ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...

இந்தியாவில் ஓலா (Ola), உபேர் (Uber) போன்று மிகவும் பிரபலமாக இருந்து வரும் நிறுவனங்களில் ஒன்று ப்ளூஸ்மார்ட் (BluSmart). இந்த நிறுவனம் ஓலா மற்றும் உபேர் போன்று வாடகைக்கு கார்களை வழங்கி வருகிறது. ஆனால் ஒரு சில விஷயங்களில் ஓலா, உபேர் நிறுவனங்களிடம் இருந்து ப்ளூஸ்மார்ட் வித்தியாசப்படுகிறது.

ஓலா, உபேர் நிறுவனங்களில் நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், உடனடியாக கார்களை பயன்படுத்த முடியும். அதாவது தற்போது 11 மணி என வைத்து கொள்வோம். 11.01 மணிக்கு நீங்கள் காரை முன்பதிவு செய்ய வேண்டுமென்றால், அது ஓலா, உபேர் செயலிகளில் சாத்தியமே. ஆனால் ப்ளூஸ்மார்ட் செயலியில் அது சாத்தியமில்லை.

Citroen eC3

ஏனெனில் ப்ளூஸ்மார்ட் செயலியில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே கார்களை முன்பதிவு செய்து வைக்க வேண்டும். நீங்கள் எந்த நேரத்தில் கார்களை முன்பதிவு செய்து வைக்கிறீர்களோ, அந்த நேரத்திற்கு ப்ளூஸ்மார்ட் கார் சரியாக நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து விடும். இதுதவிர ப்ளூஸ்மார்ட் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே இயக்கி வருகிறது.

ஆனால் ஓலா, உபேர் நிறுவனங்களில் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி, எலெக்ட்ரிக் என அனைத்து விதமான கார்களையும் உங்களால் பார்க்க முடியும். இந்த சூழலில் ப்ளூஸ்மார்ட் நிறுவனம் தற்போது சிட்ரோன் (Citroen) நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஆர்டர் ஒன்றை வழங்கியுள்ளது. இது 4,000 சிட்ரோன் இசி3 (Citroen eC3) எலெக்ட்ரிக் கார்களுக்கான ஆர்டர் ஆகும்.

BluSmart

இதில் முதற்கட்டமாக 125 சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்கள் தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கார்களின் அறிமுக நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெற்றது. இதை தொடர்ந்து எஞ்சிய சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்களும் அடுத்தடுத்து பயன்பாட்டிற்கு வரவுள்ளன. சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டிருப்பது 29.2 kWh பேட்டரி ஆகும்.

இதை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 320 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். எனவே சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார், ப்ளூஸ்மார்ட் நிறுவனத்திற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்திய சந்தையில் டாடா பன்ச் இவி (Tata Punch EV) உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களுடன் சிட்ரோன் இசி3 போட்டியிட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சிட்ரோன் நிறுவனம் தற்போதைய நிலையில் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) உள்பட பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை வாடிக்கையாளர்களின் சேவைக்கு வழங்கி வருகிறது. இந்த வரிசையில்தான் 4,000 சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்கள் வரவுள்ளன. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று, ப்ளூஸ்மார்ட் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.

இதன் காரணமாகவே சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரை ப்ளூஸ்மார்ட் நிறுவனம் தற்போது ஆர்டர் செய்துள்ளது. இது இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் உள்ள சிட்ரோன் சி3 (Citroen C3) ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, March 18, 2024, 23:39 [IST]
English summary
Citroen bags an order for delivering 4000 ec3 evs to blusmart all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+