ஐபிஎல் எல்லாம் தோத்துப்போகும் போல! சென்னை கார் ரேஸ் போட்டிக்கு இவ்வளவு ஏற்பாடா?

ந்தியன் ரேஸிங் ஃபெஸ்டிவல் சார்பில் நாளை சென்னையில் மிகப்பெரிய சரித்திர சாதனை நடக்கப்போகிறது. நாளையும், நாளை மறுநாளும் சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள சாலையில் இந்தியாவின் முதல் இரவு நேர கார் ரேஸ் போட்டி நடக்கிறது. இந்த போட்டியை இந்தியா முழுவதும் பல உற்று கவனித்து வருகிறார்கள். இந்த போட்டி குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களை தான் இங்கே காண போகிறோம்.

சென்னை தீவு திடலை சுற்றியுள்ள சுமார் 3.5 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலையை தற்காலிகமாக கார் ரேஸ் சாலையாக மாற்றி இந்தியன் ரேஸிங் பெஸ்டிவல் சார்பில் எஃப்4 கார் பந்தய போட்டி நடக்கிறது. இதற்கு தமிழக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகமும், இணைந்து இந்த போட்டியை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட்கள் தற்போது ஆன்லைனில் விற்பனையாகி வரும் நிலையில் இந்த போட்டி குறித்த சில சுவாரசியமான தகவல்களை பலர் தேடி வருகிறார்கள்.

chennai formula 4 race

சென்னையில் நடக்கும் எஃப்4 கால் பந்தயம் சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள சாலைகளில் நடக்க உள்ளது. சென்னை தீவுத்திடலை இடது புறமாக சுற்றி வரும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 3.5கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி விக்டரி வார் மெமோரியல், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, கூவம் ஆறு, காமராஜர் சாலை வழியாக மீண்டும் தீவுத்திடல் மைதானத்திற்கு வரும் வகையில் கார் ரேஸ் பந்தயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாதையில் மொத்தம் 19 திருப்பங்கள் உள்ளன. பல்வேறு விதமான தடைகளை கடந்து செல்லும் வகையில் இந்த கார் ரேஸ் பந்தயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் உள்ள சாலைகள் ஏற்ற இறக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த கார் ரேஸ் பந்தயம் டிரைவருக்கும் சரி, பார்வையாளர்களுக்கும் சரி, விறுவிறுப்பான அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கலாம்.

chennai formula 4 race

இதற்கு முன்னர் சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் தான் இது போன்ற இரவு நேர சாலை வழியிலான கார் பந்தயப் போட்டி நடந்தது. தற்போது இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் தான் இந்த போட்டிகள் நடக்கிறது. சென்னையில் நடக்கும் இந்த போட்டி மொத்தம் 6 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டி போல ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு ஊர் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 24 டிரைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ஒரு அணிக்கு இரண்டு கார்கள் விதம் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. மொத்தம் ஐந்து ரவுண்டுகளாக இந்த போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள டிராக்குகள் எல்லாம் சர்வதேச கார் ரேஸ் நடத்தும் நிறுவனத்தின் சான்று பெற்ற டிராக்குகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த போட்டிகள் சர்வதேச தரத்தில் நடைபெற உள்ளது.

chennai formula 4 race

சென்னை தீவுத்திடல் பகுதியில் பிட்-ஷாப் பகுதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக கார் ரேஸ் பந்தயத்தில் பிட்-ஷாப் பகுதி மிக முக்கியமான விஷயமாகவும், இங்கு தான் கார்களில் உள்ள வீல்கள் மற்றும் ரிப்பேர் எல்லாம் ரேஸ் நடக்கும் போதே சரி செய்யப்படும். நொடி பொழுதில் இவையெல்லாம் சரி செய்யும் இடம் தான் பிட்-ஷாப் என அழைக்கப்படுகிறது. சென்னை தீவுத்திடல் உட்பகுதியிலேயே இந்த பிட்-ஷாப் பகுதி அமைக்கப்படுகிறது.

இந்த போட்டியை காண ஆங்காங்கே பார்வையாளர் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த அரங்குகளுக்கான டிக்கெட் மட்டுமே தற்போது ஆன்லைனில் விற்பனையாகி வருகிறது. இந்தியன் ரேஸிங் லீக் என்பது உலகின் முதல் பாலின பாகுபாடு அற்ற கார் பந்தயப் போட்டியாக பார்க்கப்படுகிறது. இதில் ஆண்,பெண் என இருவருமே கலந்து கொள்ளலாம்.

இந்தப் போட்டிகள் முதல் நாள் மதியம் மூன்று மணிக்கு துவங்குகிறது. இரவு 7:30 மணி வரை இந்த போட்டியின் பயிற்சி சுற்றுகள் மட்டுமே நடக்கிறது. இதனால் இந்த போட்டியில் உள்ள டிரைவர்கள் தங்கள் காரில் இந்த ரேஸ் டிராக்கில் சுற்றி வளம் வந்து கொள்ள முடியும். இதன் மூலம் ரேஸ் டிராக் எப்படி இருக்கிறது என அவர்கள் சோதனை செய்து பார்த்துக்கொண்டு அதன் பின்னர் போட்டியில் பங்கேற்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் நடக்கும் இந்த கார் ரேஸ் பந்தய போட்டியில் நிச்சயம் இந்தியாவில் உள்ள மக்கள் மத்தியில் கார் பந்தயம் குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். எதிர்காலத்தில் இந்தியாவில் கார் பந்தயம் மிக முக்கியமான போட்டியாக வளர வாய்ப்புள்ளது. இதற்காக தான் இப்படியான ஏற்பாடுகளை செய்து பொது சாலையில் கார் ரேஸ் பந்தயத்தை நடத்துகிறார்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, August 30, 2024, 13:09 [IST]
English summary
Chennai formula 4 race night street race event
மேலும்... #Motorsport #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X