சென்னையில் மீண்டும் கார் ரேஸ் நடந்த ஏற்பாடு துவங்கியது! என்னைக்கு நடக்கப்போகுது தெரியுமா?
சென்னையில் நடந்த கார் ரேஸின் அடுத்த ரவுண்டு தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியன் ரேஸிங் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் நடந்த இந்த கார்பந்தயப் போட்டிகள் மொத்தம் 5 சுற்றுகளை கொண்டதாக இருக்கிறது. சென்னை பொதுசாலையில் போட்டிகள் நடந்தது இந்த போட்டியின் இரண்டாவது சுற்று ஆகும். முதல் சுற்று ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் தற்போது மூன்றாவது சுற்றிற்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கார் ரேஸ் பந்தயம் நடந்தது. இந்தியன் ரேஸிங் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் இந்த பந்தயம் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் மூன்று விதமான பந்தயங்கள் நடந்தன. இந்தியன் ரேஸிங் லீக், ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் ஜேகே டயர் எஃப் எல்ஜிபி 4 கார் பந்தயம் ஆகிய போட்டிகள் நடந்தன.

சென்னையில் மிகப்பெரிய பரபரப்புக்கு மத்தியில் இந்த போட்டிகள் நடந்தது. பயிற்சி சுற்றுகள் ,தகுதி சுற்றுகள், கார் ரேஸ் பந்தயம் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் வெற்றியாளர்கள் மற்றும் அவர்கள் பெற்ற புள்ளிகள் குறித்த விபரங்கள் எல்லாம் வெளியிடப்பட்டன. இந்தியாவில் நடந்த முதல் இரவு நேர கார் ரேஸ் பந்தயமாக இந்த கார் ரேஸ் பந்தயம் தான் நடந்தது.
இந்த கார் ரேஸ் நடந்த போது இந்தியாவை பெரிய அளவில் தமிழகத்தை திரும்பிப் பார்த்தது. பொதுவாக இந்தியாவில் கார் ரேஸ் பந்தயம் பெரிய அளவில் பிரபலமாக இல்லை. ஆனால் இந்த பந்தயத்தை இந்தியாவில் பிரபலப்படுத்துவதற்காக தமிழக அரசும் கார் ரேஸ் பந்தயம் நடத்தும் நிறுவனமும் சேர்ந்து முயற்சி செய்து இந்த போட்டியை நடத்திக் காட்டியது.

சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள சுமார் 3.5 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளில் இந்த கார் ரேஸ் பந்தயம் நடந்தது. இதில் பல்வேறு விதமான திருப்பங்கள் நேரான சாலைகள் என போட்டிகள் பிரமிக்க வைத்தன. இந்த போட்டியை காண டிக்கெட் எல்லாம் விற்று பெரிய அளவில் லாபம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை பொது சாலையில் நடந்தது இரண்டாவது சுற்று போட்டிகள் தான்.
இந்தியன் ரேஸிங் திருவிழாவில் முதல் சுற்று போட்டிகள் ஏற்கனவே சென்னை இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேசினல் சர்க்யூட் என்ற பகுதியில் வைத்து நடந்தது. இந்த பகுதி பிரத்தியேகமாக கார் ரேஸ் பந்தயம் நடப்பதற்காக உருவாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது. இங்கு முதல் ரவுண்டு நடந்த நிலையில் இரண்டாவது ரவுண்டு தான் சென்னை பொது சாலையில் வைத்து நடத்தப்பட்டது. மொத்தம் 5 ரவுண்டுகளாக இந்த போட்டிகள் நடத்தப்படும்.

இதில் மூன்றாவது ரவுண்டுக்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது. மூன்றாவது ரவுண்டு சென்னை இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட் என்ற கார் பந்தய ரேஸ் டிராக்கில் வைத்து நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இந்த போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நான்காவது சுற்று கோவை கரி மோட்டார் ஸ்பீடு வேயில் அக்டோபர் 19-20 ஆகிய தினங்களில் நடக்கிறது.
சென்னை பொது சாலையில் இரண்டாவது சுற்று நடந்தது போலவே மூன்றாவது நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த ரேஸ்காக தற்போது கார்களை தயார் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. மேலும் ரேஸ் டிராக்கிலும் பல்வேறு விதமான சோதனைகள் நடந்து வருகிறது.
இந்த சுற்றிலும் டிரைவர்கள் மற்றும் கார்கள் எல்லாம் தயார் செய்யப்பட்டு அவர்கள் போட்டியில் வெற்றி பெறும் புள்ளிகளுக்கு இணையாக பரிசுகள் வழங்கப்படுகிறது. மொத்தமுள்ள 5 ரவுண்டுகளும் முடிந்த பிறகு தான் இந்த போட்டியின் வெற்றியாளர் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தான் தற்போது போட்டியாளர்கள் தயாராகி வருகிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை இருங்காட்டுகோட்டையில் உள்ள கார் ரேஸ் டிராக்கில் இந்தியன் ரேஸிங் திருவிழாவின் மூன்றாவது ரவுண்டு போட்டிகள் நடத்த தற்போது ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த போட்டியை காண தற்போது பல ஆர்வமாக காத்திருக்கிறார்கள். சென்னை பொதுசாலையில் கார் பந்தய போட்டி நடந்த பிறகு பலர் கவனம் இந்த கார் பந்தயத்தை நோக்கி திரும்பி உள்ளது.


Click it and Unblock the Notifications









