சென்னை சாலைகளில் உலாவந்த மர்மமான கார்! வரும் காலத்தில் நம்ம ஆளுங்க எல்லாம் போட்டி போட்டு வாங்க போகிற கார்!!

சிட்ரோன் (Citroen) நிறுவனம் அதன் பசால்ட் (Basalt) காரில் புதியதாக எலக்ட்ரிக் வெர்சனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த நிலையில், பசால்ட் இவி எலக்ட்ரிக் கார் ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில்,சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெற்றது போன்று உள்ளது. இதுதொடர்பான ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றியும், சிட்ரோனின் இந்த புதிய எலக்ட்ரிக் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

பிரெஞ்சு கார் நிறுவனமான சிட்ரோன் இந்தியாவில் அதன் ஆதிக்கத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக சமீபத்தில் டாடா மோட்டார்ஸின் கர்வ் காருக்கு மாற்றாக சிட்ரோன் பசால்ட் அறிமுகம் செய்யப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். சிட்ரோனின் புதிய கூபே ஸ்டைலிலான எஸ்யூவி காராக பசால்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

citroen basalt electric car spied

இந்த பசால்ட் காரில்தான் விரைவில் புதியதாக எலக்ட்ரிக் வெர்சன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது, பசால்ட் இவி எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டாடா கர்வ் காரும் எலக்ட்ரிக் வெர்சனில் கிடைப்பதால், பசால்ட் இவி எலக்ட்ரிக் காரை உருவாக்கும் பணிகளில் சிட்ரோன் ஈடுப்பட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சிட்ரோன் பசால்ட் இவி எலக்ட்ரிக் கார் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், சென்னைக்கு அருகே நடத்தப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டம் தொடர்பான ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த படங்களின் மூலம் பார்க்கும்போது, பசால்ட் எரிபொருள் என்ஜின் காரில் இருந்து தோற்றத்தில் சில வித்தியாசங்களை இந்த சிட்ரோன் பசால்ட் இவி எலக்ட்ரிக் கார் கொண்டுள்ளது. முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால், காருக்கு முன்பக்கத்தில் ரீ-வொர்க் செய்யப்பட்ட பம்பர் கொடுக்கப்பட்டுள்ளது.

citroen basalt electric car spied

எலக்ட்ரிக் கார் என்பதால், கிரில் எதுவும் வழங்கப்படவில்லை. அதேபோல் ஏர்டேம் பகுதியிலும் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிறைய பார்ட்ஸை உள்ளடக்கியதாக ஹெட்லைட்கள் செட்-அப் உள்ளது. காரின் பக்கவாட்டில், தொடுதல் மூலமாக எளிதாக திறந்து மூடக்கூடிய கதவு கைப்பிடிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் அலாய் சக்கரங்களின் டிசைனும் மாற்றப்பட்டுள்ளது.

காருக்கு முன்னால் இடதுப்பக்க சக்கரத்திற்கு மேலே சிறிய திறந்த பகுதி இருப்பதை படங்களில் காணலாம். ஒருவேளை அந்த பகுதியில்தான் சார்ஜிங் பாயிண்ட் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். காருக்கு பின்பக்கத்தில் டெயில்லைட்களை வ்ராப் சூழ்ந்துள்ளன. இதனுடன், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா, உயரத்தில் பொருத்தப்பட்ட ஸ்டாப் விளக்கு, சறுகலான மேற்கூரை உள்ளிட்டவற்றையும் இந்த சோதனை பசால்ட் இவி காரில் பார்க்க முடிகிறது.

citroen basalt electric car spied

புதிய பசால்ட் எலக்ட்ரிக் காருக்குள் வயர்லெஸ் மொபைல் போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம், வயர்லெஸ் மொபைல் போன் கனெக்ட்டிவிட்டி மற்றும் 10.2 இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றப்படி, சிட்ரோன் பசால்ட் இவி எலக்ட்ரிக் காரில் பொருத்தப்பட உள்ள பவர்டிரெயின் குறித்த விபரங்கள் கிடைக்க பெறவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், சிங்கிள் மோட்டார் உடன் 35kWh பேட்டரி பேக் வழங்கப்படலாம். இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக ஏறக்குறைய 450கிமீ தொலைவிற்கு காரை இயக்கி செல்ல முடியும் என எதிர்பார்க்கிறோம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தீவிரமாக இருக்கும் நிலையில், அதன் லேட்டஸ்ட் எலக்ட்ரிக் காரான கர்வ் இவி மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு போட்டியாக களமிறக்கப்படுவதால், சிட்ரோன் பசால்ட் இவி மீதும் கஸ்டமர்களின் கவனம் விழும். இதன் மூலம் இந்த புதிய சிட்ரோன் எலக்ட்ரிக் காரின் விற்பனை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Source: Carwale

More from DriveSpark

Article Published On: Monday, October 28, 2024, 21:08 [IST]
English summary
Citroen basalt ev electric car spied near chennai tamilnadu check all details here
மேலும்... #citroen #Citroen Basalt #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X