காலண்டர்ல தேதியை குறிச்சு வச்சுக்கோங்க! இந்த மாசம் இவ்வளவு கார், பைக் வரப்போகுதா?

இன்று ஜூன் மாதம் துவங்கி விட்ட நிலையில் 2024ம் ஆண்டு மத்தியில் நாம் இருக்கிறோம். வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல 2024ம் ஆண்டு மத்தியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள வாகனங்கள் எல்லாம் இந்த மாதம் முதல் அறிமுகமாக துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மாதம் இரண்டு கார் மற்றும் ஒரு பைக்கை அறிமுகப்படுத்தப் போவது தற்போதைய உறுதியாகி உள்ளது. மக்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்த வாகனமாக இது இருக்கிறது. என்னென்ன கார்கள்? என்ன பைக் அறிமுகமாக போகிறது என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா அல்ட்ராஸ் ரேஸர்: டாடா நிறுவனம் தனது அல்ட்ராஸ் காரின் அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட காராக அல்ட்ராஸ் என்ற காரை இந்த மாதம் அறிமுகப்படுத்துகிறது. அதன்படி இந்த கார் வரும் 13ம் தேதி அறிமுகமாகிறது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது.

Car amp amp Bike Launches In June 2024

இதே இன்ஜின் தான் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் காரிலும் பொருத்தப்படுகிறது. இந்த இஞ்சின் 120 பிஎஸ் பவரையும் 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. வெளிப்புறத்திலும், உள்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது ரேஸர் கார் என்பதால் அதற்கு தகுந்தார் போல் டிசைன் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

கூடுதலாக இந்த காரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை முன்பக்க பயணிகளுக்கான வெண்டிலேட்டட் சீட்டுகள், வயர்லெஸ் சார்ஜிங் ஃபெசிலிட்டி, புரொஜெக்டர் எல்இடி ஹெட் லைட், எல்இடி டிஆர்எல் பின்பக்க ஏசி வென்ட்கள், 10.25இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வயர்லெஸ், ஆப்பிள் கார் பிளே, மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டியுடன் வருகிறது. இது போக 6 ஏர் பேக்குகள், ஹெட்சப் டிஸ்ப்ளே 360டிகிரி கேமரா எலெக்ட்ரானிக் சன்ரூஃப் ஆப்ஷன்கள் உள்ளன.

Car amp amp Bike Launches In June 2024

ஆடி க்யூ8 ஃபேஸ்லிஃப்ட்: ஆடி நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் தனது க்யூ 8 காரை அப்டேட் செய்து சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியிருந்த நிலையில் ,இந்த கார் தற்போது இந்தியாவிற்கு வருவதற்கு தயாராகியுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட க்யூ8 கார் முன்பக்கம் தனித்துவமான கிரில் அமைப்பு, அப்டேட் செய்யப்பட்ட பம்பர்கள், புதிய வடிவமைப்பில் உள்ள அலாய் வீல்கள், உட்புறம் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டிசைன் உடன் இந்த கார் விற்பனைக்கு வருகிறது.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 48 ஓல்ட் ஹைபிரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 340 பிஎஸ் பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் இந்த கார் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் ,தேதி குறித்த விபரங்கள் தெளிவாக வெளியிடவில்லை.

Car amp amp Bike Launches In June 2024

பஜாஜ் புரூஸர் அல்லது பைட்டர் : இந்திய ஆட்டோமொபைல் துறையிலேயே முதன்முறையாக சிஎன்ஜி பொருத்தப்பட்ட பைக்கை பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதற்கான அறிமுக தேதியும் தற்போது உறுதியாக உள்ளது. வரும் 18ஆம் தேதி பஜாஜ் நிறுவனம் தனது சிஎன்ஜி பைக்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துகிறது.

இந்த பைக் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சிறப்பான விற்பனையை பெறும் என்ற எதிர்பார்ப்பில் அறிமுகமாகிறது. இதனால் குறைந்த விலையில் இந்த பைக் அறிமுகமாக வாய்ப்புள்ளது. ரூபாய் 85 ஆயிரம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த பைக் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் ஒரே நேரத்தில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

பஜாஜ் நிறுவனம் இந்த பைக்கிற்க்கு 125சிசி இன்ஜினை பொருத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்ப்பதற்கு வழக்கமான பைக் போல இருந்தாலும் இந்த பைக் சிஎன்ஜியில் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக அதிக மைலேஜ் தரும் வகையில் இந்த பைக் உருவாக்கப்படலாம். இந்த பைக்கின் பெயரை பொருத்தவரை புரூஸர் என சிலர் கூறுகிறார்கள், பைட்டர் என சிலர் கூறுகிறார்கள். அறிமுகத்தின் போது தான் பெயர் உறுதியாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஜூன் மாதம் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பல தயாரிப்புகள் ஜூன் மாதம் தான் அறிமுகம் ஆகிறதா என்ற உறுதியான தகவல் வெளியாகவில்லை. இந்த மூன்று வாகனங்களும் நிச்சயம் இந்த ஜூன் மாதம் அறிமுகமாகிறது. இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள வாகனங்கள் எல்லாம் வரிசையாக அறிமுகமாக துவங்கிவிடும்

More from DriveSpark

Article Published On: Saturday, June 1, 2024, 12:19 [IST]
English summary
Car bike launches june 2024 india new vehicle releases
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X