சிட்ரோன் பசால்ட் காரை வாங்குவதற்கு இதைவிட வேற என்ன காரணம் வேணும்? வெள்ளை நிறத்தில் கூட சூப்பரா இருக்கு!!

சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt) இந்தியாவில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மாடர்ன் கூபே-ஸ்டைல் எஸ்யூவி கார். கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட இந்த சிட்ரோன் கார் வெறும் ரூ.7.99 லட்சம் என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது. விலை குறைவானதாக இருப்பினும், ஏகப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்கள் பசால்ட் காரில் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், இந்த காரை பல்வேறு பெயிண்ட் ஆப்ஷன்களில் வாங்கலாம். எந்தெந்த நிறங்களில் சிட்ரோன் பசால்ட் காரை வாங்க முடியும் என்பது குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவில் கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி கார்களுக்கு மார்க்கெட் விரிவடைய ஆரம்பித்துள்ளது. இந்திய சந்தையில் முதல் கூபே எஸ்யூவி காராக டாடா கர்வ் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து டாடா கர்வ்க்கு போட்டியாக சிட்ரோன் பசால்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.10 லட்சத்தில் பசால்ட் அறிமுகம் செய்யப்படலாம் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், வெறும் ரூ.7.99 லட்சத்தில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

citroen basalt coupe-style colour options

இந்த சிட்ரோன் காருக்கான முன்பதிவுகள் ரூ.11,001 என்கிற டோக்கன் தொகை உடன் துவங்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு கார் நிறுவனமான சிட்ரோன் பொதுவாகவே அதன் கார்களை அட்டகாசமான & கண்ணை பறிக்கக்கூடிய நிறங்களில் விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில், புதிய பசால்ட் காருக்கும் கவர்ச்சிக்கரமான பெயிண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, சிட்ரோன் பசால்ட் காருக்கு மோனோ-டோன் மற்றும் ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. மோனோ-டோன் பெயிண்ட் ஆப்ஷனில் மேற்கூரை உள்பட கார் முழுவதுமாக ஒரே நிறத்தில் இருக்கும். அதுவே, ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷனில் 2 வெவ்வேறு விதமான நிறங்களில் கார் கிடைக்கும். அதாவது, காரின் பொனெட் உள்பட பாடி ஒரு நிறத்திலும், மேற்கூரை மட்டுமே வேறொரு நிறத்திலும் வழங்கப்படும்.

citroen basalt coupe-style colour options

மோனோ-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களாக போலார் வெள்ளை, ஸ்டீல் கிரே, பிளாட்டினம் கிரே, காஸ்மோ நீலம், கார்னெட் சிவப்பு உள்ளிட்ட நிறங்களும், ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களாக பிளாட்டினம் கிரே நிற மேற்கூரை உடன் போலார் வெள்ளை மற்றும் பேர்ல் நெரா கருப்பு நிற மேற்கூரை உடன் கார்னெட் சிவப்பு நிறங்களும் வழங்கப்பட்டுள்ளன.

சிட்ரோன் பசால்ட் காரில் தொழிற்நுட்ப அம்சங்களாக 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன் மற்றும் டிரைவருக்கான 7-இன்ச் டிஸ்பிளே, வயர்லெஸ் போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கு கால் தொடைக்கான சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், சன்ரூஃப், காரை ஸ்டார்ட்/ ஸ்டாப் செய்வதற்கு பொத்தான் போன்றவை பசால்ட் காரில் வழங்கப்படவில்லை.

citroen basalt coupe-style colour options

பாதுகாப்பு அம்சங்களாக 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. என்ஜின் ஆப்ஷன்களாக பசால்ட் காரில் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இதில், அதிகப்பட்சமாக 82 பிஎஸ் மற்றும் 115 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸையும், 110 பிஎஸ் மற்றும் 205 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய டர்போ என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களையும் பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரெஞ்சு நாட்டில் தோன்றிய சிட்ரோன் கார்கள் இந்தியா வரையில் விற்பனைக்கு வந்து இருப்பதற்கு முக்கிய காரணம், அவற்றின் ஸ்டைலிஷான உடலமைப்பு ஆகும். எதிர்பார்த்ததை போல், புதிய சிட்ரோன் பசால்ட் காரில் கவர்ச்சிக்கரமான பெயிண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட காரை ரூ.8 லட்சத்தில் வாங்கலாம் என்பது எங்களுக்கு இன்னமும் ஆச்சிரியமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 10, 2024, 13:29 [IST]
English summary
Citroen basalt car colour options mono tone and dual tone paint options
மேலும்... #citroen #Citroen Basalt #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X