சாலைகளில் சுற்றி கொண்டுள்ள கார் அதுவா! இந்தியாவே இந்த காருக்காகதான் வெயிட்டிங்! டாடாவுக்கு டஃப் குடுக்க போகுது

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt). இது கூபே எஸ்யூவி (Coupe SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். நடப்பு 2024ம் ஆண்டின் 2வது பாதியில் சிட்ரோன் பசால்ட் கார் விற்பனைக்கு வரவுள்ளது.

அதற்கு முன்னதாக சிட்ரோன் பசால்ட் காரின் சோதனை ஓட்டம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்போது எடுக்கப்படும் ஸ்பை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இதில், சிட்ரோன் பசால்ட் கார் இரவு நேரத்தில் சோதனை செய்யப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் எஸ்யூவி (Citroen C3 Aircross SUV) காரின் அடிப்படையில்தான், சிட்ரோன் பசால்ட் கூபே எஸ்யூவி கார் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ள அதே இன்ஜின்தான், சிட்ரோன் பசால்ட் காரிலும் வழங்கப்படவுள்ளது.

Citroen Basalt Spied Testing

அது 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 109 பிஹெச்பி பவர் மற்றும் 205 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வசதிகளை பொறுத்தவரையில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம் மற்றும் முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள் போன்றவை, சிட்ரோன் பசால்ட் காரின் முக்கியமான அம்சங்களாக இருக்கலாம்.

Citroen Basalt

வெளிப்புற டிசைனை பொறுத்தவரையில், எல்இடி டெயில்லைட்கள், வீல் ஆர்ச்சுகள், அகலமான ரேடியேட்டர் க்ரில் அமைப்பு போன்றவை மிகவும் முக்கியமான வசதிகளாக இருக்கலாம். இது இந்திய சந்தையில் சிட்ரோன் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள 5வது கார் ஆகும். முன்னதாக சிட்ரோன் சி3 (Citroen C3), நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் (Citroen eC3) மற்றும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் (Citroen C5 Aircross) என சிட்ரோன் நிறுவனம் மொத்தம் 4 கார்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த வரிசையில் 5வது காராக, சிட்ரோன் பசால்ட் கார் விற்பனைக்கு வரவுள்ளது. இந்திய சந்தையில் டாடா கர்வ் (Tata Curvv) உள்ளிட்ட கார்களுடன், சிட்ரோன் பசால்ட் போட்டியிடும். டாடா கர்வ் காரும் இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சிட்ரோன் பசால்ட் காரை போலவே, டாடா கர்வ் காரும் இன்னும் ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. டாடா கர்வ் காரின் சோதனை ஓட்டமும் இந்திய சாலைகளில் தற்போது மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த 2 கார்கள் மீதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சிட்ரோன் பசால்ட் காரின் நேரடி போட்டி மாடலான டாடா கர்வ் காரில், பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. கூடவே டாடா கர்வ் காரின் எலெக்ட்ரிக் (Electric) வெர்ஷனும் விற்பனைக்கு வரவுள்ளது. எனவே சிட்ரோன் பசால்ட் கார் உடனான போட்டியில், டாடா கர்வ் காரின் கை ஓங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 7, 2024, 21:16 [IST]
English summary
Citroen basalt spied testing again tata curvv rival
மேலும்... #சிட்ரோன் #citroen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+