இந்த ஒரே மாசத்துல இத்தனை கார் அறிமுகமாகிடுச்சா? ஒவ்வொன்னும் தரமான இருக்குதே!
கடந்த மார்ச் மாதம் ஆட்டோமொபைல் உலகில் ஏராளமான விஷயங்கள் நடந்துள்ளன. பல முக்கியமான கார்கள் அறிமுகமாகியுள்ளன எஸ்யூவி ரக காரர்கள் எல்லாம் அறிமுகமாகியுள்ளன. அதில் சில எலெக்ட்ரிக் கார்களும் உள்ளன. இப்படியாக 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகமான கார்களை பற்றி சுருக்கமாக காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் கிரெட்டா என்-லைன்: ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா காரின் என்லைன் வேரியன்டை கடந்த மார்ச் 11-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த கார் ரூபாய் 16.82 லட்சம் முதல் ரூபாய் 20.45 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த என்-லைன் என்பது ஹுண்டாய் காரின் ஸ்போர்ட்டி வெர்ஷன் வேரியன்ட் ஆகும். இந்த காரில் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

காரின் இன்ஜினைப் பொறுத்தவரை 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 160 பிஎஸ் பவரையும் 253 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
பிஒய்டி சீல்: பிஒய்டி நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது சீல் என்ற எலெக்ட்ரிக் ப்ரீமியம் செடான் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அட்டோ 3 மற்றும் இ6 எம்பிவி ஆகிய கார்களுக்கு பிறகாக பிஒய்டி நிறுவனம் இந்த சீல் என்ற காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் பிரீமியம் ரேஞ்ச், டைனமிக் ரேஞ்ச் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் ஆகிய வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த காரில் உள்ள பேட்டரியை பொருத்தவரை 61.44 கிலோ வாட் ஹவர் மற்றும் 82.56 கிலோ வாட் ஹவர் என இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன. இதில் ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல்வீல் டிரைவ் ஆகிய இரண்டு விதமான வேரியன்ட்களும் உள்ளன.
இந்த காரை ஒரு தடவை சார்ஜ் போட்டால் 650 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் அதிகபட்சமாக 0 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் நான்கு நொடியில் பிக்கப் செய்து விடும். கார் ரூபாய் 41 லட்சம் முதல் ரூபாய் 53 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

டாடா நெக்ஸான்/ இவி டார்க் எடிசன்: டாடா நிறுவனம் தனது நெக்ஸான் மற்றும் நெக்ஸான் இவிஆகிய காரின் பேஸ்லிஃப்ட் வெர்ஷனை கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டது. அப்பொழுது இந்த காரின் டார்க் எடிஷன் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த மார்ச் 2024 எடிசன் டாடா நிறுவனம் வெளியிட்டது.
பெட்ரோல்,டீசல் மற்றும் இவி ஆகிய மூன்று வேரியன்ட்களின் இதன் டார்க் எடிசன் வெளியாகி உள்ள நிலையில் அதன் விலை விபரங்களை பொறுத்தவரை பெட்ரோல், டீசல், இன்ஜின் நெக்ஸான் வேரியன்டை பொறுத்தவரை ரூபாய் 11.45 லட்சம் முதல் ரூபாய் 15.80 லட்சம் வரையிலும், நெக்ஸான் இவி ரூ19.49 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.
லெக்ஸஸ் எல்எம்: டொயோட்டா நிறுவனத்தின் வில்ஃபையர் காரை அடிப்படையாகக் கொண்டு லெக்ஸஸ் நிறுவனம் எல்லாம் லக்சரி எம்பிவி காரை உருவாக்கியுள்ளது. இந்த காருக்கான புக்கிங் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது. இந்நிலையில் இந்த கார் இந்த மார்ச் மாதம் தான் விற்பனைக்கு அறிமுகம் ஆகியுள்ளது. இதில் எல்எம் 350 மற்றும் 4 சீட்டர் என இரண்டு விதமான வேரியன்ட்கள் உள்ளன.
இந்த காரின் இஞ்சினைப் பொறுத்தவரை 2.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 250 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் இ-சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்ட 4 வீல் டிரைவ் எம்பிவி காராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை பொருத்தவரை ரூபாய் இரண்டு கோடி முதல் 2.5 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
ஃபோக்ஸ்வேகன் ஜிடி வேரியன்ட்கள்: ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது ஜிடி வேரியண்ட் லைன் அப்களை பெரிதாக்க டைகுன் மற்றும் விர்டூஸ் ஆகிய கார்களின் ஜிடி பிளஸ் மற்றும் ஜிடி லைன் ஆகிய வேரியன்ட்களை இந்த மாதம் பொதுவெளியில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார்கள் விரைவில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் உள்ள அம்சங்கள் குறித்த தகவல்கள் எல்லாம் இந்த மாதம் தான் அறிமுகமானது.
இது மட்டுமல்லாமல் போக்ஸ்வாகன் நிறுவனம் தனது ஐடி.4 என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியது. இது இந்த நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராகும் இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த கார் 2024-ம் ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்ரோன் பாசால்ட் விஷன் கூப்பே எஸ்யூவி கான்செப்ட்: சிட்ரோன் நிறுவனத்தின் சி3எக்ஸ் என்று அழைக்கப்பட்ட கார் தற்போது இந்தியாவில் பாசால்ட் விஷன் என்ற பெயரில் எஸ்யூவி கான்செப்ட் காராக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சி3 காரின் உள்ள அதை வடிவமைப்பில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 110 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த மார்ச் மாதம் 2023-24-ம் நிதியாண்டின் கடைசி மாதம் என்பதால் இந்த மாதம் ஏகப்பட்ட வாகனங்கள் அறிமுகமாகியுள்ளன. இந்த நிதியாண்டிற்காக திட்டமிடப்பட்ட அனைத்து வாகனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வாகன பிரியர்களை குஷி படுத்தியுள்ளது 2024-25-ம் நிதியாண்டு இன்னும் ஏகப்பட்ட வாகனங்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









