சென்னை கார் ரேஸ்ல இன்னிக்குதான் உச்சகட்ட கிளைமேக்ஸ் நடக்க போகுது! யாரு ஜெயிக்க போறாங்க தெரியுமா?
சென்னையில் எஃப் 4 கார் பந்தயம் தற்போது நடந்து வருகிறது. இதன் இறுதி நாளான இன்று தகுதி சுற்றுகள் மற்றும் இறுதி சுற்று போட்டிகள் நடக்க திட்டமிடப்பட்டுள்ளன. ஏற்கனவே நேற்று திட்டமிடப்பட்டிருந்த கார் பந்தயம் துவங்க தாமதமானதால் நேற்று நடக்கவிருந்த போட்டிகளையும் சேர்த்து இன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்படியாக இன்று என்னென்ன போட்டிகள் நடக்கின்றன என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ஐஆர்எஸ் சார்பில் தமிழக அரசின் விளையாட்டு துறை தரப்பில் இருந்து சென்னையில் இரவு நேர கார் பந்தய போட்டு நடத்த ஏற்பாடுகள் நடந்தது. இந்த போட்டிகள் இரண்டு நாட்களாக நடத்த திட்டமிட்டு இருந்தது. சர்வதேச தரத்தில் இந்த கார் பந்தய போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில். இந்த போட்டியை சென்னை தீவுத்திடல் பகுதியை சுற்றியுள்ள சாலைகளில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன.

நேற்று இந்த போட்டி துவங்க இருந்த நிலையில் நேற்று தான் சர்வதேச அளவில் கார் பந்தயம் நடத்தும் அமைப்பான எஃப்ஐஏ என்ற அமைப்பு இதற்கான சான்று வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சான்று வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் போட்டி துவங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் திட்டமிடப்பட்ட படி போட்டிகள் நேற்று நடக்கவில்லை. நேற்று வெறும் பயிற்சி சுற்றுகள் மட்டுமே நடந்தன.
இந்நிலையில் இன்று இந்த போட்டிக்கான தகுதி சுற்றும் அதைத் தொடர்ந்து இறுதிப் போட்டி சுற்றும் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த போட்டியை ஏராளமான மக்கள் காண டிக்கெட் முன்பதிவு செய்து அரங்கிற்கு வந்துள்ளார்கள். இந்த போட்டி மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இருக்கிறது.

இந்த போட்டி மொத்தம் 6 அணிகளாக, ஐபிஎல் போட்டி போல ஒவ்வொரு ஊர் பெயரிலும் அணிகள் பிரிக்கப்பட்டு ஒரு அணிக்கு தலா நான்கு டிரைவர்கள் விதம் இருக்கிறார்கள். ஒரு அணி தரப்பிலிருந்து இரண்டு கார்கள் போட்டியில் பங்கேற்கும். இரண்டு டிரைவர்கள் ஒரே காரை ஓட்டுவார்கள். இவர்கள் தனித்தனியாக காரை ஓட்டுவார்கள் முதல் டிரைவர் ஓட்டும் காருக்கு தனி சுற்றும், இரண்டாவது டிரைவர் மற்றும் காருக்கு தனி சுற்றும் நடக்கிறது.
இந்த போட்டியில் சிங்கிள் சீட்டர் கார்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. எஃப் 4 கார் பந்தயத்திற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்ட கார்கள் மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்கிறது. இந்த போட்டியில் உள்ள 6 அணிகள் தரப்பிலிருந்து 24 டிரைவர்கள் பங்குபெறும் நிலையில் ஒவ்வொரு ஒரு அணிக்கும் இரண்டு இந்திய டிரைவர்கள் மற்றும் இரண்டு வெளிநாட்டு டிரைவர்கள் இருக்கிறார்கள். இந்த வெளிநாட்டு டிரைவர்களில் ஒருவர் பெண்ணாக இருக்கிறார்.

இந்த கார் பந்தயம் மொத்தம் மூன்று விதமாக நடக்கிறது. ஜேகே ஃப்ளாக்பி, எஃப்4 இந்தியா சாம்பியன்ஷிப், எஃப் 4 இந்தியன் ரேஸிங் லீக் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது. 3 போட்டிகளும் ஒரே ஃபார்மெட்டில் தான் நடக்கின்றன. முதலில் பயிற்சி சுற்றுகள் நடக்கும். தொடர்ந்து தகுதி சுற்றுகள் நடக்கும். தகுதி அதை தொடர்ந்து இறுதி போட்டிகள் நடக்கும். இறுதி போட்டியில் வெல்பவர்களுக்கு பாயிண்ட் வழங்கப்படும்.
இந்த பாயிண்டுகளை வைத்து அதிக புள்ளிகள் பெற்ற அனைத்து சாம்பியன்ஷிப் பட்டமும் அதிக புள்ளிகளை பெற்ற காருக்கு சாம்பியன்ஷிப் பட்டமும் வழங்கப்படுகிறது. இந்த போட்டி டிரைவர்களுக்கான போட்டியாக அல்லாமல் கார் மற்றும் அணிகளுக்கான போட்டியாக நடக்கிறது. இந்த போட்டியை காண ஏராளமான மக்கள் தற்போது சென்னை பகுதியில் இருக்கிறார்கள்.
சென்னையில் இந்த கார் ரேஸ் மிக பரபரப்பாக நடந்து வருகிறது. நேற்று இந்த பந்தயத்திற்கான சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், இந்த பந்தயம் நடக்குமா நடக்காதா என்ற மிகப்பெரிய கேள்வி இருந்தது. இந்நிலையில் இறுதி நேரத்தில் சான்று வழங்கப்பட்டதால் இந்த பந்தயம் சற்று தாமதமாக துவங்கியது. இதன் காரணமாக இன்று அதிக நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் கார் ரேஸ் நடத்துவது தமிழக இளைஞர்கள் மத்தியில் கார் ரேஸ் குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமையும். அதே நேரம் இளைஞர்களை கார் பந்தயம் மீது அதிக ஆர்வம் ஏற்படுத்தும் விதமாகவும் இது திட்டமிடப்பட்டுள்ளது. இது இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி அதிக இளைஞர்களை கார் ரேஸ் பக்கம் ஈர்க்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









