சென்னையை ஒரு வழி பண்ணிட்டாங்க.. எங்க பாத்தாலும் இத பத்திதான் பேச்சு.. யாருதான் ரேஸ் 2-ல முதல்ல வந்தது?

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், தனியார் அமைப்பும் இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 நைட் ரேஸ்-ஐ நடத்தின. இதற்கு முன் இந்தியா கண்டிராத ஓர் மிக சிறந்த மற்றும் முதல் ஸ்ட்ரீட் ரேஸ் இதுவாகும். ரேஸ் 1 மற்றும் ரேஸ் 2 என இரண்டாக இது நடைபெற்றது. மேலும், இதில் மூன்று பிரிவுகளின் ரேஸ் நடைபெற்றன. ஜேகே ஃபார்முலா எல்ஜிபி 4 (JK Formula LGB 4), இந்தியன் ரேசிங் லீக் (IRL) மற்றும் ஃபார்முலா 4 (Formula 4) ஆகியவையே அவை ஆகும்.

ரேஸ் 1-ஐ போலவே ரேஸ் 2-விலும் இந்த பிரிவுகளின்கீழ் போட்டிகள் மிக சிறப்பாக நடைபெற்றன. தலைநகர் சென்னையை இருள் சூழ தொடங்கிய அந்த வேளையிலேயே ரேஸ் போட்டிகள் தொடங்கின. டிராக் முழுக்க மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இதனால், கூரை வீட்டு சின்னத்தை பிரதிபலிக்கும் வகையில் இருந்த அந்த டிராக் மட்டும், 'இரவா அல்லது பகலா' என கேட்கும் அளவிற்கு பிரகாசமாக ஜொலித்தது.

Chennai formula 4 night race 2 result

இந்த நிலையிலேயே ரேஸ் 2 போட்டிகள் தொடங்கின. இதன் முடிவுகளே தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. அதையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். எந்தெந்த அணியைச் சேர்ந்த ரேஸர்கள் எந்தெந்த இடத்தைப் பிடித்தனர்? என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஜேகே ஃபார்முலா எல்ஜிபி ரேஸ் 2 முடிவுகள்: டார்க் டான் டீமைச் சேர்ந்த டிஜில் ராவ் 27:03.653நிமிடங்களில் பத்து சுற்றுகளை நிறைவு செய்து முதல் இடத்தைப் பிடித்தார். இரண்டாவது இடத்தை டிஎஸ் தில்ஜித் பிடித்தார். டிஜில் ராவ்-வைக் காட்டிலும் கூடுதலாக 0.311நொடிகளை எடுத்துக் கொண்டார். இவரும் டார்க் டான்-ஐச் சேர்ந்தவரே ஆவார். மூன்றாவது இடத்தை நேதன் மெக்ஃபெர்சன் பிடித்தார். இவர் கூடுதலாக 0.749நொடிகளை எடுத்துக் கொண்டார். இவர் மொமண்டம் டீமைச் சேர்ந்தவர் ஆவார்.

Chennai car race

ஐஆர்எல் ரேஸ் 2 முடிவுகள்: அல்வரோ பேரெண்டோ இவரே இந்த பந்தயத்தில் முதல் இடத்தை பிடித்தார். இவர் பத்து சுற்றுகளைக் கடக்க 23:19.29 நிமிடங்களை எடுத்துக் கொண்டார். இவர் ஸ்பீடு டெமோன்ஸ் டெல்லி எனும் பந்தய குழுவைச் சேர்ந்தவர் ஆவார். போட்டியில் மிக சிறப்பாக அல்வரோ பேரெண்டோ செயல்பட்டதற்கு கிடைத்த சிறப்பான பரிசே இந்த முதல் ஆகும்.

இவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை சோஹில் ஷா பிடித்தார். இவர் அல்வரோ பேரெண்டோவைவிட கூடுதலாக 0.947 நொடிகளை எடுத்துக் கொண்டார். கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் டீமைச் சேர்ந்தவரே இவர் ஆவார். இர்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை ரிஷன் ராஜீவ் பிடித்தார். இவர் பெங்களூரு ஸ்பீட்ஸ்டர்ஸ் டீமைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கூடுதலாக 6.485 நொடிகளை எடுத்துக் கொண்டார்.

ஃபார்முலா 4 ரேஸ் 2-வின் முடிவுகள்: பார்வையாளர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த இந்த போட்டியில் கார்கள் சீறி பாய்ந்த சத்தத்தைக் கேட்டு சென்னையே மிரண்டுபோனது என கூறலாம். இந்த போட்டியில் முதல் இடத்தை தெற்காப்பிரிக்காவைச் சேர்ந்தவரும், பிளாக் பர்ட்ஸ் ஹைதராபாத் டீமைச் சேர்ந்தவருமான அகில் அலிபாய்-யே முதல் இடத்தைப் பிடித்தார்.

30:03.445நிமிடங்களையே அவர் எடுத்துக் கொண்டார். இவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை அஹமதாபாத் அபெக்ஸ் ரேசர்ஸ் குழுவைச் சேர்ந்த ரேசர் திவ்ய நந்தன் 0.259 கூடுதல் நொடிகளிலும், பெங்களூர் ஸ்பீட்ஸ்டர் அணியைச் சேர்ந்த ஜேன் பரியத் 0.968 நொடிகளில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். இந்த மூவருக்கும் இடையில் நடைபெற்ற போட்டி மிகவும் சுவாரஷ்யமானதாக இருந்தது கவனிக்கத்தகுந்தது.

குறிப்பு, ஐஆர்எல் ரேஸ் 1 இன் முடிவுகள் முன்னதாக வெளியாக நிலையில், ரேஸ் 2-வின் முடிவுகளுடன் சேர்த்து அவையும் வெளியிட்பட்டு உள்ளன. அதன் விபரங்கள் இதோ: முதல் இரண்டு இடத்தை கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங்கைச் சேர்ந்த ரேசர்களே இந்த பிரிவில் பிடித்திருக்கின்றனர்.

முதல் இடத்தை ரவுல் ஹைமேன்-ம், இரண்டாவது இடத்தை கேப்ரியல்லா ஜில்கோவாவும் பிடித்து இருக்கின்றனர். மூன்றாவது இடத்தை அலிஸ்டர் யூங்-கே பிடித்திருக்கின்றார். இவர் ஷ்ரசி ரேர்ஹ் பெங்கால் டைகர் குழுவைச் சேர்ந்தவர் ஆவார். ஆனால், நேரம் பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்தின் தலை நகர் சென்னையில் நடைபெற்ற இந்த இரவு நேர கார் பந்தயம் இந்தியாவையேத் திரும்பிப் பார்க்க செய்திருக்கின்றது. மேலும், இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான காட்சியையும் இது வழங்கிது. குறிப்பாக, சென்னை மக்களுக்கு இப்போட்டியை நேரில் காணும் வாய்ப்பு இதன் வாயிலாக கிடைத்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, September 2, 2024, 13:35 [IST]
English summary
Chennai formula 4 night race jk flgb 4 irl f4 race 2 results
மேலும்... #Motorsport #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+