இந்த காரோட விலை இவ்ளோ கம்மியா!.. வாயை பிளக்க வைக்கும் சிட்ரோன் பசால்ட் காரின் ரிவியூ வீடியோ!
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனமான சிட்ரோன் (Citroen), இந்தியாவில் அதன் எஸ்யூவி கூபே வகை கார் மாடலான பசால்ட் (Basalt)-ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. யாரும் எதிர்பார்த்திராத மிக மிக குறைவான விலையே இதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. ரூ. 7.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலேயே இந்த கார் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அறிமுகத்தைத் தொடர்ந்து தற்போது இந்த காருக்கான புக்கிங் பணிகளையும் சிட்ரோன் தொடங்கி இருக்கின்றது.
ரூ. 11,001 கட்டணத்தில் இதற்கான முன் பதிவுகள் நாடு முழுவதும் ஏற்கப்பட்டு வருகின்றன. இத்தகைய விலை குறைவான காரையே சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இதன் வாயிலாக கிடைத்த தகவலையே வீடியோவாக தொகுத்து வழங்கி இருக்கின்றோம். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
சிட்ரோன் பசால்ட் அதிகம் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி கூபே வகை கார் மாடல் ஆகும். இதற்கு சான்றாக ஏகப்பட்ட சிறப்பம்சங்களை அந்த கார் கொண்டிருப்பதை வீடியோவில் பார்த்திருப்பீர்கள் என நம்புகின்றோம். இந்த கார் இந்தியாவின் பள்ளம்-மேடுகள் நிறைந்த சாலைக்கும் ஏற்ற வாகனமாகக் காட்சியளிக்கின்றது.

இதில் வழங்கப்பட்டு இருக்கும் சஸ்பென்ஷன் செட்-அப் பறக்கும் கம்பளத்தில் மிதப்பதைப் போன்ற அனுபவத்தை வழங்கும் வகையில் உள்ளது. எனவே சொகுசான பயணம் இந்த காரில் மிக தாராளமாகக் கிடைக்கும். இதுதவிர, பின்னிருக்கைகளையும் அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளும் வசதி இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








