சென்னை கார் பந்தய போட்டியில் முதல் நாள் என்ன நடக்கப்போகுது தெரியுமா?

இந்தியன் ரேஸிங் பெஸ்டிவல் 2024 தற்போது சென்னையில் துவங்கி உள்ளது. சென்னையில் உள்ள பொது சாலையில் இந்த கார் ரேஸ் பந்தயம் நடந்து வருகிறது. தற்போது பயிற்சி சுற்றுகள் நடந்து வரும் நிலையில் அடுத்தடுத்து தகுதி சுற்றுகள் மற்றும் கார்பந்தயம் நடக்கப்போகிறது. அதன்படி இன்று இந்த கார் பந்தய போட்டியில் என்னென்ன நடக்கப் போகிறது என்ற விரிவான விவரங்களை இங்கே காணலாம்.

சென்னையில் பொது சாலையில் இரவு நேர கார் பந்தய போட்டியாக எஃப் 4 கார் பந்தய போட்டி இன்று துவங்கியுள்ளது. சென்னையில் உள்ள தீவுத்திடலை சுற்றியுள்ள சுமார் 3.5 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலையில் இந்த கார் ரேஸ் நடக்கிறது. இந்த போட்டியை காண சுமார் 9000 பேர் சென்னைக்கு வந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார் பந்தயம் தற்போது சென்னையை திருவிழா கோலமாக மாற்றி உள்ளது.

chennai car race

இந்த கார் ரேஸ் பந்தயம் தான் இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயமாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. இந்த கார் ரேஸ் டிராக்கில் மொத்தம் 19 திருப்பங்கள் மற்றும் வேகமாக பயணிப்பதற்கான நேர் ரோடுகள் உள்ளிட்டவை உள்ளன. இதில் நேப்பியர் பாலமும் உள்ளடங்கும். இந்த போட்டியில் ஆறு அணிகள் பங்கேற்கின்றன.

இதில் ஒவ்வொரு அணியிலும் தலா ஒரு பெண் ஓட்டுநர்கள் இருக்கிறார்கள். இன்று மதியம் 2:30 மணிக்கு இந்த கார் ரேஸ் பந்தயத்தின் பயிற்சி சுற்றுகள் துவங்கியுள்ளது. பயிற்சி சுற்றுகள் முடிந்த பிறகு தகுதி சுற்றும் நடக்கிறது. நாளை அதன் பிறகு கார் பந்தயப் போட்டிகளும் நடக்கும். இப்படியாக இன்று இந்த போட்டியில் நடக்க உள்ள விரிவான விபரங்களை கீழே வழங்கி உள்ளோம்.

chennai car race
  • 12:30 - 12:30: டிரைவர்கள் அறிகும்
  • 14:30 - 15:00: JK FLGB F4 - பயிற்சி சுற்று - 1
  • 15:10 - 15:40: F4 India - பயிற்சி சுற்று - 1
  • 15:50 - 16:20: IRL - டிரைவர் ஏ - பயற்சி சுற்று
  • 16:30 - 17:00: JK FLGB F4 - பயற்சி சுற்று - 2
  • 17:10 - 17:40:F4 India - பயற்சி சுற்று - 2
  • 17:50 - 18:30: பொழுது போக்கு-கார் சாகச காட்சிகள்
  • 18:30 - 19:00: IRL - டிரைவர் நீ - பயற்சி சுற்று
  • 19:10 - 19:20: F4 India - தகுதி சுற்று 1
  • 19:25 - 19:35: F4 India - தகுதி சுற்று 2
  • 19:45 - 20:00: JK FLGB F4 - தகுதி சுற்று
  • 20:30 - 20:40:IRL -டிரைவர் பி B - தகுதி சுற்று

ஏற்கனவே பயிற்சி சுற்றுக்கள் எல்லாம் துவங்கிய நிலையில், தகுதி சுற்றுகள் விரைவில் துவங்க உள்ளன. இதற்கு இடையில் கார் சாகச கண்காட்சிகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்வையாளர்களை கவரும் வகையில் பல்வேறு விதமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியிலும் இரண்டு இந்திய டிரைவர்களும் இரண்டு வெளிநாட்டு டிரைவர்களும் இருக்கிறார்கள்.

chennai car race

இந்த போட்டி டிரைவர்களுக்கான போட்டியாக அல்லாமல் கார் மற்றும் அணிகளுக்கான போட்டியாக இருக்கிறது. இந்த போட்டியில் அதிக புள்ளிகளை பெறும் கார் மற்றும் அதிக புள்ளிகளை பெறும் அணிகளுக்கு பழக்கங்களும் வெற்றிவாகை பட்டங்களும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிக்கு இணையாக இந்த கார் ரேஸ் பந்தயம் நடக்கிறது.

இந்தியன் ரேஸிங் ஃபெஸ்டிவல் சென்னையில் நடக்கும். இந்த போட்டியில் இரண்டு விதமான சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. ஒன்று இந்தியன் ரேஸிங் லிக் சாம்பியன்ஷிப் மற்றொன்று ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப், ஆகிய போட்டிகள் நடக்கிறது இந்த போட்டி தான் இந்தியாவிலேயே பாலின பிரிவு இல்லாத போட்டிகளாக இருக்கிறது. இதில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து கலந்து கொள்கிறார்கள். இருவருக்கும் வேறுபாடு கிடையாது.

இந்த ஃபார்முலா 4 கார் ரேஸ் போட்டி ஜூனியர் டிரைவர்களுக்கான ஒரு ஓப்பன் வீல் கேட்டகிரியாக இருக்கிறது. கார் ரேஸ் பயிற்சி பெற்று முதன்முறையாக சிங்கிள் சீட்டர் காரை பலர் இந்த எஃப் 4 கார் ரேஸிங்கை தான் தேர்வு செய்து உள்ளே நுழைகிறார்கள். இதன் பிறகுதான் அவர்கள் படிப்படியாக அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் இந்த போட்டி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டியை நடப்பதால் சென்னையை தற்போது திருவிழா கோலம் போல காட்சி அளிக்கிறது. பொதுசாலைகளில் இந்த போட்டியை காண ஏராளமான மக்கள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு கண்களுக்கு நிச்சயம் விருந்தளிக்கும் வகையில் இன்றைய போட்டி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 31, 2024, 16:54 [IST]
English summary
Chennai formula 4 racing day 1 event details
மேலும்... #Motorsport #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X