நாளை சென்னையில் சீறிபாயும் ஃபார்முலா4 கார்கள்! டிக்கெட் விலை ரொம்ப கம்மி, லைவ் எந்த ஆப்-ல பாக்கணும்?

சென்னையில் நாளையும், நாளை மறுநாளும், தெற்காசியாவின் முதல் இரவு நேர ஸ்டிரீட் கார் பந்தயப் போட்டி நடக்க இருக்கிறது. சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள சாலைகளில் இந்த போட்டிகள் நடக்க உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது போட்டியை காண டிக்கெட்டுகளை எப்படி எடுப்பது அல்லது டிவி, ஆன்லைன் மூலம் போட்டிகளை எப்படி காண்பது என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

இந்தியாவில் ஃபார்முலா கார் பந்தயம் என்றால் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் போட்டிகள் இந்தியாவில் பெரிய அளவில் நடப்பதில்லை. ஆங்காங்கே வெகு சில இடங்களில் மட்டுமே இந்த போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்திய மக்கள் மத்தியில் கார் பந்தயம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக தமிழக அரசும் கார்பந்தயம் நடத்தும் நிறுவனமும் சேர்ந்து சென்னையில் பொது சாலையில் ஃபார்முலா 4 கார் பந்தயப் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது.

Chennai Formula 4 race

ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் இந்த போட்டிகள் நடக்க திட்டமிட்டிருந்த நிலையில், அப்பொழுது புயல் வந்ததன் காரணமாக இந்த போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது இந்த போட்டிகள் நாளையும், நாளை மறுநாளும் சென்னை தீவு திடலை சுற்றியுள்ள சாலையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் தற்போது ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பேடிஎம் இன்சைடர் தளத்தின் மூலம் இந்த டிக்கெட் விலை புக் செய்து கொள்ளலாம். இந்த போட்டிகள் இரண்டு நாட்கள் நடக்கும் நிலையில், தனித்தனியாக ஒவ்வொரு நாளுக்கும் தனி டிக்கெட்டுகளை புக் செய்யலாம் அல்லது இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒரே டிக்கெடாகவும் புக் செய்யலாம். தனியாக ஒரு நாளுக்கு டிக்கெட்கள் விலை ரூ 1999, 3999, 7999 மற்றும் ரூ10,999 ஆகிய விலைகளில் விற்பனையாகி வருகிறது.

Chennai Formula 4 race

இதுவே இரண்டு நாட்கள் சேர்த்து போட்டியை பார்க்க டிக்கெட்டாக வாங்க வேண்டும் என்றால் ரூ 2125 குறைந்தபட்ச விலை டிக்கெட்டாக இருக்கிறது. இதற்கு அடுத்ததாக ரூ2499, 11,899, மற்றும் ரூ 16,999 ஆகிய விலைகளில் டிக்கெட்கள் விற்பனையாகி வருகிறது. இந்த டிக்கெட்டை பெற்றுக் கொண்டால் இரண்டு நாட்களும் போட்டியை முழுமையாக காண முடியும்.

ஃபார்முலா 4 கார் போட்டியின் முதல் சுற்று ஏற்கனவே சென்னை கார் ரேஸ் டிராக்கில் நடந்து விட்டது. இந்த போட்டியின் முக்கியமான இரண்டாவது சுற்று போட்டி தான் தற்போது இங்கே நடக்கப்போகிறது. இந்த இரண்டு நாட்களிலும் மதியம் 2:30 மணிக்கு இந்த நிகழ்ச்சிகள் துவங்குகிறது. 3 மணி முதல் கார் பந்தயம் என்பது நடக்க துவங்கி விடும். இரவு 10 மணி வரை இந்த போட்டிகள் நடைபெறும்.

Chennai Formula 4 race

ஒவ்வொரு போட்டிக்கும் இடையே இடைவெளி இருக்கும். இந்த இடைவெளி நேரத்தில் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தவும் ஆச்சரியப்படுத்தவும் சாகச நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த நிகழ்ச்சியை காண வரும் பார்வையாளர்கள். தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக ஆங்காங்கே பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதனால் உங்கள் டிக்கெட்டில் உள்ள பகுதிக்கு அருகே உள்ள பார்க்கிங் வசதியை பார்த்து அங்கு பார்க்கிங் செய்து கொள்ளலாம்.

இந்த போட்டியை நேரில் சென்று பார்க்க முடியாதவர்கள் டிவி மூலமும் ஆன்லைன் மூலமும் இந்த போட்டியை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 2 சேனலை சப்ஸ்கிரைப் செய்து இந்த போட்டியை டிவி மூலம் காணலாம். ஆன்லைன் மூலம் இந்த போட்டியை காண வேண்டும் என்றால் ஃபேன் கோடு என்ற ஆப்பை நீங்கள் சப்ஸ்கிரைப் செய்து பயன்படுத்தினால் அந்த ஆப்-ல் இந்த போட்டியை லைவாக காண முடியும்.

சென்னையில் முதன்முறையாக இப்படியான கார்பன் நடப்பது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு பார்வையாளர்கள் இந்த போட்டியை காண வருகிறார்கள். கார் பந்தயம் மீது அதிக ஆர்வம் மிக்கவர்கள் இந்த போட்டியை காண சென்னையை நோக்கி வர துவங்கியுள்ள நிலையில், பலர் இந்த போட்டி குறித்து பேச துவங்கி விட்டார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கார் பந்தயம் பார்க்க பல ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று இளைஞர்கள் மத்தியில் கிரிக்கெட் போன்ற போட்டிகள் பிரபலமாக இருக்கும் நிலையில், கார் பந்தயத்தை இளைஞர்கள் மத்தியில் ஊக்கப்படுத்தவும் அறிமுகப்படுத்தவும் இப்படியான போட்டிகள் நிச்சயம் உதவும். இதன் மூலம் எதிர்காலத்தில் இந்தியாவில் கார் பந்தய வீரர்கள் அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, August 30, 2024, 11:15 [IST]
English summary
Chennai formula 4 car race ticket price and live telecast details
மேலும்... #Motorsport #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X