அரை மணிநேரம் சார்ஜ் போட்டா போதும், 250கிமீ போய்ட்டு வரலாம்!! இந்தியாவில் இன்னும் சில ஆண்டுகளில் ஓடவுள்ள இ-கார்

பி.ஒய்.டி (BYD), சீனாவை சேர்ந்த எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம். உலகின் மிக முக்கியமான எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக பிஒய்டி-ஐ சொல்லலாம். இந்தியாவில் மார்க்கெட்டை விரிவுப்படுத்தும் முனைப்பில் இருக்கும் இந்த சீன நிறுவனம் சர்வதேச மார்க்கெட்டில் புதியதாக ஒரு எலக்ட்ரிக் காரை வெளியீடு செய்துள்ளது.

இதனால், சீனா உள்ளிட்ட சில வெளிநாடுகளில் இந்த புதிய பிஒய்டி எலக்ட்ரிக் கார் விரைவில் விற்பனைக்கு வந்துவிடும். 2020இல் பாதியில் நிறுத்தப்பட்டு கொரோனா வைரஸ் பரவலினால் கிட்டத்தட்ட கடந்த 3 வருடங்களாக நடத்தப்படாமல் இருந்துவந்த உலகின் மிக பெரும் ஆட்டோமொபைல் வாகன கண்காட்சியான ஜெனீவா மோட்டார் ஷோவின் 2024ஆம் ஆண்டிற்கான எடிசன் கடந்த பிப்ரவரி 26இல் இருந்து நடைபெற்று வருகிறது.

byd seal u showcased

மார்ச் 3ஆம் தேதி வரையில் நடத்தப்பட உள்ள இந்த கண்காட்சியில்தான் பிஒய்டி நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் காரை வெளியீடு செய்துள்ளது. பிஒய்டி நிறுவனத்தின் இந்த புதிய காரின் பெயர் சீல் யு (Seal U) ஆகும். சீனாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சீல் எலக்ட்ரிக் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக புதிய சீல் யு உள்ளது. ஆனால் சீல் எலக்ட்ரிக் கார் ஆனது ஓர் செடான் ரக கார் ஆகும். அதுவே, புதிய சீல் யு எஸ்யூவி ரகத்தில் பாடி-ஸ்டைலை கொண்ட எலக்ட்ரிக் கார் ஆகும்.

இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து எலக்ட்ரிக் கார்களை பிஒய்டி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. தற்போதைக்கு இவி6 மற்றும் அட்டோ 3 என இரு எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே பிஒய்டி நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில், விரைவில் 3வது எலக்ட்ரிக் காராக சீல் எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த பிஒய்டி தயாராகி வருகிறது.

byd seal u showcased

பிஒய்டி சீல் எலக்ட்ரிக் கார் மார்ச் 5ஆம் தேதியில் இந்திய அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் ரூ.1 லட்சம் முன்தொகை உடன் இந்தியாவில் ஏற்கனவே துவங்கிவிட்டன. பிஒய்டி சீல் விற்பனை கொண்டுவரப்படுவதால், தற்போது 2024 ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ள புதிய சீல் யு எலக்ட்ரிக் காரும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு நிறைய வாய்ப்புள்ளது.

புதிய பிஒய்டி சீல் யு ஆனது ப்ளக்-இன் ஹைப்ரீட் சிஸ்டத்தை கொண்ட எலக்ட்ரிக் கார் ஆகும். இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் பொருத்தப்பட்டுள்ள 87 kWh பேட்டரி பேக்கை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 500கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். இந்த காரின் முன்பக்கத்தில் இடம்பெற்றுள்ள U-வடிவ ஹெட்லைட்களை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள சீல் எலக்ட்ரிக் காரிலும் காணலாம்.

byd seal u showcased

புதிய சீல் யு எலக்ட்ரிக் காரில் 19 இன்ச்சில் ஏரோடைனாமிக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. காருக்கு உள்ளே பெரிய அளவில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது. இந்த சிஸ்டத்தின் மூலமாக கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறலாம். இந்த எலக்ட்ரிக் காரினுள் பல்வேறு வசதிகளை வெறும் வாய்ஸ் கமெண்ட் மூலமாகவே பெற முடியும். அத்துடன், டிரைவருக்கு தேவையான விபரங்கள் அனைத்தும் ரியல்-டைமில் கிடைக்கும்.

சீல் யு கார் 140 கிலோவாட்ஸ் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் திறனை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக வெறும் 28 நிமிடங்களில் காரின் பேட்டரியை 30%-இல் இருந்து 80% சார்ஜ் நிரப்பிவிட முடியும். இந்த எலக்ட்ரிக் காரில் மிக பெரிய எலக்ட்ரிக் பவர்டிரெயின் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு இருந்த சீல் யு எலக்ட்ரிக் கார் சோதனை முடிவில் முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது.

byd seal u showcased

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தோற்றத்தில் கிட்டத்தட்ட ஒரு மாதிரியாக இருந்தாலும், எஸ்யூவி பாடி-ஸ்டைலில் உருவாக்கப்பட்டதினால் புதிய சீல் யு எலக்ட்ரிக் கார் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கும். உலகிலேயே மிக பெரிய அளவில் 8-இன்-1 எலக்ட்ரிக் பவர்டிரெயின் சிஸ்டத்தை கொண்டதன் காரணமாகவே 2024 ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த புதிய பிஒய்டி எலக்ட்ரிக் கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 29, 2024, 8:00 [IST]
English summary
Byd seal u electric suv car showcased at 2024 geneva motor show
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X