விற்காமல் ஸ்டாக்கில் இருக்கும் 4 லட்சம் கார்கள்! எல்லாத்துக்கும் இந்த விஷயம் தான் காரணமா?

இந்தியா முழுவதும் 4 லட்சம் கார்கள் விற்காமல் ஸ்டாக்கில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது திடீர் மந்தத்தை சந்தித்துள்ளது. இதனால் தயாரிக்கப்பட்ட பல கார்கள் விற்காமல் டீலர்களிடமும் வாகனம் தயாரிப்பாளர்களிடமும் ஸ்டாக்கில் இருக்கிறது. ஸ்டாக்கில் இருக்கும் கார்களை எப்படி விற்பது என்று தெரியாமல் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் திணறி வருகின்றன. கார் விற்பனை சரீவிற்கு பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பொதுவாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாகனங்களை தயாரித்து ஸ்டாக் வைத்துக் கொள்ளும். அப்பொழுதுதான் வாடிக்கையாளர்கள் வந்து வாகனங்களை வாங்க நினைக்கும் போது உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களை கொடுக்க முடியும். இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்களில் தங்கள் கொள்ளளவு படி குறிப்பிட்ட காலத்திற்கு புக்கிங் வந்தாலும் வராவிட்டாலும் கார்களை தொடர்ந்து தயாரித்துக் கொண்டே இருக்கும்.

car inventory increase

சில குறிப்பிட்ட கார்கள் மக்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் இருந்தால் எவ்வளவு கார் தயாரிக்கப்படுகிறதோ அதே அளவிற்கு விற்பனையும் இருக்கும். இதனால் கார் தயாராக தயாராக விற்பனைக்கு சென்று கொண்டே இருக்கும். சில கார்கள் தயாராவதையும் தாண்டி புக்கிங் அதிகமாகிக் கொண்டிருக்கும். ஆனால் வெகு சில கார்கள் தயாரிப்பாளர்களை விட விற்பனை அளவில் குறைவாக இருப்பதால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட கார்களை தயாரித்து ஸ்டாக்கில் வைத்திருப்பார்கள்.

இது வழக்கமாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் செய்யும் ஒரு நடவடிக்கை தான். இந்நிலையில் தற்போது இந்தியாவில் இப்படியாக ஸ்டாக் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தொட்டுள்ளதாக சமீபத்தில் வெளியான தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. சமீப காலங்களில் அதிக அளவிலான வாகனங்கள் ஸ்டாக்கில் இருப்பது இதுதான் முதல் முறை.

car inventory increase

கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த அளவிலான வாகன ஸ்டாக் என்பது வாகன தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்ததில்லை. கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் இதே அளவிலான ஸ்டாக் வாகன தயாரிப்பில் நிறுவனங்களிடம் இருந்தது அதன் பிறகு மக்கள் மத்தியில் வாகனங்களுக்கான தேவை அதிகரித்த நிலையில், விற்பனை படு ஜோராக இருந்தது. இதனால் வாகனங்கள் ஸ்டாக்கில் வரவர விற்று திரிந்து கொண்டிருந்தன.

இந்நிலையில் சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் 4 லட்சம் கார்களுக்கு மேல் ஸ்டாக்காகி உள்ளது. குறிப்பாக இந்த மே மாதம் வாகன விற்பனை என்பது மிகக் குறைவாக இருந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு மே மாத விற்பனையை ஒப்பிடும்போது இந்த மாதம் 5% வரை விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

car inventory increase

இந்த விற்பனை சரிவிற்கு பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக இந்தியாவில் தற்போது பொது தேர்தல் நடந்து வருவதால் பல்வேறு இடங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கிறது. இதனால் பணப்புழக்கத்தை தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது. இந்த காலத்தில் மக்கள் அதிக விலை கொடுத்து கார் வாங்க யோசனை செய்து வருகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெயில் மற்றும் மழை ஆகியவை மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. சரியான சீர்தோஷன நிலை இல்லாததால் மக்கள் மத்தியில் பணப்புழக்கம் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாகவும் கார் விற்பனை மந்தமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பொதுவாக திருமண சீசன் காலங்களில் கார்களின் விற்பனை அதிக அளவில் இருக்கும். தற்போது இந்தியாவில் திருமண சீசன்களும் குறைவாக இருப்பதால் பெரிய அளவில் கார் விற்பனையாகவில்லை என கூறப்படுகிறது. இப்படியாக பல்வேறு காரணங்கள் ஒரே காலகட்டத்திற்குள் அமைந்ததால் இந்த காலகட்டத்தில் கார் விற்பனை என்பது சரீவை சந்தித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதன் காரணமாக இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சில தங்கள் தயாரிப்பு அளவை குறைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளன. சில குறிப்பிட்ட கார்களின் தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இருக்கும் ஸ்டாக்குகள் விற்கும் டிரெண்டை பொறுத்து அடுத்து தயாரிப்பை துவங்க யோசனை செய்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 30, 2024, 22:21 [IST]
English summary
Car inventory increase may 2024 demand decrease
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X