சீன காருக்கு இந்தியாவில் குவியும் புக்கிங்.. இவ்ளோ ரேஞ்ஜ் தந்தா யாருதான் புக் பண்ணாம இருப்பா!

சீன கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி (BYD) இந்தியாவில் சமீபத்தில் சீல் (Seal EV) எனும் எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் செடான் வகை எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த காருக்கே இந்தியர்கள் மத்தியில் புக்கிங் குவிந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நேற்றைய தினமே (மார்ச் 5) இந்த கார் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதேவேளையில், புக்கிங் பணிகள் கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே, தற்போது சுமார் 200 பேர் வரை இந்த காரை புக் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Byd seal front look

பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதியில் இருந்தே இந்த எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் சீல் எலெக்ட்ரிக் கார் மூன்று விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. டைனமிக் (Dynamic), பிரீமியம் (Premium) மற்றும் பெர்ஃபார்மன்ஸ் (Performance) ஆகியவையே அவை ஆகும்.

அறிமுகமாக இந்த காருக்கு ரூ. 41 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். வெகு விரைவில் இந்த காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. நிறுவனத்தின் கூற்றின்படி, மார்ச் 31 ஆம் தேதி முதல் இந்த பணிகள் தொடங்கப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

Byd seal dashboard

மேலும், ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் சீல் எலெக்ட்ரிக் காரை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக யுஇஎஃப்ஏ போட்டிக்கான டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. டிக்கெட்டுடன் சேர்த்து சுற்று பயணத்திற்கான டிக்கெட்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர, புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக ஒரு இலவச சர்வீஸ் மற்றும் ஆறு மாத ரோடு சைடு அசிஸ்டன்ஸையும் இலவசமாக வழங்க இருப்பதாக பிஒய்டி தெரிவித்து இருக்கின்றது. மேலும், வாகனத்தில் இருந்து மின்சாரத்தை எடுத்துக் கொள்வதற்கான கருவி, 7 kW வீட்டில் வைத்து சார்ஜ் செய்வதற்கான கருவி மற்றும் 3 kW போர்டபிள் சார்ஜிங் பாக்ஸ் ஆகியவற்றையும் சீல் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாகவும் பிஒய்டி தெரிவித்து இருக்கின்றது.

Byd seal side view

மூன்று தேர்வுகளும் மூன்று விதமான ரேஞ்ஜ் மற்றும் திறன் வெளிப்பாட்டு வசதியைக் கொண்டவையாகக் காட்சியளிக்கின்றன. அந்தவகையில், டைனமிக் தேர்வு 204 பிஎஸ், 310 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இத்துடன், ஓர் முழு சார்ஜில் 510 கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ள முடியும்.

இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 61.4 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், பிரீமியம் தேர்வில் 82.5 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 650 கிலோ மீட்டர் வரை ரேஞ்ஜ் தரும். ரியர் வீல் இயக்கம் கொண்ட இந்த தேர்வில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 313 பிஎஸ் மற்றும் 360 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

பெர்ஃபார்மன்ஸ் தேர்வு, இருப்பதிலேயே அதிக பவரை வெளியேற்றக் கூடிய தேர்வாகக் காட்சியளிக்கின்றது. இது ஓர் அனைத்து வீல் இயக்கம் கொண்ட தேர்வாகவும் உள்ளது. 530 பிஎஸ் மற்றும் 670 என்எம் டார்க்கையே இது வெளியேற்றும். இதிலும், 82.5kWh பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது.

ஆனால், இதன் திறன் வெளிப்பாடு சற்று அதிகம் என்பதால் ரேஞ்ஜ் ஒரு முழு சார்ஜிலும் 580 ஆக உள்ளது. ரேஞ்ஜ் விஷயத்தில் மட்டுமல்ல இந்த கார் தொழில்நுட்ப விஷயத்திலும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையிலேயே இருக்கின்றது. 15.6 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர, டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஹீட்டிங் மற்றும் வெண்டிலேஷன் வசதியுடன் கூடிய பவர்டு முன் பக்க இருக்கை, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஆம்பியன்ட் லைட் ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் மிக அதிகளவில் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றது.

அந்தவகையில், 9 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், முன் மற்றும் பின் பக்க பார்க்கிங் சென்சார், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா மற்றும் அடாஸ் அம்சம் ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிஒய்டி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற உயரிய வகை கார்களைப் பயன்படுத்துவோர் மத்தியிலேயே இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. தற்போது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் சீல் காருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 6, 2024, 19:26 [IST]
English summary
Byd seal ev received 200 bookings with in 8 days
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X