இந்தியாவே எதிர்பார்த்த கார் நாளை அறிமுகமாகிறது! டாடாவை தலையில துண்ட போட்டு போக வச்சிடுவாங்க போலயே!
சிட்ரோன் நிறுவனம் தனது பசால்ட் என்ற கூபே ஸ்டைல் எஸ்யூவி காரை நாளை அதாவது ஆகஸ்ட் 2ம் தேதி இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் நேரடியாக டாடா நிறுவனத்தின் கர்வ் காருக்கு போட்டியாக களம் இறங்குகிறது. இந்த காரில் உள்ள அம்சங்கள் என்னென்ன? இதில் எந்த இன்ஜின் பொருத்தப்படுகிறது? இந்த காரில் புதிதாக என்னென்ன விஷயங்கள் எல்லாம் இருக்கிறது? என்ற விரிவான விபரங்களை தான் இங்கே நாம் காண போகிறோம்.
சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே சி3, இசி3, சி3 ஏர்கிராஸ் ஆகிய கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த காருடன் புதிதாக பசால்ட் என்ற புதிய கூபே ஸ்டைல் காரையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 2ம் தேதி இந்த கார் விற்பனைக்காக அறிமுகமாகிறது. இந்த கார் ஒரு பிரீமியம் காராக விற்பனைக்கு வருகிறது.

இந்த கார் நிறுவனம் வெளியிடும் 5வது காராகும். மேலும் இந்த கார்தான் கூபே ஸ்டைல் எஸ்யூவியில் அறிமுகமாகும் முதல் காராகும். டாடா கர்வ் காரும் இந்த மாதமே அறிமுகமாக உள்ள நிலையில் இந்த இரு கார்களும் மார்க்கெட்டு மிகப்பெரிய போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிட்ரோன் பசால்ட் காரின் புகைப்படங்களை எல்லாம் அந்நிறுவனம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதில் காரின் உட்புற புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.
இந்த புகைப்படங்களை பார்க்கும்போது சிட்ரோன் நிறுவனம் தனது சி3 என்ற காம்பேக்ட் ஹேட்ச்பேக் கார் மற்றும் சி3 ஏர்கிராஸ் காரில் உள்ள அம்சங்களை விடவும் கூடுதல் அம்சங்களை உட்பகுத்தி உள்ளது நமக்கு தெளிவாக தெரிகிறது. சி3 மற்றும் சி3 ஏர்கிராஸ் ஆகிய கார்களில் சில அடிப்படை அம்சங்கள் கூட இல்லை எனவும், இதன் விலை அதிகமாக இருக்கிறது எனவும் வாடிக்கையாளர்கள் அதிருப்தியை வெளியிட்டு வந்தனர்.

இதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக சிட்ரோன் நிறுவனம் தனது பசால்ட் காரை வடிவமைத்துள்ளது. இதன் டீசரை வைத்து பார்க்கும் போது இந்த காரின் பின்பக்கம் ஏசி வென்ட் தரைப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக ஷார்க் ஃபின் ஆன்டனா, எலெக்ட்ரிக் ஓஆர்விஎம், பின் பக்க கதவுகளில் பவர் விண்டோ பட்டன்கள் எல்லாம் பொருத்தப்பட்டுள்ளன.
அதேநேரம் நவீன கார்களில் உள்ள சன் ரூஃப் மற்றும் கீ லெஸ் இக்னீஷியன் ஆகிய அம்சங்கள் இந்த காரில் இல்லை. இதுபோக இந்த காரின் உட்பகுதியில் உள்ள ரிவ்யூ கண்ணாடியில் மேனுவல் டே /நைட் பங்க்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த காரில் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

சிட்ரோன் நிறுவனம் தனது சி3 மற்றும் சி3 ஏர்கிராஸ் ஆகிய கார்களை தயாரிக்கும் அதே சிஎம்பி பிளாட்பார்மில் தான் இந்த பசால்ட் காரையும் தயாரிக்கிறது. இந்த பிளாட்பார்மில் தயாரிக்கப்படும் கார்கள் எல்லாம் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாகங்களை வைத்து உருவாக்கப்படுகிறது. இதனால் இதன் விலை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த கார் நிச்சயம் போட்டி கார்களின் விலையை விட குறைவான விலையில் அறிமுகமாக வாய்ப்புள்ளது.
இந்த கார் நாம் எதிர்பார்க்கும் படி ரூ13 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகும் என தெரிகிறது. இந்த காரில் 1.2லி டர்போ 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது இது அதிகபட்சம் 110 பிஎஸ் பவரையும் 205 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிக்ஸ் ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.
சிட்ரோன் பசால்ட்டு கார் தற்போது கம்பஷன் இன்ஜின் வெர்ஷனில் மட்டுமே இந்தியாவில் அறிமுகமாகிறது. சிட்ரோன் நிறுவனம் இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்த அப்டேட்கள் எல்லாம் பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காருக்கு கிடைக்கும் வரவேற்பு பொருத்து எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குறைந்த விலையில் அறிமுகமாகும் முதல் கூபே ஸ்டைல் எஸ்யூவி கார் இது தான். அதனால் இந்தியா மக்களின் பார்வை இந்த காரின் பக்கம் திரும்பி உள்ளது. இந்த காரின் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் காரில் உள்ள அம்சங்களை பொறுத்து இதன் விற்பனை அதிகமாக வாய்ப்புள்ளது. இதுபோக அடுத்த வாரமே டாடா கர்வ் காரும் அறிமுகமாவதால் மார்க்கெட்டில் கடும் போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









