ஏப்.1ம் தேதிக்கு பிறகு கிடுகிடுன்னு விலை ஏறப்போகுது! இப்பவே புக் பண்ணா விலை கம்மி தான்!

கியா,ஹோண்டா உள்ளிட்ட சில கார் தயாரிப்பு நிறுவனங்கள் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தனது வாகனங்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. புதிய நிதியாண்டில் நிறுவனங்கள் தங்களது வருமானத்தை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதால் இந்த விளைவு வியர்வை அறிவித்துள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இன்னும் ஓரிரு நாளில் 2024-2025-ம் தேதி ஆண்டு துவங்கப்படும் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் இந்த நிதியாண்டில் தங்களது விற்பனை இலக்கை நிர்ணயம் செய்து அதற்கான திட்டங்களை செயல்படுத்த துவங்கி விட்டனர். இந்நிலையில் இந்த நிதியாண்டில் பல நிறுவனங்கள் தங்கள் பற்றாக்குறையை போக்கவும் வருமானத்தை பெருக்கவும் தனது வாகனங்களுக்கான விளைவு வியர்வை அறிவித்துள்ளன.

car price hike from april 1

கியா,ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்கள் வாகன விலையை அறிவித்துள்ள நிலையில், ஒவ்வொரு நிறுவனமும் எப்படியான விலை உயர்வை அறிவித்துள்ளது. இதனால் வாகனங்களின் விலை எவ்வளவு அதிகமாக வாய்ப்புகள் உள்ளது. இதனால் தற்போது கார் வாங்குவதை விட இனி கார் வாங்க எவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டும் என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.

கியா நிறுவனம் தனது வாகனங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதன்படி சோனட், செல் டோஸ், கேர்ன்ஸ் ஆகிய கார்களின் விலை உயர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த கார்களின் விலை எல்லாம் மூன்று சதவீதம் வரை உயர்த்தப்பட அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் ஏப்ரல் மாதம் முதல் இந்த கார்களின் விலை உயரும் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

car price hike from april 1

கியா நிறுவனம் வாகன தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை ஏற்றம் கார்கள் தயாரிப்புக்கு தேவையான பொருட்களுக்கான செலவுகள் அதிகரிப்பு, தயாரிக்கப்பட்ட கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதில் உள்ள சவால்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

கியா நிறுவனத்திடம் தற்போது நான்கு மாடல் கார்கள் உள்ளன. அதில் முக்கியமாக இவி 6 என்ற முழுமையாக கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் காரும் இருக்கிறது. ரூபாய் 7.9 லட்சம் முதல் ரூபாய் 65.95 லட்சம் வரை இந்த கார்கள் விற்பனையாகி வருகின்றன.

car price hike from april 1

ஹோண்டா: ஹோண்டா நிறுவனமும் இந்த ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு தனது வாகனங்களின் விலையை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை எவ்வளவு சதவீதமான விளைவு ஏற்பு இருக்கும் என இந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்து கார்களிலும் இந்த விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக இந்நிறுவனம் வெளியிடும் அமேஸ், சிட்டி மற்றும் எலவேட் ஆகிய கார்களுக்கு விலை உயர்வு அறிவிக்கப்பட உள்ளது. தற்போது ஹோண்டா நிறுவனத்திடம் ரூபாய் 7.16 லட்சம் முதல் ரூபாய் 20.39 லட்சம் என்ற விலையில் கார்கள் எல்லாம் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில் இந்த விலை உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எல்லாம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் இன்னும் சில நிறுவனங்களும் வரும் ஏப்ரல் 1ம் தேதி பிறகு வாகனங்களின் விலையை உயர்த்தி அறிவிக்க திட்டமிட்டு வருகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் நிறுவனங்கள் வெளியிட உள்ளேன் என்பதால் இது குறித்து உறுதியான தகவலை நாம் தெரிவிக்க முடியாது. ஆனால் ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு வரிசையாக பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விலை உயர்வு குறித்து அறிவிக்க போகின்றன என்பது உறுதியாகிறது.

இதனால் நீங்கள் வாகனம் வாங்கும் எண்ணத்தில் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஷோரூமுக்கு சென்று நீங்கள் விரும்பும் வாகனத்தை புக்கிங் செய்தால் தற்போது உள்ள விலையிலேயே உங்களுக்கு வாகனம் கிடைக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இதை நீங்கள் ஷோரூமில் வாகனங்களை புக் செய்யும்போது ஷோரூம் ஊழியர்களிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும். விலை உயர்வு அறிவிப்பு வெளியானால் அதன் பிறகு குறைந்த விலையில் வாகனங்களை புக் செய்ய முடியாது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாகனங்களில் விலையை உயர்த்துவது என்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக இருக்கிறது. இன்றைய போட்டி நிலவரம் அதிகமாக இருந்தாலும் வாகனங்களை தயாரிப்பதற்கான செலவினங்கள் என்பது அதிகமாக இருக்கிறது. இதனால் வாகனம் வாங்கும் ஐடியாவில் இருந்தால் இப்பொழுதே ஷோரூமுக்கு சென்று உங்களுக்கான வாகனத்தை புக் செய்து கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 30, 2024, 10:36 [IST]
English summary
Car price hike april key details kia honda others
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X