டாடாவுடன் நேருக்கு நேராக மோதும் டோனி... நாடே அதிர போகுது... இப்பவே காலண்டர்ல தேதியை குறிச்சி வெச்சுக்கோங்க...
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt). கூபே எஸ்யூவி (Coupe SUV) ரகத்தை சேர்ந்த சிட்ரோன் பசால்ட் கார், வரும் ஆகஸ்ட் 2ம் தேதி (August 2) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது. அதை தொடர்ந்து, ஆகஸ்ட் மாத இறுதிக்குள்ளாக விலை எவ்வளவு? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த கார் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தற்போது விற்பனையில் உள்ள சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் எஸ்யூவி (Citroen C3 Aircross SUV) காரின் அடிப்படையில், சிட்ரோன் பசால்ட் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்தான், சிட்ரோன் பசால்ட் காரிலும் கொடுக்கப்படவுள்ளது.

இந்த இன்ஜின் சிட்ரோன் பசால்ட் காரில், அதிகபட்சமாக 109 பிஹெச்பி பவர் மற்றும் 205 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.
வசதிகளை பொறுத்தவரையில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களை எல்லாம் சிட்ரோன் பசால்ட் கூபே எஸ்யூவி காரில் நாம் எதிர்பார்க்கலாம்.

இந்திய சந்தையில் டாடா கர்வ் (Tata Curvv) காருக்கு போட்டியாக, சிட்ரோன் பசால்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. டாடா கர்வ் காரும் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. இந்த கார் ஜூலை 19 (நாளை) வெளியிடப்படவுள்ளது. அதை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 7ம் தேதி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
டாடா கர்வ் காரானது இந்திய சந்தையில், ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 விதமான மாடல்களிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இது டாடா கர்வ் காரின் மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது. ஆனால் சிட்ரோன் பசால்ட் ஐசி இன்ஜின் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது.
சிட்ரோன் என்பது இந்தியாவில் தற்போது வேகமாக பிரபலமடைந்து வரும் பிரான்ஸ் (France) நாட்டை சேர்ந்த ஒரு கார் நிறுவனம் ஆகும். இந்தியாவில் இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக (Brand Ambassador) எம்எஸ் டோனி (MS Dhoni) இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா என்ற பிராண்டு கர்வ் காருக்கு பலம் சேர்க்கிறது. மறுபக்கம் டோனியின் முகம், சிட்ரோன் பசால்ட் காரை பிரபலமாக்க உதவி செய்யலாம். இந்த 2 கார்களின் மோதலில் பிரம்மாண்ட வெற்றியை பெறப்போவது யார்? என்பது கூடிய விரைவில் நமக்கு தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications








