இந்த பேருக்காவே கூட்டம் கூட்டமா போய் வாங்க போறாங்க... மாருதி, டாடா பொழப்பில் மண்ணை அள்ளி போட வரும் புதிய கார்!

இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்றாக உள்ள சிட்ரோன் (Citroen), கூடிய விரைவில் புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt) என்ற பெயரில் இந்த கார் விற்பனைக்கு வரவுள்ளது. இது கூபே எஸ்யூவி (Coupe SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள சிட்ரோன் பசால்ட் கார் வரும் மார்ச் 27ம் தேதி (March 27) பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. அதை தொடர்ந்து வரும் மாதங்களில், விலை (Price) எவ்வளவு? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, இந்த கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Citroen Basalt

இந்திய சந்தையில் ஏற்கனவே மிகவும் பிரபலமாக இருந்து வரும் சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் (Citroen C3 Aircross) காரின் அடிப்படையில், சிட்ரோன் பசால்ட் உருவாக்கப்படவுள்ளதாக தெரிகிறது. எனவே சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் காரில் வழங்கப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்தான் (Turbo Petrol Engine), சிட்ரோன் பசால்ட் காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இன்ஜின் சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் காரில் மட்டுமல்லாது, சிட்ரோன் சி3 (Citroen C3) காரிலும் கொடுக்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சிட்ரோன் பசால்ட் காரில் இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் அதிகபட்சமாக 109 பிஹெச்பி மற்றும் 205 என்எம் டார்க் ஆக இருக்கலாம். இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம்.

Citroen C3 Aircross

வசதிகளை (Features) பொறுத்தவரையில் சிட்ரோன் பசால்ட் கூபே எஸ்யூவி காரில், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம். டிசைனை (Design) பொறுத்தவரையில், சதுர வடிவ டெயில்லேம்ப்கள், ஸ்பிளிட் ஹெட்லேம்ப்கள், சுறா துடுப்பு ஆன்டெனா, 17 இன்ச் அலாய் வீல்கள் போன்றவை இடம்பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டாடா கர்வ் (Tata Curvv) காருக்கு. சிட்ரோன் பசால்ட் கார் நேரடி போட்டியாக இருக்கும். இதுதவிர மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த பல்வேறு கார்களுடனும், சிட்ரோன் பசால்ட் விற்பனையில் போட்டியிடவுள்ளது.

அதாவது ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) போன்ற கார்களுக்கும், சிட்ரோன் பசால்ட் விற்பனையில் சவால் அளிக்கவுள்ளது.

சிட்ரோன் பசால்ட் வருகையின் மூலம், ஏற்கனவே போட்டி அனல் பறந்து கொண்டுள்ள இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் இன்னும் வெப்பம் தகிக்க போகிறது. வரும் மார்ச் 27ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் சிட்ரோன் பசால்ட் கார் குறித்த பல்வேறு முக்கியமான தகவல்கள் நமக்கு தெரிய வரலாம்.

எரிமலைகளில் (Volcanoes) இருந்து வெளிவரும் கரும் பாறைகள்தான் (Dark Rock) பசால்ட் என அழைக்கப்படுகின்றன. இந்த பசால்ட் பாறைகள் மிகவும் வலிமையானவை. இந்த பாறைகளை போலவே வலிமையானது என்பதை குறிக்கும் வகையிலேயே சிட்ரோன் நிறுவனம் தனது புதிய காருக்கு பசால்ட் என பெயர் சூட்டியிருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, March 25, 2024, 22:39 [IST]
English summary
Citroen basalt debut date march 27 features design engine
மேலும்... #சிட்ரோன் #citroen
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+