சென்னை கார் ரேஸில் முதல் ரேஸில் வெற்றி பெற்றது யார் தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!
சென்னையில் நடக்கும் கார் பந்தயப் போட்டியின் பயிற்சி சுற்றுகள் மற்றும் தகுதி சுற்றிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது முதல் கார் பந்தயப் போட்டி நடந்து முடிந்து அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த போட்டியில் கார் பந்தய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு போட்டியை சுவாரசியமாக மாற்றினார்கள். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களால் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஜேகே ஃபார்முலா எல்ஜிபி 4 போட்டியை பொருத்தவரை மொமெண்டம் மோட்டார் ஸ்போர்ட்ஸ் அணியைச் சேர்ந்த நேத்தன் மெக் பெர்சன் என்பவர் முதலிடத்திலிருந்து போட்டியை துவங்கினார். டார்க் அண்ட் ரேஸிங் அணியைச் சேர்ந்த டிஎஸ் தில்ஜீத் என்பவர் இரண்டாம் இடத்திலிருந்தும், எம்-ஸ்போர்ட் அணியை சேர்ந்த என்-டெட்டா என்பவர் போட்டியில் மூன்றாவது இடத்திலிருந்தும் போட்டியை துவங்கினார். இந்த போட்டியில் அவர்கள் 1.3 லிட்டர் இன்ஜின் கொண்ட காரை ஓட்டினார்கள்.

இந்த போட்டி பல்வேறு விறுவிறுப்பான சுவாரசியமான போட்டியாக அமைந்திருந்தது. இந்த போட்டியில் முதலிடத்திலிருந்து போட்டியை துவங்கிய மெக்பெர்சன் 13:52.579 நிமிடங்களில் ரேஸை முடித்து இரண்டாவது ஆளாக வெற்றியைப் பெற்றார். முதல் ஆளாக வெற்றி பெற்றது இரண்டாவது இடத்திலிருந்து போட்டியை துவங்கிய டார்க் டான் ரேஸிங் அணியைச் சேர்ந்த டிஎஸ் தில்ஜீத் தான். இவர்கள் இருவருக்கும் 0.442 நொடிகள் மட்டுமே வித்தியாசம். மூன்றாவது இடத்தை திகில் ராவ் என்பவர் பிடித்துள்ளார்.
இதை தொடர்ந்து ஃபார்முலா 4 இந்தியா சாம்பியன் போட்டிக்கான மைகேல் எஃப்4 ஜென் 2 காரை ஒட்டி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். இந்த கார் ஆல்ஃபைன் 1.3 லிட்டர் டர்போ சார்ஜர் இன்ஜினை கொண்டது. இந்த காரை ஒரேக்கா என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதில் காட் ஸ்பீட் கொச்சி அணியச் சேர்ந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹக் பார்டெர் என்பவர் முதல் பொசிஷனில் துவங்குகிறார்.

பெங்கால் டைகர் அணியைச் சேர்ந்த ரூபா ஆல்வா என்பவர் இரண்டாவது பொசிஷனில் இருந்தும், பிளாக்பாட் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த தென்ஆப்பிரிக்கா நாட்டிலுள்ள அக்கீல் அலிபாய் என்பவர் மூன்றாவது கொஸ்டின் இருந்தும் போட்டியை துவங்கினார்கள். முதல் இரண்டு இடத்தில் இருப்பவர்களுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம்.
இது பத்து லேப் போட்டியாக நடந்தது இந்த போட்டியில் முதலிடத்தை காட் ஸ்பீடு கொச்சி அணியைச் சேர்ந்த பார்டெர் 19:42.952 நிமிடங்களில் சென்று முதலிடத்தையும், இரண்டாவது இடத்தை பெங்கால் டைகர் அணியைச் சேர்ந்த அலுவா என்பவர் 19.50.251 நிமிடங்களில் கடந்துள்ளார். மூன்றாவது இடத்தை பெங்களூர் ஸ்பீடுஸ்டெர் அணியை சேர்ந்த மோகன் என்பவர் 20.09.021 என்ற நிமிடத்தில் கடந்துள்ளார்.

இந்தியன் ரேஸிங் லீக் போட்டிக்காக உல்ஃப் தண்டர் ஜிபி 08 என்ற கார் பயன்படுத்தப்பட்டது. இது அப்ரிலியா ஆர்எஸ்வி 4 1.0 இன்ஜினை கொண்டதாக இருக்கிறது. இந்த காரை இரண்டு டிரைவர்கள் ஓட்டுகிறார்கள். இதில் முதல் ரேஸில் டிரைவர் ஏ -க்கான போட்டி நடக்கிறது. இதற்கான தகுதி சுற்றில் கோவா ஏஸ் அணியை சேர்ந்த ஜில்கோவா மற்றும் ஹேமேன் கிளைம் ஆகியோர் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளார்கள்.
சென்னை டர்போ ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த லேன்கஸ்டர் என்பவர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இவர்களுக்கான இறுதிப்போட்டி முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிராக்கில் உள்ள சில பிரச்சனைகள் தற்காலிகமாக போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இது எல்லாம் சரி செய்த பிறகு மீண்டும் இந்த போட்டி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இந்த போட்டி நடக்கும் போது குறுக்கே நாய் புகுந்த சம்பவம் எல்லாம் சமீபத்தில் நடந்துள்ளது. இது பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி பல்வேறு ரெட் பிளாக் சம்பவங்கள் இன்றைய போட்டியில் நடந்துள்ளன. இதனால் போட்டிகள் தாமதமாகவே நடந்து வருகிறது. முதல் முறையாக பொது சாலையில் இப்படியான போட்டிகள் நடப்பதால் இந்த பிரச்சினைகளை நிர்வாகத்தினர் எதிர் கொண்டு வருகிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை கார் ரேஸ் பந்தயத்தில் முதல் ரேஸ்க்கான இரண்டு போட்டி முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. ஒரு போட்டி முடிவு இதுவரை வெளியாகவில்லை. போட்டிகள் இதுவரை நடந்ததாக அறிவிக்கப்படவில்லை. இந்த போட்டிகள் அடுத்து நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் வெளியாகும் இரண்டாவது போட்டி முடிவுகள் முதல் போட்டியில் ஐஆர்எல் போட்டிக்கான முடிவுகள் மட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









