மாஸ் காட்டீட்டாங்க! சென்னை கார் ரேசுக்கு கடைசி நேரத்தில் நெருக்கடி! பிரச்னையை அசால்டா ஊதி தள்ளிய தமிழக அரசு!

சென்னையில் நடந்து வரும் கார் பந்தயப் போட்டியில் தற்போது கார் பந்தயம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்தில் கார் பந்தயம் நடத்துவதற்கான சான்று எஃப்ஐஏ அமைப்பிடமிருந்து பெற வேண்டிய நிலையில் அந்த அமைப்பு தற்போது டிராக்கில் சில மாற்றங்களை செய்ய அறிவுறுத்தியதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது போட்டிகள் எப்பொழுது நடக்கும், இன்று என்னென்ன விஷயங்கள் நடக்கும் என்பது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

சென்னையில் தற்போது இந்தியன் ரேஸிங் லீக் தரப்பிலிருந்து இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயப் போட்டி சென்னை பொது சாலைகளில் வைத்து நடத்தி திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள சுமார் 3.5 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலைகளில் இந்த கார் ரேஸ் பந்தயம் நடக்கிறது. இந்த போட்டியை காண தற்போது 9000த்திற்கும் அதிகமான மக்கள் குவிந்துள்ளார்கள்.

chennai car race Delay reason

மதியம் 2:30 மணிக்கு இந்த போட்டிக்கான பயிற்சி சுற்றுகள் எல்லாம் துவங்க இருந்த நிலையில், இன்று தான் இந்த போட்டிக்கான எஃப்ஐஏ சான்று வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் எப்ஐஏ அமைப்பினர் வந்து டிராக்கை சோதனை செய்தபோது டிராக்கில் சில பிரச்சினைகள் இருப்பதாக கூறி அதை மாற்றம் செய்ய அறிவுறுத்தியுள்ளார்கள்.

தற்போது இந்த மாற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த மாற்றம் செய்யும் பணி காரணமாக தற்காலிகமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. போட்டிகள் அடுத்து துவங்கும் நேரம் குறித்து அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மீண்டும் தங்கள் அறைக்கு திரும்பினர். இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு பின்னர் போட்டிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

chennai car race Delay reason

அதன் பின்னர் மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது இன்று பயிற்சி சுற்றுகள் மட்டுமே நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் மீண்டும் டிராக்கிற்கு திரும்பியுள்ளனர். நாளை தகுதி சுற்றிலும் இறுதி போட்டிக்கான சுற்றுகளும் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்று அனைத்து டிரைவர்களும் தங்கள் பயிற்சி சுற்றுகளை மேற்கொள்வார்கள். இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து வருகின்றன.

இப்படியாக எஃப்4 கார் போட்டிகளை நடத்த வேண்டும் என்றால், அதற்கு பல்வேறு விதமான விதிமுறைகள் இருக்கின்றன. குறிப்பாக டிராக்குகளில் குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்கள் என எஃப்ஐஏ அமைப்பு செய்துள்ள சில விதிமுறைகளை பின்பற்றி தான் டிராக்குகளை அமைக்க வேண்டும் அதில் மிக துல்லியமான விஷயங்கள் கூட கண்காணிக்கப்படும்.

chennai car race Delay reason

இப்படியாகத்தான் ஏற்கனவே அமைக்கப்பட்ட டிராக்குகள் இரண்டு இடங்களில் சில பிரச்சினைகள் இருப்பது எஃப்ஐஏ குழுவினர் கண்டுபிடித்ததால், அந்த பிரச்சினைகளை மாற்ற கோரி அவர்கள் கேட்டிருந்ததால் அதற்காக காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு வழியாக அந்த மாற்றங்களும் செய்யப்பட்டு தற்போது போட்டிகள் நடத்த சான்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து இன்று பயிற்சி சுற்றுகள் மற்றும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாளையே தகுதி சுற்றிலும் இறுதி போட்டிக்கான சுற்றுகளும் நடக்கும் என எதிர்பார்க்கலாம். அதனால் இன்று வந்தவர்கள் பயிற்சி சுற்று நடக்கும் விஷயத்தை மட்டும் பார்த்துவிட்டு நாளை மீண்டும் வந்து முழு போட்டியையும் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு நாளை இந்த போட்டியை காண காண்பதற்கான டிக்கெட் எடுத்திருப்பது அவசியம்.

இதனால் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி போட்டி நடக்காமல் வேறு விதமாக போட்டிகள் நடக்கிறது. ஆனால் திட்டமிட்டு இருந்த வரிசையில் தான் போட்டிகள் நடக்கும் என்று பார்க்கலாம். முதலில் பயிற்சி சுற்றுகள் நடந்து பின்னர் பகுதி சுற்றுகள் நடைபெறும். இந்த தகுதி சுற்றில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பொசிஷன் வழங்கப்பட்டு இறுதிப் போட்டிகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பொதுசாலைகளில் இப்படியான போட்டிகள் நடத்துவது இதுதான் முதல் முறை என்பதால் இதில் சில குழப்பங்கள் ஏற்பட்டிருக்கலாம். இந்த குழப்பங்கள் இருந்தாலும், உடனடியாக நிர்வாகிகள் செயல்பட்டு இந்த குழப்பங்களை தவிர்க்க உடனடி நடவடிக்கை எடுத்து சரி செய்து தற்போது போட்டிகளை நடத்த முயற்சி செய்திருப்பது நிச்சயம் பாராட்டத்தக்கது தான்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 31, 2024, 18:29 [IST]
English summary
Chennai car race delay reason fia certification details
மேலும்... #Motorsport #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X