வரலாற்றிலேயே இல்லாத சாதனையை படைத்த இந்தியா! 2023ல் விற்பனையான கார்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு கடந்த 2023 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. முக்கியமாக கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. இது குறித்து தரவுகள் எல்லாம் தற்போது நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இப்படியாக அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனையாக காரணம் என்ன என்ற விரிவான விபரங்களை எல்லாம் காணலாம் பாருங்கள்.

இந்தியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு அடுத்தடுத்து வந்த பண்டிகை காலங்கள், மீண்டு வந்த பொருளாதாரம் மற்றும் சர்வதேச அளவில் செமி கண்டெக்டர் சப்ளை உயர்ந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவில் வாகன விற்பனை என்பது அதிகமாகியுள்ளது அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டு மொத்தம் 41 லட்சம் வாகனங்கள் விற்பனையாக இருந்தது. முதன்முறையாக இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனையான ஆண்டு இந்த 2023 தான்.

car sales in 2023

இது கடந்த 2022 ஆம் ஆண்டு விற்பனையான 37.9 லட்சம் என்ற வாகன எண்ணிக்கையை ஒப்பிடும்போது 8.3 சதவீதம் அதிகமாகும். 2023 ஆம் ஆண்டு இருப்பதிலேயே அதிக எண்ணிக்கையிலான வாகனத்தை விற்பனை செய்தது மாருதி சுஸூகி நிறுவனம் தான். இந்நிறுவனம் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் வாகனத்தை விற்பனை செய்துள்ளது. அந்நிறுவனத்திற்கும் இந்தாண்டு விற்பனை தான் மிக உச்சபட்ச விற்பனையாக இருக்கிறது.

மாருதி நிறுவனம் மொத்தம் 2,69,046 வாகனங்களை கடந்த ஆண்டு ஏற்றுமதிக்காக விற்பனை செய்துள்ளது. உள்நாட்டு விற்பனை 20 லட்சத்தையும் தாண்டுகிறது. கடந்த டிசம்பர் மாதம் மட்டும்தான் இந்நிறுவனம் 5.86% விற்பனை சரிவை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்த 2023 ஆம் ஆண்டு கணக்கிடும்போது இந்நிறுவனம் தான் சிறப்பான அளவில் வாகனங்களை விற்பனை செய்து முதலிடத்தில் இருக்கிறது.

car sales in 2023

இதைத் தொடர்ந்து ஹுண்டாய் மற்றும் டாடா நிறுவனங்கள் இருக்கின்றன. ஹூண்டாய் நிறுவனம் மொத்தமாக 7,65,786 வாகனங்களை கடந்த 2023-ம் ஆண்டு விற்பனை செய்துள்ளது. டாடா நிறுவனத்தை பொருத்தவரை 7,00, 811 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. டாடா நிறுவனத்தில் நெக்ஸான் மற்றும் பஞ்ச் ஆகிய கார்களின் விற்பனை தான் அதிகமாக இருந்துள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களை பொருத்தவரை டாடா நிறுவனம் தான் அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்துள்ளன. ஒட்டுமொத்த விற்பனையில் மஹிந்திரா நிறுவனம் 4வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 33,77 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு நிறுவனம் 2,59,858 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஒரே ஆண்டில் 35,174 வாகனங்கள் அதிகமாக விற்பனை செய்து 24 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

car sales in 2023

அடுத்ததாக டொயோட்டா நிறுவனம் இருக்கிறது இந்நிறுவனம் உரையாடல் 46 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது இந்நிறுவனம் மொத்தம் 2,33,346 வாகனங்களை கடந்த 2023-ம் ஆண்டு விற்பனை செய்துள்ளது. இன்னோவா ஹை கிராஸின் வருகை அப்டேட் செய்யப்பட்ட இன்னோவா கிரைஸ்டா, அர்பன் குரூஸர் ஹைரைடர், கிளான்ஸா ஆகிய கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன.

ஹோண்டா நிறுவனம் இருக்கிறது இந்நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் 12 சதவீத விற்பனையை வளர்ச்சியை பெற்றுள்ளது. மொத்தமாக 7902 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அடுத்து எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு மொத்தமாக 56,902 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இப்படியாக இந்தியாவில் மொத்தம் 40 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் கடந்த 2023-ம் ஆண்டு விற்பனை ஆகியுள்ளது.

car sales in 2023

இந்தியா என்பது தற்போது உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக மாறியுள்ளது. அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து மூன்றாவது இடத்திற்கு இந்தியா வந்துள்ளது. இந்தியாவில் உள்ள அதிக மக்கள் தொகை காரணமாக இந்தியாவில் தற்போது கார் வாங்கும் நிலையில் உள்ள மக்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இதனால் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனையாகி வருகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2023-ம் ஆண்டு விழா 2024-ம் ஆண்டு இன்னும் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதிய வாகனங்கள் பல அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மேலும் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் வாகனங்கள் அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. தொடர்ந்து இந்தியா வாகன விற்பனையில் நல்ல வளர்ச்சியை பெற்று வருகிறது

More from DriveSpark

Article Published On: Wednesday, January 3, 2024, 7:00 [IST]
English summary
Car sales 2023 india crosses 4 million units
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X