எம்6 எம்பிவி கார் டீசர் வெளியீடு! இந்த காரில் குடும்பத்தோட டிராவல் செய்யலாம்.. 530 கிமீ ரேஞ்ச் வேற தரும்!
சீனாவைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி (BYD), இந்தியாவில் விரைவில் எலெக்ட்ரிக் கார் மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் டீசர் படத்தை வெளியிட்டு இருக்கின்றது. அந்த டீசரில் காரில் இடம் பெற இருக்கும் ஹெட்லைட்டின் படமே இடம் பிடித்திருக்கின்றது. மிகவும் கவர்ச்சியான அமைப்பையே அந்த லைட் கொண்டிருக்கின்றது. எனவே, பலரின் மனதில் இவ்வளவு அழகான ஹெட்லைட் எந்த கார் மாடலில் இடம்பெற இருக்கின்றது என்கிற கேள்வி தற்போது எழும்பி இருக்கின்றது.
பிஒய்டி நிறுவனம் இந்த அழகிய ஹெட்லைட்டை எம்6 (M6) எனும் கார் மாடலிலேயே பயன்படுத்த இருப்பது தெரிய வந்திருக்கின்றது. எம்6 எனும் இந்த பெயர் வேண்டுமானால் நமக்கு புதியதாக இருக்கலாம். ஆனால், இந்த கார் மாடல் ஏற்கனவே நமக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான் என்பது கவனிக்கத்தகுந்தது.

வேறு எந்த கார் மாடலும் இல்லைங்க, நிறுவனம் இப்போது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் இ6 (e6) எலெக்ட்ரிக் கார் மாடலின் புதிய தலைமுறை வெர்ஷனே இதுவாகும். இந்த இ6 எலெக்ட்ரிக் கார் மாடலைக் கொண்டே பிஒய்டி நிறுவனம் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் பிரிவில் அதன் கால் தடத்தைப் பதித்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.
மேலும், இந்த காரை அறிமுகப்படுத்தி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிலையிலேயே இ6-இன் அப்கிரேட் செய்யப்பட்ட வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் பிஒய்டி களமிறங்கி இருக்கின்றது. இ6 ஓர் எம்பிவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். அதிக நபர்களுடன் பயணிக்க ஏதுவான எலெக்ட்ரிக் கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது.

இதைப் போலவே 6 மற்றும் 7 இருக்கைகள் தேர்வில் இதன் அப்டேட் வெர்ஷனான எம்6 தயார் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே ஒன்று அல்லது இரண்டு குடும்பங்களுடன்கூட பயணிக்க உகந்த காராக இது இருக்கும் என தெரிகின்றது. இந்த கார் மாடல் ஏற்கனவே உலக சந்தையில் விற்பனையில் இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்தோனேசியாவிலேயே அது விற்பனையில் இருக்கின்றது. அங்கு மூன்று விதமான தேர்வுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கிறது. ஸ்டாண்டர்டு 7 சீட்டர், சுப்பீரியர் 7 சீட்டர் மற்றும் சுப்பீரியர் கேப்டைன் 6 சீட்டர் ஆகியவையே அவை ஆகும். இதே தேர்வுகளுடனேயே எம்6 எலெக்ட்ரிக் கார் இந்தியாவிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
புதிய எம்6 எலெக்ட்ரிக் எம்பிவி கார் இந்தியாவில் வருகின்ற அக்டோபர் மாதத்திற்குள் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிறுவனம் சமீபத்திலேயே அதன் சீல் செடான் ரக எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதுதவிர நிறுவனத்தின்கீழ் அட்டோ 3 எனும் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காரும் விற்பனைக்குக் கிடைக்கிறது.
இந்த நிலையிலேயே இப்போது விற்பனையில் இருக்கும் எம்பிவி ரக எலெக்ட்ரிக் காரான இ6 மாடலை அகற்றிவிட்டு அதன் அப்டேட் வெர்ஷனான எம்6 மாடலை அது விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெளிப்புறம் மற்றும் உட்புறம் என அனைத்திலும் இந்த காரில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
குறிப்பாக, புதிய முகப்பை இந்த கார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது வெளியாகி இருக்கும் டீசர் படம் அமைந்திருக்கின்றது. மேலும், புதிய மாற்றங்களினால் இ6 கூடுதல் கவர்ச்சியான கார் மாடலாக மாறியிருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க அதிக சிறப்பம்சங்களைத் தாங்கிய வாகனமாகவும் அது மாறியிருப்பது தெரிய வந்திருக்கின்றது.
அந்தவகையில், புதிய எம்6 எலெக்ட்ரிக் காரில் 12.8 அங்குல ஃப்ளோட்டிங் வகை தொடுதிரை, இரண்டு ஒயர்லெஸ் சார்ஜிங் பேட், புதிய ஸ்விட்ச் கியர், மெல்லிய டிரைவ் செலக்டர் கியர் மற்றும் பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல் ஆகியவையும் இந்த காரில் இடம் பெற இருப்பதாகக் கூறப்படுகின்றது.
தொடர்ந்து, எம்6 எம்பிவி எலெக்ட்ரிக் காரில் 55.4 kWh அல்லது 71.8 kWh ஆகிய பேட்டரி பேக் தேர்வுகளே எதிர்பார்க்கப்படுகின்றன. உலக சந்தையில் இந்த பேட்டரி பேக் தேர்விலேயே எம்6 விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 420 கிமீ முதல் 530 கிமீ வரையில் ரேஞ்ச் தரும். எனவே புதிய எம்6 இப்போது விற்பனையில் இருக்கும் இ6 மாடலைக் காட்டிலும் அதிக பிரீமியம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களைத் தாங்கியதாக இருக்கும் என தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் சொகுசு மற்றும் பிரீமியம் கார் விரும்பிகள் மத்தியில் பிஒய்டி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்த டிமாண்டான சூழலை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு பிஒய்டி எம்6 கார் மாடலை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








