.46மீட்டர் உயரம் மற்றும் 2.92மீட்டர் வீல் பேஸ் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பிஒய்டி சீல் காரை அந்நிறுவனம் தனது அட்டோ காரை தயாரிக்கும் அதே இ-பிளாட்பார்ம் 3.0என்ற தளத்தில் தான் தயாரிக்கிறது. இதன் பூட் இடவசதியை பொருத்தவரை நான் ஒரு லிட்டர் அளவு ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது. கூடுதலாக 50லிட்டர் ஸ்டோரேஜ் பகுதிகள் உள்ளது. இதற்கு சாதாரணமாக வழங்கப்படும் 11கிலோ வாட் ஏசி சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால் 8.6மணி நேரத்தில் இந்த காரின் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏறிவிடும்.
இந்த காரின் பெர்ஃபார்மென்ஸ் பொருத்தவரை 0-100கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.9 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த காரின் உட்பகுதியில் 15.6இன்ச் ரோட்டபுள் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 10.25இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இதில் லெதர் சீட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. 12ஸ்பீக்கர் கொண்ட ஆடியோ சிஸ்டம் 9ஏர் பேக்குகள் மற்றும் அடாஸ் தொழில்நுட்பம் ஆகிய இந்த காரில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் வரிசையாக தனது கார்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், மக்கள் மத்தியில் இந்த நிறுவனத்திற்கு நல்ல பெயர் கிடைத்து வருகிறது. இருந்தாலும் இந்நிறுவனம் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காரை இந்தியாவில் இருக்கும்போது செய்து விற்பனை செய்து வருவதால் அதன் விலை அதிகமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








