பாட்டு தகுந்த மாதிரி இந்த கார் டான்ஸ் ஆடும்! பிஒய்டியின் முதல் எலெக்ட்ரிக் சூப்பர் கார் இதோ!
பிஒய்டி நிறுவனம் தனது யங்குவாங் நிறுவனத்தின் யூ9 என்ற எலக்ட்ரிக் சூப்பர் காரை சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் முழுமையாக எலெக்ட்ரிக்கில் இயங்கும் அதிக பெர்ஃபார்மன்ஸ் கொண்ட காராகும். இந்த காரில் உள்ள அம்சங்கள் என்ன? இந்த காரின் அதிகபட்ச வேகம் எவ்வளவு? இந்த காரின் விலை என்ன? என்ற அனைத்து விரிவான தகவல்களையும் காணலாம் வாருங்கள்.
உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தனது முதல் முழு எலெக்ட்ரிக் சூப்பர் காரை தயாரித்து அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது அதன் யங்குவாங் என்ற பெயரில் இயங்கி வரும் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள காராகும். இந்த காருக்கு நிறுவனம் யூ9 என பெயர் வைத்துள்ளது.

இந்த காரின் விலையை பொருத்தவரை சீனாவில் 1.68மில்லியன் சீனயுவான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூபாய்1.93 கோடியாகும். இந்த யூ9 என்ற கார் தெருக்களிலும் அதே நேரத்தில் டிராக்கிலும் ஓட்டும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் இ4 என்ற பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட காராகவும், இந்த பிளாட்பார்ம் நான்கு எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட நான்கு வீல்களுக்கும் தனித்தனியாக கண்ட்ரோல் கொண்ட காராக இந்த யூ9 காரை உருவாக்க உதவுகிறது.
இந்த காரின் பவரை பொருத்தவரை 1300எச்பி பவரும், டார்க்கை பொறுத்தவரை 1680என்எம் டார்க் திறனும் கொண்ட காராக இருக்கிறது. இந்த கார் மியூசிக்கிற்கு தகுந்தார் போல் டான்ஸ் ஆடும் வகையில் அம்சம் கொண்ட காராக இருக்கிறது. இந்த கார் 0 -100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.6 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக இருக்கிறது. அதிகபட்சமாக 39.19கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.

இந்த கார் முதல் 400 மீட்டரை கடக்க 9.78 நொடிகள் எடுத்துக் கொள்கிறது. இந்த காரில் உள்ள பேட்டரியை பராமரிக்க தெர்மல் மேனேஜ்மென்ட் சிஸ்டம் இருக்கிறது. இது அதிக வெப்பமாகாமல் பேட்டரியை பாதுகாக்கிறது. இதனால் அதிகமான கூலிங் கெபாசிட்டி இந்த காரில் இருக்கிறது. காரின் பேட்டரியை பொருத்தவரை பிரேம் பிளேடு பேட்டரி தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இது டூயல் பிளக்கின் அல்ட்ரா பாஸ்ட் சார்ஜர் தொழில்நுட்பத்தை கொண்ட பேட்டரியாக இருக்கிறது.
இந்தக் காரின் கேபினை பொருத்தவரை கார்பன் பைபர் ஃப்னிஷில் இருக்கிறது. சிடிபி என்ற அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தில் இதன் கேபின்கள் எல்லாம் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் குறைந்த எடையில் இந்த கேபின்கள் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அதிக வலுவை தாங்கும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது. 11 டன் வரை லோடை தாங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள சீட்டுகளை பொறுத்தவரை 14 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சீட்டுகளாக உள்ளன. மேலும் இது ஆடியோ சிஸ்டத்தை பொறுத்தவரை டைநாடியோ எவிடன்ஸ் சீரியஸ் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த காரின் கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்தவரை டீலிங் 150 இன்டெலிஜென்ட் பிளாட்பார்ம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது 4என்எம் 5ஜி சிப்பை கொண்ட காராக இருக்கிறது.
இந்த காரை டிராக்கில் ஓட்டும் போது பயன்படுத்துவதற்காக இன்டெலிஜென்ட் ரேசிங் அசிஸ்டன்ட் சிஸ்டம் இருக்கிறது. இது சீனாவில் உள்ள 30 ரேஸ் டிராக்குகள் குறித்த விரிவான தகவல்களை கொண்ட காராக இருக்கும். இதனால் இந்த காரை வைத்து ரேஸ் ஓட்ட முயற்சி செய்பவர்களுக்கு பல தகவல்களை காரில் உள்ளே இருந்தே பெற்றுக் கொள்ள முடியும். இதனால் ரேஸில் கவனமாக செயல்பட முடியும்.
நாம் முன்னரே சொன்னபடி இந்த கார் ரூ1.93 கோடி என்ற நிலையில் சீனாவில் அறிமுகமாகி விற்பனையாகி வருகிறது. இந்த காரை இந்தியாவில் வாங்க வேண்டும் என்றால் அதற்கான வழிமுறை 100% இறக்குமதி வரி கட்ட செலுத்த வேண்டும். அப்படி என்றால் இந்த கார் இந்தியாவிற்கு வரும்போது ரூபாய் 4 கோடி வரையில் செலவு செய்ய வேண்டியது இருக்கும். அதனால் இந்தியாவில் யாரும் இந்த காரை வாங்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஒய்டி நிறுவனம் சீனாவில் மிகப்பெரிய நிறுவனம் என்பதால் அங்கு மிகப்பெரிய எலெக்ட்ரிக் கார்களை அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட கார்களை எல்லாம் களமிறக்கி வருகிறது. அந்த வகையில் இந்த காரும் களமிறங்கியுள்ளது. இது சீனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியர்களுக்கு இப்படி ஒரு கார் இந்தியாவிற்கு வராதா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications









