இன்னும் ரெண்டே வாரத்துல டெலிவரி! நம்ப முடியாத குறைவான விலையில் களமிறங்கிய புத்தம் புதிய கார்! ரொம்ப சந்தோஷம்யா
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt). கூபே எஸ்யூவி (Coupe SUV) ரகத்தை சேர்ந்த இந்த கார், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. செயல்திறனை பொறுத்தவரையில் சிட்ரோன் பசால்ட் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. அவை இரண்டுமே ஜென் 3 ப்யூர் டெக் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் (Petrol) இன்ஜின்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதில் ஒன்று என்ஏ (NA) என சுருக்கமாக அழைக்கப்படும் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் ஆகும். மற்றொன்று டர்போ (Turbo) இன்ஜின் ஆகும். இதில், என்ஏ இன்ஜினின் பவர் அவுட்புட் 80 பிஹெச்பி மற்றும் 115 என்எம்-ஆக உள்ளது. மறுபக்கம் டர்போ இன்ஜினின் பவர் அவுட்புட் 109 பிஹெச்பி மற்றும் 190 என்எம்-ஆக இருக்கிறது.

என்ஏ இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் டர்போ இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் என 2 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது, சிட்ரோன் பசால்ட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சிட்ரோன் பசால்ட் காரின் வேரியண்ட் வாரியான முழுமையான விலை பட்டியல் (Variant-Wise Full Price List) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சிட்ரோன் பசால்ட் காரின் 1.2 NA You வேரியண்ட்டின் விலை 7.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். அதே நேரத்தில் 1.2 NA Plus வேரியண்ட்டின் விலை 9.99 லட்ச ரூபாய் ஆகவும், 1.2 Turbo Plus வேரியண்ட்டின் விலை 11.49 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் 1.2 Turbo Plus AT வேரியண்ட்டின் விலை 12.79 லட்ச ரூபாய் ஆகவும், 1.2 Turbo Max வேரியண்ட்டின் விலை 12.28 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசியாக 1.2 Turbo Max AT வேரியண்ட்டின் விலை 13.62 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதான் சிட்ரோன் பசால்ட் காரின் டாப் வேரியண்ட் ஆகும்.
இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது மிகவும் சவாலான விலை நிர்ணயம் என நாங்கள் கருதுகிறோம். எனவே வரும் செப்டம்பர் 2ம் தேதி விற்பனைக்கு வரவுள்ள டாடா கர்வ் ஐசிஇ (Tata Curvv ICE) காருக்கு விற்பனையில் கடுமையான போட்டி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டாடா கர்வ் ஐசிஇதான், சிட்ரோன் பசால்ட் காருக்கு நேரடி போட்டி ஆகும். சிட்ரோன் பசால்ட் காருக்கு சவாலான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், கர்வ் ஐசிஇ காருக்கும் அத்தகைய சவாலான விலை நிர்ணயத்தை செய்தாக வேண்டிய சூழல் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது இந்திய சந்தையில் சிட்ரோன் நிறுவனம் களமிறக்கியுள்ள 5வது கார் ஆகும். முன்னதாக சிட்ரோன் சி3 (Citroen C3), சிட்ரோன் இசி3 (Citroen eC3), சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் (Citroen C3 Aircross) மற்றும் சி5 ஏர்க்ராஸ் (Citroen C5 Aircross) ஆகிய 4 கார்களை சிட்ரோன் நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது.
பசால்ட் வருகைக்கு முன்னதாக 4 கார்கள் இருந்தாலும் கூட, இந்திய சந்தையில் சிட்ரோன் நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) 'டல்' அடித்து கொண்டுள்ளது என்பதுதான் யதார்த்தம். இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு காலண்டர் ஆண்டில் தற்போது வரை (ஜனவரி-ஜூலை) ஒட்டுமொத்தமாகவே வெறும் 3,670 கார்களை மட்டும்தான் சிட்ரோன் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
ஆனால் இந்த நிலைமையை சிட்ரோன் பசால்ட் மாற்றி காட்டும் என நாங்கள் கருதுகிறோம். அதாவது இந்திய சந்தையில் சிட்ரோன் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கு பசால்ட் உதவி செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன. அதற்கு ஏற்ற வகையில் மிகவும் சவாலான விலையில் சிட்ரோன் பசால்ட் களமிறக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு பசால்ட் காரை டெலிவரி (Delivery) செய்யும் பணிகளை, வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து தொடங்கவுள்ளதாக சிட்ரோன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே இன்னும் சில நாட்களில் இந்திய சாலைகளில் சிட்ரோன் பசால்ட் காரை நாம் பார்க்க போகிறோம்.


Click it and Unblock the Notifications








