டோனி அணியின் காரை கண்ணுல காட்டீட்டாங்க... விலை இவ்ளோதானா... டாடாவுக்கு 'செக்' வைக்க போகுது...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt). கூபே எஸ்யூவி (Coupe SUV) ரகத்தை சேர்ந்த இந்த கார் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி (August 2) அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு அடுத்த ஒரு சில வாரங்களில் விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னதாக சிட்ரோன் பசால்ட் காரின் புதிய டீசர் வீடியோ (New Teaser Video) ஒன்று தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த டீசர் வீடியோவில் சிட்ரோன் பசால்ட் காரின் வெளிப்பகுதி மட்டுமின்றி, உட்பகுதியையும் நம்மால் பார்க்க முடிகிறது. சிட்ரோன் பசால்ட் காரின் உட்பகுதியை நாம் பார்ப்பது இதுவே முதல் முறையாகும். ஆகஸ்ட் 2ம் தேதி அறிமுகம் செய்யப்படும்போது, இந்த காரின் உட்பகுதியை நாம் இன்னும் தெளிவாக காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Citroen Basalt

டாடா பசால்ட் காரில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக 115 பிஹெச்பி பவர் மற்றும் 215 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம். இந்திய சந்தையில் கூடிய விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டாடா கர்வ் (Tata Curvv) காருக்கு நேரடி போட்டியாக சிட்ரோன் பசால்ட் இருக்கும்.

Citroen Basalt New Teaser

இதுதவிர ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் டொயோட்டா ஹைரைடர் (Toyota Hyryder) ஆகிய மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களுடனும், சிட்ரோன் பசால்ட் கார் விற்பனையில் போட்டியிடவுள்ளது.

சிட்ரோன் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக (Brand Ambassador) தற்போது எம்எஸ் டோனி (MS Dhoni) உள்ளார். அவரது முகம், சிட்ரோன் பசால்ட் காரை பிரபலமாக்க உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிட்ரோன் பசால்ட் காரில், அதிநவீன வசதிகளுக்கு சற்றும் பஞ்சமிருக்காது என நாங்கள் கருதுகிறோம்.

இதில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்றவை சிட்ரோன் பசால்ட் காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சிட்ரோன் பசால்ட் காரின் ஆரம்ப விலை வெறும் 10 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த காரின் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது வெகு விரைவில் நமக்கு தெரியவந்து விடும்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 20, 2024, 17:34 [IST]
English summary
Citroen basalt new teaser video expected price features engine
மேலும்... #citroen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+