எப்புட்றா! இவ்ளோ கம்மியான விலையில் புத்தம் புதிய காரா! டோனியே நம்ப முடியாம 'ஸ்டண்' ஆயிட்டாரு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt). கூபே எஸ்யூவி (Coupe SUV) ரகத்தை சேர்ந்த சிட்ரோன் பசால்ட் கார், நாளை (ஆகஸ்ட் 9) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. புதிய டீசர் வீடியோ (Teaser Video) ஒன்றின் மூலமாக இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி (MS Dhoni) தோன்றியுள்ளார். இவர் சிட்ரோன் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக (Brand Ambassador) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த வீடியோவில் சிட்ரோன் பசால்ட் காரின் பாதுகாப்பு, சௌகரியம் மற்றும் அடுத்த தலைமுறை கனெக்டிவிட்டி வசதிகளை பற்றி எல்லாம் எம்எஸ் டோனி குறிப்பிடுகிறார். இறுதியில் ஆரம்ப விலையை (Price) பார்த்து, அவர் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி அடைவதை போல் காட்டப்பட்டுள்ளது. ஆனால் விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படவில்லை.

Citroen Basalt Coupe SUV

ஆகஸ்ட் 9ம் தேதி விலை அறிவிக்கப்படும் என்ற தகவலுடன், இந்த டீசர் வீடியோ முடிவடைகிறது. இந்த டீசர் வீடியோவின் மூலம், சிட்ரோன் பசால்ட் கார் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வரப்போகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது எவ்வளவு? என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிந்து கொள்ள நாம் நாளை வரை காத்திருக்க வேண்டும்.

செயல்திறனை பொறுத்தவரையில் சிட்ரோன் பசால்ட் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகியவை ஆகும். இதில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 80 பிஹெச்பி மற்றும் 115 என்எம் ஆகும்.

Citroen Basalt

மறுபக்கம் டர்போ பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 109 பிஹெச்பி மற்றும் 190 என்எம் ஆகும். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வசதிகளை (Features) பொறுத்தவரையில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்றவை எல்லாம் இந்த காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கும்.

பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது ஆரம்ப நிலை வேரியண்ட்டில் இருந்து டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் இடம்பெற்றிருக்கும். எனவே சிட்ரோன் பசால்ட் காரில், நல்ல பாதுகாப்பையும் நாம் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா கர்வ் இவி (Tata Curvv EV) எலெக்ட்ரிக் கார் நேற்று (ஆகஸ்ட் 7) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஐசி இன்ஜின் வெர்ஷன் வரும் செப்டம்பர் 2ம் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

டாடா கர்வ் காரின் ஐசி இன்ஜின் மாடலுக்கு நேரடி போட்டியாக, சிட்ரோன் பசால்ட் இருக்கும். சிட்ரோன் நிறுவனம் பசால்ட் காரை மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு நெருக்கடி ஏற்படலாம். அதாவது டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் கர்வ் காரை குறைவான விலையில் களமிறக்கியாக வேண்டிய கட்டாயம் உண்டாகலாம்.

சிட்ரோன் பசால்ட் காரின் விலை நாளைதான் அறிவிக்கப்படும். எனினும் இதன் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 8 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என தெரிகிறது. இதன் காரணமாகவே டோனி திகைப்படைவதை போன்ற டீசர் வீடியோவை வெளியிட்டு சிட்ரோன் நிறுவனம் வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை தூண்டியிருக்கலாம் என கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 8, 2024, 16:13 [IST]
English summary
Citroen basalt india launch tomorrow expected price engine safety features
மேலும்... #citroen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+