நாடே காத்து கிடந்த கார் களத்தில் இறங்கியது! விலை இவ்ளோதானா! எல்லாரும் சந்தோஷத்துல திக்கு முக்காடி போயிட்டாங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt) கார், இன்று (ஆகஸ்ட் 9) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி சிட்ரோன் பசால்ட் கார் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இது கூபே எஸ்யூவி (Coupe SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். யாருமே எதிர்பார்க்காத வகையில், மிகவும் குறைவான விலையில் சிட்ரோன் பசால்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த காருக்காக காத்து கொண்டிருந்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சிட்ரோன் பசால்ட் கார் மிகவும் விலை குறைவானதாக இருந்தாலும் கூட, ஏராளமான வசதிகள் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன. இதில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்ட்டிவிட்டி போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இவை எல்லாம் தவிர, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல், பின் பகுதியிலும் ஏசி வெண்ட்கள் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகளும், சிட்ரோன் பசால்ட் காரில் வழங்கப்பட்டுள்ளன. செயல்திறனை பொறுத்தவரையில், 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) கொடுக்கப்பட்டுள்ளன.
அவை இரண்டுமே 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான். இதில், ஒன்று நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் ஆகும். மற்றொன்று டர்போசார்ஜ்டு இன்ஜின் ஆகும். நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜினின் பவர் அவுட்புட் 80 பிஹெச்பி மற்றும் 115 என்எம் ஆக உள்ளது.

மறுபக்கம் டர்போசார்ஜ்டு இன்ஜினின் பவர் அவுட்புட் 109 பிஹெச்பி மற்றும் 190 என்எம் ஆக உள்ளது. நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் டர்போசார்ஜ்டு இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் கூடிய டர்போசார்ஜ்டு இன்ஜினின் பவர் அவுட்புட் 109 பிஹெச்பி மற்றும் 205 என்எம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். டிசைனை (Design) பொறுத்தவரையில், ட்யூயல் டோன் அலாய் வீல்கள், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் சுறா துடுப்பு ஆன்டெனா போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய சிட்ரோன் பசால்ட் காரின் ஆரம்ப விலை வெறும் 7.99 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் இது அறிமுக சலுகை விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதாவது வரும் அக்டோபர் 31ம் தேதி வரை முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே சிட்ரோன் பசால்ட் கார் இந்த விலையில் கிடைக்கும். அதற்கு பிறகு விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இங்கே டாப் வேரியண்ட்டின் விலை எவ்வளவு? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தற்போதைய நிலையில் ஆரம்ப விலை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்ரோன் பசால்ட் காரின் வேரியண்ட் வாரியான முழுமையான விலை பட்டியல் கூடிய விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. எனினும் தற்போதைய நிலையில் வெறும் 7.99 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் சிட்ரோன் பசால்ட் கார் களமிறக்கப்பட்டிருப்பது, இந்திய வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வரும் செப்டம்பர் 2ம் தேதி, டாடா கர்வ் ஐசிஇ (Tata Curvv ICE) மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு நேரடி போட்டியாக சிட்ரோன் பசால்ட் இருக்கும். சிட்ரோன் பசால்ட் மிகவும் குறைவான விலையில் களமிறக்கப்பட்டுள்ளதால், இந்த 2 கார்களுக்கும் இடையேயான போட்டி கடுமையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்ரோன் பசால்ட் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளும் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள், 11 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, சிட்ரோன் பசால்ட் காரை புக்கிங் செய்து கொள்ளலாம். சிட்ரோன் பசால்ட் காரின் டெலிவரி (Delivery) பணிகள் கூடிய விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








