சென்னை- கன்னியாகுமரி சிங்கிள் சார்ஜ்ல போகலாம்! சீன நிறுவனம் வெளியிடப்போகும் சூப்பரான கார்!

பிஒய்டி நிறுவனம் தற்போது அடுத்த மிகப்பெரிய அறிமுகத்திற்கு தயாராகியுள்ளது. அதன்படி இந்நிறுவனம் தனது சீல் என்ற எலெக்ட்ரிக் வாகனத்தை இந்தியாவில் வரும் மார்ச் மாதம் 5ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக அதிகாரப்பூர்வமற்ற புக்கிங் துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிஒய்டி சீல் கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பிஒய்டி நிறுவனம் தனது சீல் என்ற எலெக்ட்ரிக் காரை கடந்த ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகப்படுத்தியது. இந்த காரை 2023-ம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. இந்த காரை தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் வரும் மார்ச் மாதம் 5ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

byd to launch seal

இந்த பிஒய்டி கார் தற்போது இந்தியாவில் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருவதை நம்மால் காண முடிகிறது. பெரும்பாலும் மூடப்பட்ட நிலையில் இந்த கார் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்தக் காரை பிஒடி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதன் மூலம் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் மூன்றாவது காராக இது இருக்கப் போகிறது. இந்த பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் காருக்கான அதிகாரப்பூர்வமில்லாத புக்கிங் தற்போது துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

சர்வதேச மார்க்கெட்டில் இரண்டு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன. மேலும் இந்த கார் மார்க்கெட்டில் உள்ள கியா இவி 6 மற்றும் ஹுண்டாய் அயானிக்5 ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் என தெரிகிறது. மேலும் விரைவில் வரவுள்ள ஹூண்டாய் அயானிக் 6 காருக்கும் இந்த கார் கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹூண்டாய் அயானிக்6 கார் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

byd to launch seal

சீல் எலெக்ட்ரிக் காரில் மற்றும் இரண்டு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன. இதில் சிறிய பேட்டரி பேக்காக 61.2கிலோவாட்ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்படுகிறது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பெரிய பேட்டரி பேக்காக 82.5 கிலோவாட்ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார் செய்தால் 700 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பேட்டரி பேக் எல்லாம் பிளேடு பேட்டரி பேக்காக இருப்பதால் சிறிய ரக பேட்டரி பேக்கை சார்ஜ் செய்ய 110 கிலோ வாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் பெரிய பேட்டரி சார்ஜ் செய்ய 150 கிலோ வாட் சார்ஜிங் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது. இந்த காரில் இரண்டு விதமான பவர் டெரையின் உள்ளன. சிங்கிள் மோட்டார் செட்டப் மற்றும் டூயல் மோட்டார் செட்டப் என இவை பிரித்து வழங்கப்படுகிறது.

இதில் சிறிய ரக பேட்டரி பேக்கில் சிங்கிள் மற்றும் டூயல் என இரண்டு மோட்டார் செட்டப்களும் பெரிய பேட்டரி பேக்கில் டூயல் மோட்டார் செட்டப் மட்டும் ஆப்ஷனாக இருக்கிறது. இதன் இந்தியன் வேரியன்டிற்கு வரும்போது டூயல் மோட்டார் செட்டப் உடன் ஆல் வீல் டிரைவ் செட்டப் பொருத்தப்பட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பவரை பொருத்தவரை 530 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிஒய்டி சீல் கார் 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.8 நொடியில் கடந்து விடும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதன் அளவுகளை பொருத்தவரை இந்த கார் 4800 மிமீ நீளமும் 1875 மிமீ அகலமும் 1460 மிமீ உயரமும் 2920 மிமீ வீல் பேஸூம் கொண்டதாக இருக்கிறது. இதன் டிசைனை பொருத்தவரை ஓசன் அஸ்தட்டிக் டிசைனில் இருக்கிறது.

கடலில் கடல் சிங்கம் எப்படி இருக்குமோ அதேபோல இந்த கார் நிலத்தில் இருக்கும் என்பதை குறிப்பதற்காகவே இந்த காருக்கு சீல் (கடல்சிங்கம்) என அந்நிறுவனம் பெயர் வைத்துள்ளது. இது மட்டுமல்ல இந்த காரின் உட்புறம் 15.6 இன்ச் ரோடேட்டிங் இன்ஃபோடைமெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இது ஹெட்ஸ்அப் டிஸ்ப்ளே ஆப்ஷனுடன் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மெல்ல மெல்ல தனது காலடித்தடத்தை எடுத்து வைத்து தனது கார்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வரும் நிலையில் தற்போது தனது சீல் என்ற காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த காரின் விலை குறித்த விபரங்கள் எல்லாம் மார்ச் மாதம் தான் வெளியாகும் என்றாலும் தற்போது உள்ள கணிப்பின்படி இந்த கார் ரூ50 லட்சத்திற்கும் அதிகமான விலை தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 15, 2024, 13:18 [IST]
English summary
Byd to launch seal ev on march 5 in india unofficial booking opens
மேலும்... #பிஒய்டி #byd
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+