இந்தியாலதான் இது ஏழைகளின் கார்.. பாகிஸ்தான்ல இதுதான் பணக்காரர்களின் கார்.. அந்த அளவுக்கு அதிக விலை!
இந்தியாவில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மிக மிக விலை குறைவான கார் மாடலாக ஆல்டோ (Alto) இருக்கின்றது. இதன் ஆரம்ப நிலை தேர்வை எக்ஸ்-ஷோரூமில் ரூ. 4 லட்த்திற்கே வாங்கிக் கொள்ள முடியும். இந்த அளவிற்கே மலிவான விலையில் இந்த கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இதே கார் மாடல் பாகிஸ்தானில் மிக மிக உயரிய விலையில் விற்கப்படுவதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் இந்த கார் 23 லட்சத்திற்கும் அதிகமான விலையிலேயே விற்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.
இது இந்திய ரூபாயில் தோராயமாக 6.91 லட்சத்திற்கு சமம் ஆகும். இந்த அளவிற்கு அதிக விலையிலேயே மாருதி சுஸுகி ஆல்டோ பாகிஸ்தானில் விற்கப்படுகின்றது. இந்த தகவல் பலருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. சாலை வரி, இன்சூரன்ஸ் என பிற கட்டணங்களைச் சேர்த்தால் இதன் விலையில் மேலும் சில லட்சங்கள் வந்து ஒட்டிக் கொள்ளும் என்பது கவனிக்கத்தகுந்தது.

குறிப்பு: படம் உதாரணத்திற்காக வழங்கப்பட்டது. எனவே, பாகிஸ்தானில் பணக்காரர்களால் மட்டுமே மாருதி காரைகூட வாங்க முடியும் என்கிற மாதிரியான சூழலே தற்போது நிலவுகின்றது. ஆல்டோ மட்டுமில்லைங்க மற்ற கார் மாடல்களின் விலையும் அந்நாட்டில் மிகவும் காஸ்ட்லியாகவே உள்ளது. அந்தவகையில், இந்தியாவில் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக விளங்கிக் கொண்டிருக்கும் மாருதி சுஸுகி வேகன்ஆர்கூட பாகிஸ்தானில் காஸ்ட்லியான காராகவே காட்சியளிக்கின்றது.
அந்நாட்டு ரூபாய் மதிப்பில் 32 லட்சத்திற்கு (இந்திய ரூபாய் மதிப்பில் 9.62 லட்சத்திற்கு) அது விற்கப்படுகின்றது. ஆனால், இந்தியாவில் இதே கார் மாடலின் விலை ரூ. 5.55 லட்சம் மட்டுமே ஆகும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்-ம் பாகிஸ்தானில் அதிக விலையிலேயே விற்கப்படுகின்றது.
அது அந்நாட்டு ரூபாய் மதிப்பில் 38 லட்சத்திற்கும் (இந்திய ரூபாய் மதிப்பில் 11.42 லட்சத்திற்கு) அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. உச்சபட்சமாக டொயோட்டா ஃபார்ச்சூனர் 1.45 கோடி பாகிஸ்தான் ரூபாய்க்கு (இந்திய ரூபாய் மதிப்பில் 43.6 லட்சத்திற்கு) விற்கப்படுகின்றது. இது அதிர்ச்சியின் உச்சமாக பார்க்கப்படுகின்றது.
இந்த அளவிற்கு பாகிஸ்தானில் கார்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அதிக விலையில் விற்கப்படுகின்றன. பாகிஸ்தானின் இந்த நிலைக்கு அந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சியே காரணமாக உள்ளது. பணவீக்கம், அந்நிய செலாவணி அதிகரிப்பு என பல்வேறு சிக்கல்களில் பாகிஸ்தான் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றது. மேலும், இந்த காரணிகளால் பாகிஸ்தான் ஆட்டோமொபைல் துறையும் குறிப்பிடத்தக்க தாக்கத்திற்கு ஆளாகி இருக்கின்றது.
இதன் விளைவாக வாகனங்களின் விலை பலமடங்கு உயர்ந்திருக்கின்றது. மேலும், விலை உயர்வின் எதிரொலியாக வாகன விற்பனை மிகப் பெரிய வீழ்ச்சியை அந்நாட்டில் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக ஒரு சில கார் உற்பத்தியாளர்கள் தங்களின் விற்பனையை பின் வாங்கத் தொடங்கி இருக்கின்றன. அதாவது, உற்பத்தி ஆலைகளை மூடுதல் போன்ற கடுமையான முடிவுகளையே சில நிறுவனங்கள் எடுத்து வருகின்றன.
எனவே இந்த நிலை எப்போது மாறும் என்பதே பலரின் கேள்வியாக இருக்கின்றது. பாகிஸ்தான் இத்தகைய கடுமையான சிக்கியிருக்க, இந்தியாவிலோ மாதத்திற்கு மாதம் கார்களின் விற்பனை வளர்ச்சியடைந்துக் கொண்டே வருகின்றது. குறிப்பாக, சொகுசு கார்கள் பிரிவும் மிகப் பெரிய வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாகிஸ்தானின் கவலைக்கிடமான நிலையை பார்த்து பலர் வேதனைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். எதிரி நாடாக இருந்தாலும், இந்த நிலையில் இருந்து அவர்கள் மீள வேண்டும் என்பதே பலரின் வேண்டுதலாக இருக்கின்றது. இந்தியாவில் இப்போது பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டாடா பஞ்ச் உள்ளிட்டவை உருவெடுத்துக் கொண்டிருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








