சென்னை அணி ரசிகர்களுக்கு ஏமாற்றம்! இப்படி நடக்கும்னு கனவுல கூட நினைச்சு பார்க்கல!

சென்னையில் தற்போது எஃப் 4 கார் பந்தய போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டிகளுக்கான தகுதி சுற்றிகள் நடந்து முடிந்த நிலையில், தகுதி சுற்றுகளில் எந்தெந்த அணிகள் எவ்வளவு புள்ளிகள் பெற்றுள்ளது என்ற விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. மூன்று விதமான போட்டிகள் நடந்த நிலையில், மூன்று விதமான போட்டிகளுக்கான தகுதி சுற்றுக்கள் தற்போது முடிவடைந்துள்ளன. ஏற்கனவே பயிற்சி சுற்றிலும் முடிந்திருந்தது இந்த விபரங்களை விரிவாக காணலாம் வாருங்கள்.

சென்னையில் தற்போது இந்தியன் ரேஸிங் லீக் சார்பில் இருந்து பொதுசாலையில் இரவு நேர கார் பந்தயம் நடந்து வருகின்றன. சர்வதேச தரத்தில் இந்த கார் பந்தய போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டியில் மூன்று விதமான பந்தயங்கள் நடக்கின்றன. ஜேகே பிளாக் பி, இந்தியன் ரேஸிங் லீக், எஃப் 4 இந்தியா சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டிகளுக்கான பயிற்சி சுற்றுகள் நேற்று நடந்தது.

chennai car race qualification result

இன்று பாக்கியிருந்த பயிற்சி சுற்றுகள் நடந்தது. தகுதிசுற்றுகளும் அடுத்தடுத்து நடந்தன. இந்த போட்டிகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த முடிவுகளை வைத்துதான் இறுதிப் போட்டியின் பொசிஷன் முடிவு செய்யப்படும். தொடர்ந்து இறுதி போட்டிகள் இன்று இரவு நடக்க உள்ளன. தற்போது நடைபெற்ற தகுதி சுற்றில் முடிவுகள் குறித்த விபரங்களை பார்ப்போம்.

இன்று காலை 11:15 மணிக்கு முதல் முறையாக ஜேகே ஃபிளாக்பி-4 கார் பந்தயத்தின் பயிற்சி சுற்றுகள் நடந்தது. இந்த சுற்றில் முதல் ஆளாக 2:05.146 நிமிடத்தில் டீம்-எம்ஸ்போர்ட் அணியை சேர்ந்த கோஸ்வாமி என்பவர் வேகமாக முடித்துள்ளார். இதை தொடர்ந்து எஃப்4 இந்தியா சாம்பியன்ஷிப் போட்டியின் பயிற்சி சுற்று நடந்தது. இதில் காட் ஸ்பீடு கொச்சி அணியை சேர்ந்த பார்ட்டர் என்பவர் 1:44.680 நிமிடத்தில் லேப்பை முடித்து முதலிடத்தை பிடித்தார்.

chennai car race qualification result

இதையடுத்து தகுதிச்சுற்றுகள் ஆரம்பமாகின ஜேகே பிளாக்பி-4 பந்தயத்தின் முதல் தகுதி சுற்றில் நடந்தது இதில் மொமண்டம் மோட்டார் ஸ்போர்ட் அணியைச் சேர்ந்த என் மெக்பெர்சன் என்பவர் என்பவர் 02:03.886 நிமிடத்தில் போட்டியை முடித்து முதலிடத்தை பிடித்தார். இவரை தொடர்ந்து டார்க் டான் ரேஸிங் அணியைச்சேர்ந்த டி டிஎஸ் என்பவர் 02:04.022 நிமிடத்திலும், எம்-ஸ்போர்ட் அணியைச் சேர்ந்த என் டெட்டா என்பவர் 02:04.141 நிமிடத்தில் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.

அடுத்ததாக ஜேகே பிளாக்பி 4 தகுதிச்சுற்று 2 நடந்தது. இதில் எம் ஸ்போர்ட் அணியைச் சேர்ந்த சங்கரன் என்பவர் 02:07.383 நிமிடத்தில் முதலிடத்தை பிடித்தார். அவரைத் தொடர்ந்து ஆவலன்ஸ் ரைஸிங் அணியை சேர்ந்த லால் என்பவர் 02:07.394 நிமிடத்தில் 2வது இடத்தையும் அதே அணியை சேர்ந்த டோபோ என்பவர் 02:13.411 நிமிடத்தில் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

அடுத்ததாக இந்தியன் ரேஸிங் லீக் டிரைவர் பி-க்கான தகுதிச்சுற்று நடந்தது. இதில் ஸ்பீடு டிமென்ஸ் டெல்லி அணியின் கவுடா மற்றும் வாரண்டி ஆகியோர் இணைந்து 1:40.430 நிமிடத்தில் ரேஸை முடித்து முதலிடத்தை பிடித்தார்கள். 2வது இடத்தை சார்ச்சி ரா பெங்கால் டைகர் அணியைச் சேர்ந்த எங், போரா ஆகியோர் 1:40.970 நிமிடத்திலும், மூன்றாவது இடத்தை பெங்களூரு ஸ்பீடுஸ்டர் அணியைச் சேர்ந்த வுட், ராஜீவ் ஆகியோர் 1:41.253 நிமிடத்திலும் போட்டியை முடித்தனர்.

அடுத்ததாக ஃபார்முலா 4 இந்தியா சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் தகுதி சுற்றி நடந்தது. இதில் காட் ஸ்பீடு கொச்சி அணியின் பார்டர் என்பவர் 1:43.158 நிமிடத்தில் முதலிடத்தில் பிடித்தார். அதைத்தொடர்ந்து சார்ட்சி ரா பெங்கால் டைகர் அணியை சேர்ந்த ஆல்வா என்பவர் 1:44.706 நிமிடத்தில் இரண்டாவது இடத்தை பிடித்தார். பிளாக் பேட்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த அலிபாய் என்பவர் 1:44.891 மூன்றாவது இடத்தை பிடித்தார்.

அடுத்ததாக இரண்டாவது தகுதி சுற்று நடந்தது. இந்த தகுதி சுற்றில் அகமதாபாத் அப்பெக்ஸ் ரேசர் அணியைச் சேர்ந்த நந்தன் என்பவர் 1:44.690 நிமிடத்தில் வந்து முதலிடத்தையும், பெங்களூர் ஸ்பீடுஸ்டர் அணியை சேர்ந்த பேரியட் என்பவர் 1:44.740 நிமிடத்தில் வந்து இரண்டாவது இடத்தையும் பிளாக் பார்ட்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த அலிபாய் என்பவர் 1:45.662 நிமிடத்தில் வந்து மூன்றாவது இடத்தையும் எட்டிப் பிடித்தார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் வைத்து இந்த போட்டிகள் நடப்பதால் சென்னை அணி சிறப்பாக செயல்படும் என பலர் எதிர்பார்த்தார்கள். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு சென்னை அணியின் செயல்பாடு சிறப்பாக இல்லை. முதல் மூன்று இடத்தை கூட பிடிக்க முடியாத நிலையில் தான் சென்னை அணி இருக்கிறது. தகுதி சுற்றில் சென்னை அணி முதல் மூன்று இடத்தில் இழந்திருந்தாலும், ரேஸில் பட்டம் பெறுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More from DriveSpark

Article Published On: Sunday, September 1, 2024, 17:05 [IST]
English summary
Chennai f4 car race qualifying round results final race awaits
மேலும்... #Motorsport #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+