மாஸ் காட்டும் சீன நிறுவனம்.. 510-650கிமீ ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்! வீட்டுலயே சார்ஜ் பண்ணிக்கலாம்

சீன மின்சார கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி (BYD), இந்தியாவில் இ6 (e6) மற்றும் அட்டோ3 (Atto3) எனும் இரண்டு விதமான எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த இரண்டைத் தொடர்ந்து மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக சீன நிறுவனம் சீல் (Seal) எனும் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக கூறி வந்தது.

இந்த நிலையிலேயே, பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் அதிகாரப்பூர்வ அறிமுக நிகழ்வே இன்று (மார்ச் 5) இந்தியாவில் நடைபெற்றது. சீல் ஓர் செடான் வகை எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். சமீபத்திலேயே இந்த எலெக்ட்ரிக் கார் மாடலுக்கான புக்கிங் பணிகள் இந்தியாவில் தொடங்கின என்பது குறிப்பிடத்தகுந்தது.

BYD seal sedan electric car launched

அறிமுகமாக பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் காருக்கு ரூ. 41 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த காருக்கு ரூ. 1.25 லட்சம் என்கிற தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. மார்ச் 31 ஆம் தேதி முதல் இந்த காரின் டெலிவரி பணிகளைத் தொடங்க பிஒய்டி நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.

காருடன் சேர்த்து நிறுவனம் 7kw வீட்டு சார்ஜர் மற்றும் 3kw போர்டபிள் சார்ஜர் ஆகியவற்றையும் பிஒய்டி வழங்க இருக்கின்றது. இத்துடன் விடிஓஎல் (VTOL) மொபல் பவர் சப்ளை கிட்டையும் வழங்க நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இத்துடன், 6 ஆண்டுகள் ரோடு-சைடு அசிஸ்டன்ஸ் மற்றும் ஒரு சர்வீஸையும் காம்ப்ளிமென்டரி நிறுவனம் வழங்கிக் கொண்டிருக்கின்றது.

Byd seal dashboard

இத்துடன், ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக யுஇஎஃப்ஏ போட்டியைக் காண்பதற்கான டிக்கெட்டும் இலவசமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இதற்கான விமான டிக்கெட்டையும் அவர்களே வழங்குவதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் பிஒய்டி சீல் மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

டைனமிக் (Dynamic), பிரீமியம் (Premium) மற்றும் பெர்ஃபார்மென்ஸ் (Performance) ஆகியவையே அவை ஆகும். இதில் டைனமிக்கே ஆரம்ப நிலை தேர்வாகும். இது ஓர் ரியர் வீல் டிரைவ் செட்-அப்பைக் கொண்ட வெர்ஷனும்கூட. இதன் விலையே ரூ. 41 லட்சம் ஆகும். இதற்கு அடுத்தபடியாக பிரீமியம் தேர்வாக ஆர்டபிள்யூடி இருக்கின்றது.

Byd seal wheel

இதுவும் ரியர் வீல் செட்-அப் கொண்ட தேர்வே ஆகும். இதற்கு ரூ. 45.55 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீல்-இன் உயர்நிலை தேர்வாக பெர்ஃபார்மன்ஸ் இருக்கின்றது. இதற்கு ரூ. 53 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதேபோல், ரேஞ்ஜ் திறனிலும் இந்த வேரியண்டுகள் ஒன்றிற்கு ஒன்று மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன.

அந்தவகையல், டைனமிக் தேர்வு 510 கிமீ ரேஞ்ஜையும், பிரீமியம் தேர்வு ஓர் முழு சார்ஜில் 650 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும். அந்த அதிக ரேஞ்ஜ் திறனுக்காக டைனமிக் தேர்வில் 61.4 kWh எல்எஃப்பி பிளேட் பேட்டரி பேக்கும், 204 எச்பி திறனை வெளியேற்றக் கூடிய மின்சார மோட்டாரும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Byd seal side view

இதன் பிரீமியம் தேர்வில் 82.5 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் மற்றும் 313 எச்பி திறனை வெளியேற்றக் கூடிய ஒற்றை மின்சார மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த இரண்டு தேர்வுகளைக் காட்டிலும் அதிக பவர்ஃபுல்லான தேர்வான பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட் இருக்கின்றது.

இதிலும், 82.5 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால், இது ஓர் அனைத்து வீலும் இயங்கும் வசதிக் கொண்ட தேர்வு என்பதால் ரேஞ்ஜ் பொருத்த வரை ஓர் ஃபுல் சார்ஜில் 580 கிமீட்டரை மட்டுமே வழங்கும். பிஒய்டி சீல் காரை 150 kW சார்ஜிங் பாயிண்டில் வைத்தும் சார்ஜ் செய்ய முடியும்.

இதை பயன்படுத்தும் பட்சத்தில் வெறும் 37 நிமிடங்களிலேயே 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை ஏற்றிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், 11 kW ஏசி சார்ஜரிலும் வைத்தும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். ஆனால், இதை பயன்படுத்தும்போது 0-100 சதவீத சார்ஜை ஏற்ற 8.6 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த காருக்கு பிஒய்டி நிறுவனம் 8 ஆண்டுகள்/ 1,60,000 கிமீ வாரண்டி பேட்டரிக்கும், 8 ஆண்டுகள் / 1,50,000 வாரண்டி எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் மோட்டார் கன்ட்ரோல்லருக்கு அது அறிவித்து இருக்கின்றது. பிஒய்டி நிறுவனம் சீல் எலெக்ட்ரிக் காரை சிபியூ வாயிலாகவே விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

பிஒய்டி சீல் ஒட்டுமொத்தமாக நான்கு விதமான நிற தேர்வுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும். ஆர்க்ட்டிக் ப்ளூ (Arctic Blue), அரோரா ஒயிட் (Aurora White) அட்லண்டீஸ் கிரே (Atlantis Gray) மற்றும் காஸ்மோஸ் பிளாக் (Cosmos Black) ஆகியவையே அவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிஒய்டி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு பெரும் செல்வந்தர்கள் மற்றும் சொகுசு கார் விரும்பிகள் மத்தியிலேயே நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இவர்களைக் கூடுதலாக கவரும் பொருட்டே தற்போது சீல் செடான் எலெக்ட்ரிக் காரை பிஒய்டி இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 5, 2024, 15:21 [IST]
English summary
Byd seal sedan electric car launched in india here is price and range details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X