சிஎஸ்கேவை ஓரமா வைங்க! இப்ப சென்னை டர்போ ரைடரை பற்றி தான் ஊரே பேசுது! இது என்ன டீம் தெரியுமா?

சென்னையில் நாளை ஃபார்முலா 4 கார் பந்தய போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் எல்லாம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த போட்டியில் எந்தெந்த அணிகள் பங்கு பெறுகிறது அந்த அணியில் எந்தெந்த ஓட்டுனர்கள் இருக்கிறார்கள்? ஒரு அணியில் எத்தனை ஓட்டுனர்கள் பங்கேற்கிறார்கள் என்ற விரிவான விவரங்களை தான் இங்கே நாம் காண போகிறோம்.

கிரிக்கெட்டில் ஐபிஎல் போட்டிகள் எப்படி நடக்குமோ அதே போலவே சென்னையில் நடக்கும் ஃபார்முலா 4 கார் பந்தயப் போட்டிகளும் திட்டமிடப்பட்டுள்ளன. மொத்தம் ஆறு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணிக்கும் நான்கு ஓட்டுனர்கள் இருக்கிறார்கள். அதில் மூன்று பேர் ஆண்களாகவும் ஒருவர் பெண்ணாகவும் இருக்கிறார். இந்த அணிகள் எல்லாம் ஒவ்வொரு ஊர் பெயர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

chennai car race drivers

தற்போது இந்த ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் கோவா ஏஸ் ஜேஏ ரேஸிங், ஸ்பீட் டிமோன்ஸ் டெல்லி, சென்னை டர்போ ரைடர்ஸ், பெங்களூரு ஸ்பீடுஸ்டர்ஸ், கொல்கத்தா ராயல் டைகர், ஹைதராபாத் பிளாக் பேர்ட் என அணிகளுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும் வெற்றி பெறும் காருக்கும் பரிசு வழங்கப்பட உள்ளது.

இதில் கோவா ஏஸ் ஜேஏ ரேஸிங் அணி தரப்பிலிருந்து சுகில் ஷா என்பவர் ஓட்டுநராக இருக்கிறார். இவர் இந்தியாவை சேர்ந்தவர் 23 வயதாகும் இவர் 2023ம் ஆண்டு இந்தியன் ரேஸிங் லீக் சாம்பியனாக இருந்தவர். இரண்டாவது டிரைவராக சஹான் அலி முக்சின் என்பவர் இருக்கிறார். இவருக்கு 20 வயதாகிறது. இவர் 2023 எஃப் 4 கார் பந்தயத்தில் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். ஏழு முறை போடியம் வென்றுள்ளார்.

chennai car race drivers

இந்த அணியின் மூன்றாவது டிரைவராக ரவூல் ஹைமன் என்பவர் இருக்கிறார். இவர் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் 28 வயதாகும் இவர் 2023 இந்தியன் ரேஸிங் லீக் சாம்பியனாக இருக்கிறார். இதுபோக பல்வேறு விதமான சாம்பியன் பட்டங்களையும் பெற்றுள்ளார். இறுதியாக செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கேப்ரில்லா ஜில்கோவா என்ற பெண் ஓட்டுனர் இருக்கிறார். இவருக்கு 29 வயதாகிறது இவரும் பல்வேறு விதமான கார் பந்தய போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

அடுத்ததாக ஸ்பீடு டிமென்ஸ் டெல்லி பொறுத்தவரை முதல் ஓட்டுனராக ஆகாஷ் கவுடா என்ற இந்திய இளைஞர் இருக்கிறார் இவருக்கு 26 வயதாகிறது. இரண்டாவது ஓட்டுனராக சாய் சஞ்சய் இருக்கிறார் . இவர் தமிழகத்தில் இருந்து பிரிட்டிஷ் ஜிடி போட்டியில் கலந்து கொண்ட முதல் டிரைவராக இருக்கிறார். இவர் பல்வேறு விதமான சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார் இவருக்கு 18 வயதாகிறது.

chennai car race drivers

இந்த அணியின் மூன்றாவது டிரைவராக போர்ச்சுகீஸ் நாட்டைச் சேர்ந்த அல்வாரோ பாரன்டி என்பவர் இருக்கிறார். இவருக்கு 40 வயது ஆகிறது. இவர் பல்வேறு விதமான சாம்பியன் பட்டங்களை பெற்றவர். இந்த அணி நான்காவது டிரைவராக பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஆங்கிலிக்யூ டெட்டாவெர்னியர் என்பவர் இருக்கிறார். இவருக்கு 38 வயதாகிறது. இவரும் பல்வேறு விதமான போட்டிகளில் வெற்றி பெற்றவர்.

சென்னை டர்போ ரைடர் அணியை பொறுத்தவரை முதல் ஓட்டுனராக சந்திப்பார் என்பவர் இருக்கிறார் இவருக்கு 32 வயதாகிறது. இவர் பல்வேறு விதமான போட்டிகளில் வெற்றி பெற்றவர் இரண்டாவது டிரைவராக முஹம்மது ரயான் என்பவர் இருக்கிறார். இவருக்கு 20 வயதாகிறது. மூன்றாவது டிரைவராக பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஜோன் லான்காஸ்டர் என்பவர் இருக்கிறார். இவருக்கு 36 வயதாகிறது. நான்காவது டிரைவராக எமிலி டக்கான் என்பவர் இருக்கிறார். இவருக்கு 28 வயதாகிறது.

பெங்களூரு ஸ்பீடுஸ்டர்ஸ் அணியின் முதல் டிரைவராக இந்தியாவைச் சேர்ந்த கேல் குமரன் என்பவர் இருக்கிறார். இவருக்கு 22 வயதாகிறது. இரண்டாவது டிரைவராக ரோஷன் ரஜீவ் என்பவர் இருக்கிறார். இவருக்கு 19 வயதாகிறது. மூன்றாவது டிரைவராக டேனிஷ் நாட்டைச் சேர்ந்த ஜூலியஸ் டேனிசன் என்பவர் இருக்கிறார். இவருக்கு 17 வயதாகிறது. நான்காவது டிரைவராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேட்டலின் வூட் என்ற பெண் இருக்கிறார் இவருக்கு 27 வயதாகிறது.

கொல்கத்தா ராயல் டிரைகர் அணியை பொறுத்த வரை முதல் டிரைவராக இந்தியாவைச் சேர்ந்த 19 வயதாகும் நிகில் போரா என்பவரும் இரண்டாவது டிரைவராக 18 வயதான ரூஹான் அல்வா என்பவரும் மூன்றாவது டிரைவராக மலேசியாவைச் சேர்ந்த அலிஸ்டர் யங் என்பவரும் நான்காவது டிரைவராக லிச்டென்ஸ்டெயின் நாட்டைச் சேர்ந்த பெண்ணான ஃபேபிஎன்னி வூல்வென்ட் என்பவரும் இருக்கிறார்கள்.

ஹைதராபாத் பிளாக் பேர்ட் அணியை பொறுத்தவரை முதல் ட்ரைவராக இந்தியாவைச் சேர்ந்த அகில் ரபீந்தரா என்ற 28 வயது இளைஞனும், இரண்டாவது டிரைவராக அனிந்தித் ரெட்டி என்ற 34 வயது இளைஞனும், மூன்றாவது டிரைவராக சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நீல் ஜானி என்பவரும், நான்காவது டிரைவராக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த லாரா கேம்ப்ஸ் என்பவரும் இருக்கிறார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் நடக்கப்போகும் இந்த கார் பந்தய போட்டியை பலர் கவனித்து வருகிறார்கள். பலருக்கு இந்த போட்டியில் பங்கேற்கும் டிரைவர்கள் குறித்த அறிமுகம் இல்லாமல் இருக்கிறது. அவர்களுக்கு இந்த டிரைவர்களை அறிமுகப்படுத்துவதற்காகவும், டீம்களை அறிமுகப்படுத்துவதற்காகவும், இந்த பதிவு செய்துள்ளோம். இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, August 30, 2024, 20:04 [IST]
English summary
Chennai car race drivers list team names formula 4 details
மேலும்... #Motorsport #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X