பைக் மாதிரி மைலேஜ் தரும் கார்... டாடாவுக்கு போட்டியா சிட்ரோனில் இருந்து!! ரூ.10 லட்சத்தில் விலையா?

கார்கள் மீதான மக்களின் பார்வை தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. சமீப வருடங்களாக எஸ்யூவி ரக கார்களை வாங்குவதற்கு மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இதனால் வரும் காலங்களில் கூபே ஸ்டைலிலான எஸ்யூவி கார்களுக்கு அதிக டிமாண்ட் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. காரின் மேற்கூரையின் பின்பகுதி சற்று சாய்வாக இருந்தால் அவை கூபே ஸ்டைலிலான எஸ்யூவி கார்கள் ஆகும். இத்தகைய எஸ்யூவி கார்களை உருவாக்கும் பணிகளில் ஏற்கனவே கார் நிறுவனங்கள் ஈடுப்பட ஆரம்பித்துவிட்டன. இவ்வாறான தோற்றத்தில் வெளிவரும் முதல் எஸ்யூவி காராக டாடா கர்வ் (Tata Curvv) இந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து சிட்ரோன் நிறுவனமும் பசால்ட் (Basalt) காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவருகிறது. புதிய சிட்ரோன் பசால்ட் காரின் விபரங்கள் ஆகஸ்ட் 2ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. ஆனால், இன்னும் பசால்ட் காரின் விலைகள் அறிவிக்கப்படவில்லை. இந்த புதிய சிட்ரோன் காரின் அறிமுகம் இன்னும் சில வாரங்களில் இருக்கலாம்.

citroen basalt mileage figures

இந்த நிலையில், சிட்ரோன் பசால்ட் காரின் மைலேஜ் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. மொத்தம் 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் பசால்ட் கார் விற்பனை செய்யப்பட உள்ளது. இவை இரண்டுமே பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். டீசல் என்ஜின் உடன் பசால்ட் கார் விற்பனை செய்யப்பட போவதில்லை, ஒருவேளை எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.

பசால்ட் காரின் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 80 பிஎச்பி மற்றும் 115 என்.எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜினை 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே பெற முடியும். இந்த நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் லிட்டருக்கு 18கிமீ வரையிலான மைலேஜை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

citroen basalt mileage figures

ஏற்கனவே கூறியதுபோல், இந்த ஒரு என்ஜினுக்கு பதிலாக 1.2 லிட்டர், 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடனும் பசால்ட் காரை வாங்கலாம். விலைமிக்க பசால்ட் கார் வேரியண்ட்களில் பொருத்தப்பட உள்ள இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 109 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்த டர்போ என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம். இதில், மேனுவல் கியர்பாக்ஸை வாங்குவதன் மூலம் அதிகப்பட்சமாக 190 என்.எம் டார்க் திறனையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக 205 என்.எம் வரையிலும் டார்க் திறனை பெறலாம். அதேபோல், தேர்வு செய்யும் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பொறுத்து மைலேஜ் அளவும் வேறுப்படுகிறது.

citroen basalt mileage figures

அதாவது, டர்போ என்ஜின் உடன் மேனுவல் கியர்பாக்ஸை தேர்வு செய்தால் அதிகப்பட்சமாக லிட்டருக்கு 19.5கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை தேர்வு செய்தால் 18.7 kmpl மைலேஜையும் பெறலாம். புதிய சிட்ரோன் பசால்ட் காரில் முக்கிய சிறப்பம்சங்களாக எல்இடி புரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 16-இன்ச் அலாய் சக்கரங்கள், வ்ராப் அரவுண்ட் டெயில்லைட்கள், ரியர் ஏசி வெண்ட்ஸ் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றுடன், இரண்டாவது வரிசை இருக்கையில் அமரும் பயணிகளுக்கு அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய தொடை சப்போர்ட், வயர்லெஸ் கனெக்ட்டிவிட்டி உடன் 10.25 இன்ச்சில் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றையும் புதிய பசால்ட் காரில் சிட்ரோன் நிறுவனம் வழங்கி உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிட்ரோன் பசால்ட் காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், டாடா கர்வ் காரை காட்டிலும் விலை குறைவானதாக பசால்ட் காரை எதிர்பார்க்கிறோம். விலை குறைவாக இருப்பதுடன், மைலேஜும் அதிகமாக கிடைத்தால் சிட்ரோன் பசால்ட் காரை நிறைய பேர் வாங்குவார்கள். இந்த செய்தியில் நாங்கள் குறிப்பிட்டுள்ளவை சோதனைகள் மூலம் சிட்ரோன் அறிவித்துள்ள மைலேஜ் ஆகும். ஆனால், நிஜ உலகில் இதனை காட்டிலும் சற்று குறைவாகவே மைலேஜை பெற இயலும்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 3, 2024, 23:55 [IST]
English summary
Citroen basalt engine wise mileage figures check all details here
மேலும்... #citroen #Citroen Basalt #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X