ரூ.8 லட்சத்தில் கிடைக்கும் சிட்ரோன் கார் இப்படித்தான் இருக்கும்... எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வாங்கவும்!!

சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt) கார் இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.7.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பிரெஞ்சு ஸ்டைல் கார் யு, பிளஸ் மற்றும் மேக்ஸ் என மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இணையத்தில் வெளியாகி உள்ள படங்களில் பெரும்பாலானவற்றில் காட்சி தருவது பசால்ட் மேக்ஸ் வேரியண்ட் ஆகும். காரை பிரீமியம் தரத்திலானதாக மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தும் விதமாக மேக்ஸ் வேரியண்ட்டின் படங்கள் அதிகமாக வெளியிடப்படுகின்றன.

இந்த நிலையில், எண்ட்ரீ-லெவல் யு வேரியண்ட்டின் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. விலை குறைவான பசால்ட் கார் தோற்றத்தில் பார்ப்பதற்கு எவ்வாறு இருக்கும் என்பதை வெளிக்காட்டும் விதமாக இந்த படங்கள் அமைந்துள்ளன. பசால்ட் யு வேரியண்ட் போலார் வெள்ளை மற்றும் ஸ்டீல் கிரே என 2 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

basalt entry level you variant

காரின் முன்பக்கத்தில், க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்ட சிட்ரோன் லோகோ வழங்கப்பட்டுள்ளது. எல்இடி ஹெட்லைட்களுக்கு பதிலாக ஹலோஜன் ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஃபாக் விளக்குகள் எதுவும் இல்லை. கருப்பு நிறத்திலான காரின் முன்பக்க பம்பரில் சிவப்பு நிற ஹைலைட்கள் இருப்பதை காணலாம். காரின் பக்கவாட்டிற்கு சென்றால், 16-இன்ச் இரும்பு சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சக்கரங்களில் கவர்கள் எதுவும் இல்லை. கதவு கைப்பிடிகள் காரில் இருந்து தனியாக தெரியும் வகையில் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. விலை குறைவான எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டாக இருப்பினும், காரின் மேற்கூரை டிசைனில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், டர்ன் இண்டிகேட்டர்கள் பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகளில் வழங்கப்படுவதற்கு பதிலாக, அதற்கு கீழே முன்பக்க ஃபெண்டரில் வழங்கப்பட்டுள்ளன.

basalt entry level you variant

காரின் சைடில் இருந்து பார்க்கும்போது, பசால்ட் யு கார் மிகவும் எளிமையாக உள்ளது. ஏனெனில், பசால்ட்டின் டாப் வேரியண்ட்களில் கருப்பு நிறத்தில் கிளாடிங்குகள் முன் & பின் சக்கரங்களுக்கு மத்தியில் வழங்கப்படுகின்றன. காரின் பின்பக்கத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. ஒரேயொரு வித்தியாசம் என்றால், பின்பக்க பம்பர் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

காருக்குள் டேஸ்போர்டு இரு நிறங்களில் உள்ளது. பசால்ட்டின் மற்ற வேரியண்ட்களிலும் டேஸ்போர்டு இவ்வாறு இரு நிறங்களில் தான் கொடுக்கப்படுகிறது. இந்த பசால்ட் யு காரில் டேஸ்போர்டை தவிர்த்து, காரின் உட்புற கேபின் முழுவதுமாக கருப்பு நிறத்தில் உள்ளது. எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் என்பதால், பொழுதுப்போக்குக்கான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படவில்லை. அதேபோல், ஆட்டோமேட்டிக் ஏசிக்கு பதிலாக மேனுவல் ஏசி வழங்கப்பட்டுள்ளது.

basalt entry level you variant

டிரைவருக்கான தகவல்களை வழங்கக்கூடிய திரையும் செமி-டிஜிட்டல் தரத்தில் உள்ளது. காரின் ஸ்டேரிங் சக்கரத்தில் எந்தவொரு கண்ட்ரோல் பொத்தான்களும் இல்லை. எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டாக இருப்பினும், பயணிகளின் பாதுகாப்புக்கு 6 ஏர்பேக்குகள் மற்றும் ரிவர்ஸில் பார்க்கிங் செய்வதற்கு உதவியாக சென்சார்கள் இடம்பெற்றுள்ளன. பின் இருக்கை பயணிகளுக்கான தலையணையை இருக்கையில் இருந்து நீக்க முடியாது.

இருக்கைகளுக்கு மத்தியில் பயணிகள் கைகளை வைத்துக் கொள்வதற்கான ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்படவில்லை. பசால்ட் யு வேரியண்ட்டில் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினை 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் பெறலாம். இந்த பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 82 பிஎஸ் மற்றும் 115 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாப் வேரியண்ட்களில் வழங்கப்படும் டர்போ பெட்ரோல் என்ஜினை யு வேரியண்ட்டில் பெற முடியாது. இருப்பினும், இந்த வேரியண்ட்டிலும் பயணிகளின் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகளை பெறலாம் என்பது பாராட்டத்தக்க விஷயம் ஆகும். மத்திய அரசாங்கத்தின் தொடர் வலியுறுத்தலினால் இது சாத்தியமாகி உள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட ரூ.7.99 லட்சம் என்கிற விலையில் கிடைக்கக்கூடிய சிட்ரோன் பசால்ட் காரை தான் இந்த படங்களில் காண்கிறீர்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 14, 2024, 12:05 [IST]
English summary
Citroen basalt entry level you variant images check all details here
மேலும்... #citroen #Citroen Basalt #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X