240 கி.மீ வேகத்துல சீறி பாயும்! சென்னை கார் ரேஸில் ஓடப்போகும் கார்கள் இது தான்!
சென்னையில் நாளை இந்தியன் ரேசிங் லீக் போட்டியாக எஃப்4 கார்பந்தயம் நடக்கிறது. இதன் முதல் சுற்று நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் சுற்று சென்னை பொது சாலையில் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த போட்டிக்காக எஃப் 4 ரக கார்கள் சென்னைக்கு வந்துள்ளன. இந்த போட்டியில் பயன்படுத்தப்படும் கார்கள் எப்படிப்பட்டவை? இந்த காரில் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன? இந்த கார் ஏன் பந்தயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னையில் இந்தியாவிலேயே முதல்முறையாக இரவு நேர ஸ்டிரீட் ரேஸிங் கார் பந்தயம் நடக்கிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு தினங்கள் இந்த கார் போட்டிகள் சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள சுமார் 3.5 கிலோ மீட்டர் உள்ள சாலைகளில் இந்த போட்டி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த போட்டிக்காக எஃப் 4 ரக கார்கள் சென்னைக்கு வந்துள்ளன.

நாம் சாதாரணமாக சாலையில் ஓட்டும் கார்களுக்கும் இந்த காருக்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கிறது. பொதுவாக பார்முலா கார் ரேஸ் என்றால் அந்த கார்கள் குறிப்பிட்ட அம்சங்களை கொண்ட கார்களாக இருக்க வேண்டும் என சர்வதேச அளவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது அப்படியாக தயாரிக்கப்பட்ட கார்கள் தான் ஃபார்முலா கார் பந்தயத்தில் பயன்படுத்தப்படும்0 இதன்படி எஃப் 4 கார் பந்தயத்திற்காக வரையறுக்கப்பட்ட வகையில் வடிவமைக்கப்பட்ட கார்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன.
சென்னையில் நடக்க உள்ள இந்த போட்டியில் இரண்டு விதமான கார்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒன்று உல்ஃப் ஜிபி 08 தண்டர் என்ற காரும் மற்றொன்று மைகேல் ஃபார்முலா 4 ஜென் டு என்ற காரும் இதில் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு காரிலும் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? சாதாரண காருக்கும் இந்த காருக்கும் என்ன வித்தியாசம்? இதன் இன்ஜின் அம்சங்கள் எப்படி இருக்கின்றன? என்ற விரிவான விபரங்களை பார்ப்போம்.

உல்ஃப் ஜிவி தண்டர் காரை பொருத்தவரை 1.0 லிட்டர் மற்றும் 1.1 லிட்டர் ஆகிய இரண்டு விதமான வேரியண்ட்களில் விற்பனையாகி வருகிறது. இதன் சேசிஸ் முழுவதும் கார்பன் பைபர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த காரின் எடை குறைவாக இருக்கும். வேகமாக பயணிக்கும் சிறந்த ஏரோடைனமிக்ஸ் காக இந்த காரின் பின்பக்கம் உள்ள விங் பகுதி அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது சஸ்பென்ஷன் சிஸ்டம் எல்லாம் எப்போ டிராக்கில் பயன்படுத்துவதற்காக அனைத்து விதமான அமைப்புகளையும் கொண்டதாக இருக்கிறது. இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4121 மிபி நீளமும் 1783 அகலமும் 2527 மீமி உயரமும் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் மொத்தமே 378 கிலோ எடை கொண்டதாக தான் இருக்கிறது.

குறைவான எடையை இருப்பதால் இந்த காரில் வேகமாக பயணிக்க முடியும். இந்த காரின் இன்ஜினை பொறுத்தவரை நாம் முன்பே சொன்னதுபடி 1.0 லிட்டர் மற்றும் 1.1 லிட்டர் ஆகிய இரண்டு விதமான வேரியண்ட்கள் இருக்கிறது. இன்ஜின் அப்ரிலியா ஆர்எஸ்வி 4 ரக இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த அப்ரிலியா ஆர்எஸ்வி 4 1.0 இன்ஜின் 201 எச்பி பவரையும், இதுவே 1.1 லிட்டர் இன்ஜினை பொருத்தவரை 220 எச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 40 லிட்டர் அளவுக்கு எரிபொருளை சுமந்து செல்லும் வகையில் டேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் நேரடியாக கார்பன் பெல்ட் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக மைகேல் ஃபார்முலா 4 ஜென் 2 காரும் இதில் பயன்படுத்தப்படுகிறது. இதன் சேஸிஸை பொருத்தவரை அதே கார்பன் மோனோக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட தூரம் ரேஸ் நடத்துவதற்கு ஏற்றது போல இந்த காரின் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 4 சிலிண்டர் ஹோமோ லோகேட்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது சர்வதேச ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் பயன்படுத்தப்படும் இன்ஜினாக இருக்கிறது.
இந்த காரின் இஞ்சின் பவரை பொருத்தவரை 160 எச்பி முதல் 180 எச்பி திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சஸ்பென்ஷன் சிஸ்டத்தை பொருத்தவரை முன்பக்கம் டபிள் விஷ் போன் மற்றும் புஷ் ராடுடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பம்ப் மற்றும் ரீபவுண்டு அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷனாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4879மிமீ நீளமும் 1733மிமீ அகலமும் 1044 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 45 லிட்டர் அளவுக்கு எரிபொருளை ஏற்றி செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கியரை பொறுத்தவரை கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது எலெக்ட்ரானிக் கண்ட்ரோல் யூனிட் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் நடக்கும் கார் பந்தய போட்டிக்கு பயன்படுத்தப்படும் கார்கள் எல்லாம் சர்வதேச அளவில் எப்போ ஒரு கார்பன் போட்டிக்கு பயன்படுத்தும் படம் கார்களாக இருக்கின்றன. இந்த கார்கள் எல்லாம் அதிக திறன் வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயக்கூடிய வகையில் இந்த கார்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நிச்சயம் இது காண்பவர்களை ஈர்க்கும் வகையில் செயல்படும்.


Click it and Unblock the Notifications









