சென்னை கார் ரேஸில் போட்டிகள் எப்படி நடக்கிறது? வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? முழு விபரம் இதோ!

சென்னையில் நாளை இந்தியாவின் முதல் இரவு நேர ஸ்ட்ரீட் கார்பந்தயப் போட்டி நடக்கிறது இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் எல்லாம் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. டிக்கெட் எல்லாம் விற்பனை செய்து வருகின்றன. இப்படியாக இந்த போட்டிகள் எப்படி நடக்கிறது எத்தனை ரவுண்டுகள் நடக்கிறது. போட்டியின் ஃபார்மெட் என்ன என்ற விரிவான விவரங்களை தான் இங்கே நாம் காண போகிறோம்.

இந்தப் போட்டியில் மொத்தம் 24 டிரைவர்கள் இருக்கிறார்கள். அதில் 18 பேர் ஆண்கள். ஆறு பேர் பெண்களாக இருக்கிறார்கள். இவர்கள் மொத்தம் ஆறு டீம்களாக பிரிக்கப்பட்டுள்ளார்கள். ஒரு டீமுக்கு மூன்று ஆண்களும் ஒரு பெண்களும் இருக்கிறார்கள். ஆக மொத்தம் ஒரு டீமுக்கு நான்கு ஓட்டுனர்கள் இருப்பார்கள். இதேபோல ஒரு டீமிற்கு இரண்டு கார்கள் இருக்கும்.

chennai car race format

ஆக மொத்தம் 12 கார்கள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. மொத்தம் ஐந்து ரவுண்டுகளாக இந்த போட்டிகள் நடத்தப்படும். இதில் ஒரே காரை இரண்டு ஓட்டுனர்கள் தனித்தனியாக ஓட்ட வேண்டும். இப்படியாக ஒரு காருக்கு டிரைவர் ஏ, டிரைவர் பி என இருப்பார்கள். இந்த போட்டி கார்கள் மற்றும் அணிகளுக்கான போட்டி தானே தவிர டிரைவர்களுக்கான போட்டி கிடையாது. அதனால் பரிசுகள் கார்களுக்கும் அணிகளுக்கும் மட்டுமே வழங்கப்படும்.

முதல் நாள் நடக்கும் போட்டி டிரைவர்களுக்கான போட்டியாக இருக்கிறது. இதில் முதலில் அதிகாரப்பூர்வமான பயிற்சி சுற்று நடக்கும். இதில் 20 நிமிடங்கள் ஒதுக்கப்படும். அடுத்ததாக தகுதி சுற்று நடக்கும். இதில் பத்து நிமிடங்கள் ஒதுக்கப்படும். இறுதியாக ரேஸ் நடக்கும் ரேஸ் 25 நிமிடங்கள் மற்றும் ஒரு லேப் என நடக்கிறது. இரண்டாவது நாளும் இதே மாதிரியான போட்டிகள் டிரைவர் பி மூலம் நடக்கிறது.

chennai car race format

நாம் முன்பே சொன்னதுப்படி இது கார் மற்றும் அணிகளுக்கான சாம்பியன்ஷிப் போட்டி தானே தவிர டிரைவர்களுக்கான போட்டி கிடையாது. இதனால் புள்ளிகள் பகிரப்படும். ஒரு டீமில் உள்ள டிரைவர் ஏ மற்றும் டிரைவர் பி ஆகியோர் எடுத்த புள்ளிகள் சேர்ந்து அந்த காருக்கான சாம்பியன்ஷிப் புள்ளிகளாக கருதப்படும். அதே நேரம் ஒரே அணியில் இருக்கும் நான்கு டிரைவர்களும் இணைந்து எடுக்கும் புள்ளிகள் அந்த டீமுக்கான சாம்பியன்ஷிப் புள்ளிகளாக கருதப்படும்.

ஒவ்வொரு ரவுண்டுக்கும் இரண்டு தகுதி சுற்றுகள் நடக்கும். ஒவ்வொரு தகுதி சுற்றும் பத்து நிமிடங்கள் நடக்கும். ஒவ்வொரு டிரைவரும் அதிகபட்சமாக மூன்று லேப்கள் வரை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும். முதலில் அவுட் லேப் ஆகவும் இரண்டாவது லேப் பிளையிங் லேப் ஆகவும் மூன்றாவது இன் லேப் ஆகவும் செய்து முடிக்க வேண்டும்.

chennai car race format

இதில் அவுட்லேப் என்பது காரின் பிரேக்குகள் மற்றும் டயர்கள் எல்லாம் புதிதாக செயல்பாட்டில் இல்லாத போது ஒரு முறை முழு டிராக்கையும் டிரைவர்கள் சுற்றி வருவார்கள். இதில் முதலாவதாக வருவது எல்லாம் கணக்கு கிடையாது. முழுவதுமாக சுற்றி வந்து முடித்தால் இந்த லேப் முடிந்துவிடும்.

அடுத்ததாக ஃப்ளையிங் லேப் என்பதுதான் வேகமாக பயணிக்க வேண்டியது. இதில் தான் யார் முதலில் வருகிறார்கள் என கணக்கிடப்படும். அதிகமாக வாகனத்தின் இன்ஜின், டயர்கள் பிரேக்குகள் செயல்பாட்டில் இருப்பதால் அவை சூடாக இருக்கும். அவற்றை கூல் செய்வதற்காக ஒரு லேப் எடுப்பார்கள்.

தகுதி சுற்றின் முதல் செக்ஷனில் டிரைவர் ஏ அவரது காரை ஓட்டி செல்வார். அவர் காரை ஓட்டி செல்லும் போது எவ்வளவு நேரத்தில் முடிக்கிறார் என்பது கணக்கிடப்படும். தகுதி சுற்றின் இரண்டாவது ஸ்டேஷனில் டிரைவர் பி அதே காரை ஒட்டி செல்வார். அப்பொழுது அவர் எவ்வளவு நேரத்தில் இந்த காரை ஓட்டி வருகிறார் என்பது கணக்கிடப்படும்.

இதில் ரேஸ் 1 மற்றும் ரேஸ் 2 ரோலிங் ஸ்டார்ட் ரேஸ்களாகவே இருக்கும். அதனால் வாகனத்தை நிறுத்த வேண்டிய தேவை இல்லை. வாகனம் ஓடிக்கொண்டிருக்கும்போதே இந்த ரேஸ் துவங்கிவிடும். பிட் ஷாப்பில் கட்டாயமாக நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதில் டிரைவர்களின் பெர்ஃபார்மென்ஸ்க்கு ஏற்ப புள்ளிகள் வழங்கப்படும். இந்த புள்ளிகள் அணிகளுக்காகவும், காருக்காகவும் வழங்கப்படும் புள்ளிகள்.

முதல் நாள் நடக்கும் ரேஸ் மற்றும் இரண்டாவது நாள் நடக்கும் ரேஸில் முதலில் நடக்கும் சுற்றில் முதலிடத்தில் வந்தவருக்கு ரேஸ் நடக்கும் போது முதல் கிரிட், இரண்டாவது இடத்தில் வந்தவருக்கு இரண்டாவது கிரிட் என ரேஸ் பொசிஷன் வழங்கப்படும். முதல் கிரிட் கிடைத்தவருக்கு ரேஸில் ஜெயிப்பதற்கான வாயப்பு அதிகம்.

இப்படியாக 12 கார்களும் ரேஸில் பங்கு பெறும். இந்த ரேஸில் வெற்றி பெறும் கார்களுக்கு முதலில் வந்த கார் முதல் 10வதாக வந்த கார் வரை முறையே 25, 18, 15, 12, 10, 8, 6, 4, 2, 1 என முதல் 10 இடம் பிடிக்கும் கார்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும்.

இதுபோக கூடுதல் புள்ளிகளாக தகுதி சுற்றில் முதலிடம் பிடித்தவருக்கு கூடுதலாக ஒரு புள்ளியும், ரேஸ் நடக்கும் போது விரைவாக லேப் முடிப்பவருக்கு கூடுதலாக ஒரு புள்ளியும் வழங்கப்படும். இப்படியாக ஒரு கார் இரண்டு நாள் போட்டியிலும் மொத்தம் எவ்வளவு புள்ளிகளை பெற்றுள்ளது என்பதை பொறுத்து சாம்பியன்ஷிப் தேர்வு செய்யப்படும். அதேபோல ஒரு டீம் மொத்தம் எத்தனை புள்ளிகள் பெற்றுள்ளது என்பதை வைத்து சாம்பியன்ஷிப் பட்டம் பெரும் டீம் தேர்வு செய்யப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் கார் பந்தயம் சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் வெற்றி பெறும் அணிகள் மற்றும் ஓட்டுநர்கள் வெற்றிபெறும் கார் குறித்த பல்வேறு விதமான எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இந்தியாவில் பிரபல போட்டியாளர்களாக இருப்பார்கள். நாளை நடக்கப் போகும் கார் பந்தயத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்து பலர் காத்திருக்கிறார்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, August 30, 2024, 19:00 [IST]
English summary
Chennai formula 4 car race format all you need to know
மேலும்... #Motorsport #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X