கடைசி 30 நாளில் வெளியான 13 கார்கள்! ஒவ்வொன்னும் தரமா இருக்குதே!

கடந்த மூன்று மாதமாகவே ஆட்டோமொபைல் துறை பரபரப்பாக தான் செயல்பட்டு வருகிறது. பல்வேறு புதிய வாகனங்களின் அறிவிப்புகள் டீசர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் நடந்து வருகின்றன. இப்படியாக கடந்த 30 நாட்களில் மொத்தம் 13 கார்கள் இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகமாகியுள்ளன. இப்படியாக கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகமான கார்களின் விபரங்களை காணலாம்.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் மகேந்திரா, டாடா, ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன், கியா ஆகிய நிறுவனங்கள் எல்லாம் தலா ஒரு வாகனங்களை பல்வேறு விதமான செக்மென்ட்களில் பல்வேறு வகையான விலைகளில் அறிமுகப்படுத்தியுள்ளன. இதில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் தான் பலரது கவனத்தை ஈர்க்கும் விதமாக இருந்தது.

cars launched in april 2024

மஹிந்திரா 3எக்ஸ்0: மஹிந்திரா நிறுவனம் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் தனது மகேந்திரா எக்ஸ்யூவி 300 காரை அப்டேட் செய்து 3எக்ஸ்ஓ என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இந்த காரின் வெளிப்புறமும் உட்புறமும் ஏகப்பட்ட அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒன்பது வேரியன்ட்களில் 7 கலர் ஆப்ஷன்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. இதில் இன்ஜின்களில் மாற்றம் இல்லை.

மஹிந்திரா பொலிரோ நியோ: மஹிந்திரா நிறுவனம் தனது டியூவி300 பிளஸ் காரை மஹிந்திரா பொலிரோ நியோ என பேஸ்லிஃப்ட் செய்து விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் இரண்டு விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. அதன்படி 9 சீட்டர் கொண்டதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக நீளமான வீல் பேஸ் கொண்ட இந்த கார் மக்களை கவரும் விதமாக விதமாக இருக்கிறது.

cars launched in april 2024

ஸ்கோடா சூப்பர்ப்: ஸ்கோடா நிறுவனம் தனது சூப்பர்ப் காரை விற்பனையிலிருந்து நிறுத்தியிருந்த நிலையில் தற்போது இந்த காரை மீண்டும் விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது . இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. வெறும் 100 கார்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. இந்த கார் சர்வதேச பிராண்டில் ஏற்கனவே அறிமுகமாகியிருந்தாலும் இந்த அறிமுகம் என்பது தற்போது இந்தியாவில் செய்யப்பட்டுள்ளது.

ஜீப் விராங்க்ளர்: ஜீப் நிறுவனம் விராங்க்ளர் காரை இரண்டு வேரியன்ட்களாக கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அதன்படி ரூபாய் 67.65 லட்சம் மற்றும் ரூபாய் 71.65 லட்சம் ஆகிய விலைகளில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இது முந்தைய தலைமுறை காரைவிட ரூபாய் 5 லட்சம் அதிகமான விலையில் விற்பனைக்கு அதிகமாக அறிமுகமாகியுள்ளது. இருந்தாலும் இந்த காரின் சொகுசு பாதுகாப்பு அம்சங்கள் எல்லாம் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

cars launched in april 2024

ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஜிடி: ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது டைகுன் காரில் ஜிடி என்ற இரண்டு வேரியன்ட் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அதன்படி ஜிடி லைன் மற்றும் ஜிடிபிளஸ் ஆகிய வேரியன்ட் கார்கள் அறிமுகமாகியுள்ளது. இதில் ஏகப்பட்ட அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன ஜிடி கார்களின் என்னென்ன அப்டேட்கள் எல்லாம் இருக்குமோ அந்த அப்டேட்கள் எல்லாம் இந்த கார்களில் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜினை பொறுத்தவரை டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜீப் காம்பஸ் நைட்டி ஈகிள்: ஜீப் நிறுவனம் தனது காம்பஸ் காரின் நைட்டி ஈகள் எடிசன் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. முற்றிலுமாக கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரில் ஏகப்பட்ட அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக 18 இன்ச் கொண்ட அலாய் வீல் இதில் வழங்கப்பட்டுள்ளது. கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது.

cars launched in april 2024

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்: டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரில் ஜிஎக்ஸ் ஓ என்ற வேரியன்ட் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகியுள்ளது. இந்த வேரியன்ட் ஜிஎக்ஸ் வேரியண்ட்டை விட அதிகமான வேரியன்டாக பார்க்கப்படுகிறது. 2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 174எச்பி பவர் மற்றும் 25என்எம் டார்க் திறனுடன் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. இது ரூபாய் 20.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் லீடர் எடிசன்: டொயோட்டா நிறுவனம் தனது ஃபார்ச்சூனர் காரின் லீடர் எடிசன் வெர்ஷனை கடந்த மாதம் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த கார் மூன்று விதமான கலர் ஆப்ஷன்களில் காண்ட்ராஸ்ட் ரூப் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்படுகிறது.

cars launched in april 2024

எம்ஜி ஹெட்டர்: எம்ஜி நிறுவனம் தனது ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் ஆகிய இரண்டு கார்களிலும் பிளாக் ஸ்டோம் எடிசன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் பல்வேறு விதமான டிசைன் அப்டேட்களுடன் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் உடன் இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகிறது. ரூபாய் 21.25 லட்சம் முதல் ரூபாய் 22.76 லட்சம் என்ற விலையில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

லெக்ஸஸ் என்எக்ஸ் 350 எச்: சொகுசு கார் செக்மெண்டில் லெக்சஸ் நிறுவனம் கடந்த மாதம் தனது என்எக்ஸ் 350ஹெச் ஓவர்டிரையல் என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ரூபாய் 71.17 லட்சம் என்ற விலையில் விற்பனைக்காக அறிமுகமாகியுள்ளது. இதில் ஏகப்பட்ட அப்டேட்டுகள் உள்ளன இந்த கார் மார்க்கெட்டில் உள்ள பென்ஸ் ஜிஎஸ்சி, பிஎம்டபிள்யூ எக்ஸ்3, வால்வோ எக்ஸ்சி 60, ஆடி க்யூ5 ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்குகிறது.

cars launched in april 2024

பிஎம்டபிள்யூ ஐ5 எம்60: பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது ஐ5 எம்60 என்ற எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்து விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் சொகுசு எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் மிக பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட காராகும். இதன் விலையை பொறுத்த வரை ரூபாய் 1.20 கோடி என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் ஆகியுள்ளது.

ஆஸ்ட்ரான் மார்ட்டின் பேண்டேஜ்: ஆஸ்ட்ரால் மார்ட்டின் நிறுவனம் பேண்டேஜ் என்ற காரை கடந்த மாதம் விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4நொடியில் பிக்கப் செய்து விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 325கிலோமீட்டர் வேகத்தில் இது பயணிக்கும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலையை பொறுத்தவரை ரூ3.99 கோடி என்ற விலையில் விற்பனை ஆகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் புதிய நிதியாண்டு துவங்கிய நிலையில், இந்த நிதியாண்டுக்காக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்ட பல்வேறு வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் அதிகமான எண்ணிக்கையிலான வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கருத முடியும். இதில் உங்களுக்கு பிடித்த வாகனத்தை கமெண்ட் செய்யுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 4, 2024, 15:16 [IST]
English summary
Cars launched april 2024 xuv3xo taisor bolero neo superb
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X