இந்த மாதிரி கார்லாம் இந்தியாக்கு இப்பதான் வருது! ஆனா விலை இவ்ளோதானா! எவ்ளோனு தெரிஞ்சா கண்டிப்பா நம்ப மாட்டீங்க

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt) கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது கூபே எஸ்யூவி (Coupe SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கூபே எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்கள் எல்லாம் இந்தியாவில் தற்போதுதான் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. சிட்ரோன் பசால்ட் காரில், மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகியவை ஆகும்.

இதில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 82 பிஎஸ் மற்றும் 115 என்எம் ஆக உள்ளது. இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. மறுபக்கம் டர்போ பெட்ரோல் இன்ஜின் மொத்தம் 2 வகையான பவர் அவுட்புட் ட்யூனிங்கில் கிடைக்கும்.

Citroen Basalt Deliveries Commence

இதில், ஒன்று 110 பிஎஸ் மற்றும் 190 என்எம் ஆகும். மற்றொன்று 110 பிஎஸ் மற்றும் 205 என்எம் ஆகும். இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என 2 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. சிட்ரோன் பசால்ட் காரில், அதிநவீன வசதிகளுக்கும் (Features) பஞ்சமில்லை.

10.2 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் ஏசி, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்றவை எல்லாம், சிட்ரோன் பசால்ட் காரின் குறிப்பிடத்தகுந்த வசதிகள் ஆகும். பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

Citroen Basalt

இதுதவிர எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு வசதிகளும் சிட்ரோன் பசால்ட் காரில் இடம்பெற்றுள்ளன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய சிட்ரோன் பசால்ட் காரின் ஆரம்ப விலை வெறும் 7.99 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.83 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த சூழலில், சிட்ரோன் பசால்ட் காரின் டெலிவரி (Delivery) பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்த காருக்காக காத்து கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு, இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), கியா செல்டோஸ் (Kia Seltos) ஆகிய கார்கள் உடன் சிட்ரோன் பசால்ட் போட்டியிடும்.

ஆனால் வரும் செப்டம்பர் 2ம் தேதி விற்பனைக்கு வரவுள்ள டாடா கர்வ் ஐசிஇ (Tata Curvv ICE) மாடல்தான், சிட்ரோன் பசால்ட் காரின் நேரடி போட்டி மாடல் ஆகும். சிட்ரோன் பசால்ட் போலவே, டாடா கர்வ் ஐசிஇ காரும் சவாலான விலையில் வந்தால், போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, August 30, 2024, 18:33 [IST]
English summary
Citroen basalt deliveries commence full details
மேலும்... #citroen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+