இந்த யமஹா நிறுவனம் ஆர்எக்ஸ்100 பைக்கை தயாரிக்கும்னு பாத்தா காரை தயாரிக்க போகுதாமே!.. இது உண்மைதானா!
ஒட்டுமொத்த இரண்டு சக்கர வாகன காதலர்களின் எதிர்பார்ப்பாக யமஹா ஆர்எக்ஸ் 100 (Yamaha RX100) பைக்கின் வருகை பற்றியதாக இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் யமஹா நிறுவனம் கார் உற்பத்தியில் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக பிரபல கார் உற்பத்தி நிறுவனமான கேடர்ஹாம் கார்ஸ் லிமிடெட் (Caterham Cars Limited) வெளியிட்டு இருக்கும் தகவல் அமைந்திருக்கின்றது. கேடர்ஹாம், இது ஓர் இங்கிலாந்தை தலைமையமாகக் கொண்டு இயங்கும் இலகு ரக ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரிக்கும் நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனம், யமஹா உடன் கூட்டணியைத் தொடங்கி இருப்பதாகவே தற்போது தகவல் வெளியிட்டு இருக்கின்றது. முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் புராஜெக்ட் வி (Project V) காரை தயாரிக்கும் பொருட்டே இந்த கூட்டணியை அவர்கள் தொடங்கி இருக்கின்றனர். புராஜெக்ட் வி என்பது குறிப்பெயர் மட்டுமே ஆகும்.

விற்பனைக்கு வரும்போது வேறு பெயரிலேயே அது இருக்கும். இது ஓர் ஸ்போர்ட்ஸ் கூபே வகை கார் மாடல் ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரின் உற்பத்தியில் முக்கிய பங்கினையே யமஹா வகிக்க இருக்கின்றது. ஆமாங்க, யமஹா காரை தயாரிக்கப்போவதில்லை. அது காரின் உற்பத்திக்கான கூறுகளை மட்டுமே தயாரித்து வழங்க இருக்கின்றது.
இ-ஆக்ஸில் (e-Axle) போன்ற முக்கிய கூறுகளையே மட்டுமே தயாரித்து வழங்க இருக்கின்றது. கேடர்ஹாம் இங்கிலாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமாக இருந்தாலும், அது புராஜெக்ட் வி எலெக்ட்ரிக் காரை டோக்யோவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (Tokyo R&D) மையத்தில் வைத்தே தயாரிக்கப்பட இருக்கின்றது.
இது ஓர் அட்வான்ஸ்டு எஞ்சினியரிங் வசதிக் கொண்ட உற்பத்தி ஆலை ஆகும். இங்கு வைத்தே முன் மாதிரி மாடலாகவும், விற்பனைக்கான வாகனமாகவும் புராஜெக்ட் வி தயாரிக்கப்பட இருக்கின்றது. இப்போதுதான் இந்த எலெக்ட்ரிக் காரின் தயாரிப்பு பணிகள் ஆரம்ப நிலையில் இருந்தாலும், பலரின் கவனத்தை அது இப்போதே ஈர்க்க தொடங்கி இருக்கின்றது.
இதற்கு அக்கார் பற்றிய முக்கிய விபரங்கள் வெளியாகி இருப்பதே காரணம் ஆகும். கேடர்ஹாம் இந்த காரை வெறும் 1,190 கிலோ மட்டுமே இருக்கின்ற வகையில் தயார் செய்திருக்கின்றது. 2+1 என்கிற வகையிலேயே இதன் இருக்கைகள் இருக்கும். மேலும், பேட்டரி பேக்கை 55 kWh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது ஓர் ஸ்போர்ட்ஸ் கார் என்பதால் எலெக்ட்ரிக் மோட்டாரை பொருத்த வர இந்த காரில் 200 kW திறன் கொண்ட பவர்ஃபுல் மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 230 கிமீ ஆகும். அதேவேளையில், பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 5 செகண்டுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும் என்பது கவனிக்கத்தகுந்தது.
மேலும், ஓர் முழு சார்ஜில் இதில் 400 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். கேடர்ஹாம் நிறுவனம் இந்த காரை தன்னுடைய பிரபல கேடர்ஹாம் 7 கார் மாடலை தயாரிக்க பயன்படுத்தப்படும் அதே பிளாட்பாரத்தை பயன்படுத்தியே தயாரிக்க இருக்கின்றனர். இத்துடன், இந்த காரை இலகுவானதாக தயாரிக்க கார்பன் ஃபைபர் பயன்படுத்தி இருக்கின்றது.
தொடர்ந்து, பாடி மற்றும் சேஸிஸ் ஆகியவற்றையும் இலகுவானதாக பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த காரின் உற்பத்திக்கான பணிகள் வருகின்ற 2025 ஆம் ஆண்டு அல்லது 2026 ஆம் ஆண்டுக்குள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்த காரை விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த கார் விற்பனைக்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் துளியும் இல்லை. இந்த வாகனம் ஜப்பான் போன்ற உலக நாடகளுக்கானதாக மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இது எப்போது விற்பனைக்கு வரும் என்கிற துள்ளியமான தகவல் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் அதுபற்றிய விபரங்களும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








