2 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்களை ஒரே ஆளா வாங்கறாங்க! இவ்ளோ பெரிய பல்க் ஆர்டரை தூக்கி கொடுத்தது அவங்களா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று சிட்ரோன் இசி3 (Citroen e-C3). இது ஒரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். பொதுமக்கள் மட்டுமல்லாது, வாடகைக்கு கார்களை வழங்கும் கேப் (Cab) நிறுவனங்கள் மத்தியிலும், சிட்ரோன் இசி3 மிகவும் பிரபலமாக திகழ்கிறது. இதற்கு ப்ளூஸ்மார்ட் (BluSmart) நிறுவனம் ஒரு உதாரணமாகும். இந்த நிறுவனம் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு, 4 ஆயிரம் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.

இந்த வரிசையில் மற்றொரு முன்னணி நிறுவனம் ஒன்று 2 ஆயிரம் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்களை வாங்க முன்வந்துள்ளது. அது கேப்-இ (Cab-E) நிறுவனம் ஆகும். 2 ஆயிரம் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில், கேப்-இ நிறுவனம் தற்போது கையெழுத்திட்டுள்ளது.

Cab-E To Add 2 000 Citroen e-C3 EVs

இந்த 2 ஆயிரம் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்களும், மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில், வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகப்பெரிய ஆர்டர் என்பதால், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்திய சந்தையில் கிடைக்க கூடிய விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று என சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரை குறிப்பிடலாம்.

தற்போதைய நிலையில் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 11.61 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.41 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

Citroen e-C3 EV

சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரில், 29.2kWh பேட்டரி ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 320 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) ஆகும்.

டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்புவதற்கு வெறும் 57 நிமிடங்கள் மட்டுமே ஆகும். அதாவது 1 மணி நேரத்திற்கு உள்ளாகவே போதுமான அளவிற்கு சார்ஜ் செய்து விட முடியும்.

சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரில், அதிநவீன வசதிகளுக்கும் (Features) பஞ்சமில்லை. இதில், 10.2 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

பாதுகாப்பை பொறுத்தவரையில், ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. இது போன்ற காரணங்களால்தான், கேப் நிறுவனங்கள் மத்தியில் சிட்ரோன் இசி3 வேகமாக பிரபலமடைந்து கொண்டே வருகிறது. வரும் காலங்களில் பெரு நகரங்களின் சாலைகளில், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்களை அதிகளவில் காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, இந்திய சந்தையில் கிடைக்க கூடிய விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரை குறிப்பிட முடியும். டாடா பன்ச் இவி (Tata Punch EV) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு, இது மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 11, 2024, 13:43 [IST]
English summary
Cab e to add 2000 citroen e c3 evs full details
மேலும்... #citroen #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+