சந்தைக்கே வரல அதுக்குள்ள டாடா கர்வ்-க்கு எதிராளி ரெடி! மைலேஜை இவ்ளோ தருமா! பசால்ட் பற்றிய முக்கிய விபரங்கள்!

இந்தியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பான சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt) கார், அதிகாரப்பூர்வமாக நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதற்கு யாருமே எதிர்பார்த்திராத விலையையே சிட்ரோன் நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கின்றது. ரூ.7.99 லட்சம் என்கிற மிகவும் குறைவான விலையே இந்த காருக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. அறிமுகத்தை முன்னிட்டே இந்த குறைவான விலை பசால்ட் காருக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. குறுகிய காலத்திற்கு மட்டுமே இந்த விலையில் பசால்ட் விற்பனைக்குக் கிடைக்கும். கடைசி நாளாக அக்டோபர் 31 ஆம் தேதியே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் வரை புக் செய்யும் வாடிக்கையாளர்களால் இந்த காரை ரூ. 7.99 லட்சத்திற்கு வாங்கிக் கொள்ள முடியும். அதேவேளையில், இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த கார் பற்றிய சுவாரஷ்யமான மற்றும் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Citroen basalt suv highlights

சிட்ரோன் பசால்ட்-இன் கவர்ச்சியான தோற்றம்: தான் ஒரு பிரீமியம் தர கார் தயாரிப்பாளர் என்பதை மீண்டும் ஒரு முறை சிட்ரோன் நிறுவனம் இந்த பசால்ட் கார் உருவாக்கத்தின் வாயிலாக நமக்கு தெரியப்படுத்தி இருக்கின்றது. தன்னுடைய மற்ற தயாரிப்புகளைப் போல அதிக கவர்ச்சியானதாகவே இந்த காரையும் அது தயார் செய்திருக்கின்றது.

சாய்வான மேற்கூரை, மூன்று அடுக்குகளாக காட்சியளிக்கும் முகப்பு பகுதி, கவர்ச்சியான எல்இடி ஹெட்லைட் மற்றும் டிஆர்எல் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர ஒரு ஹாலோஜன் பனி மின் விளக்கும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இவையே இந்த காரின் முன் பக்கத்திற்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளன.

இந்த அம்சங்களுடன் சேர்த்து காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக டைமண்ட் கட் அலாய் வீல், பிளாஸ்டிக் கிளாடிங், எல்இடி டெயில் லைட், இரண்டு வண்ணங்கள் கொண்ட ரியர் பம்பர் ஆகியவையும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, காரின் குறிப்பிட்ட சில பகுதிகளில் குரோம் பூச்சு கொண்ட அலங்கார அணிகலன்களையும் நம்மால் காண முடிகின்றது.

சிறப்பம்சங்கள்: இந்த காரில் பயணிகள் சொகுசு பயணிக்க வேண்டி பலதரப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், ப்ளஷ் (Plush) வகை இருக்கை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த செக்மெண்டில் இந்த வகை இருக்கையைப் பெறும் முதல் கார் மாடல் இதுவே ஆகும்.

3 படிகளாக அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளக் கூடிய இருக்கையே பின் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக, உயரமான பயணிகள் தங்களின் தேவைக்கேற்ப இருக்கையை அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ள முடியும். இதுதவிர, பின் பக்கத்திற்கு என தனி ஏசி துவாரங்கள், ஆர்ம் ரெஸ்ட் ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இது மிகவும் சௌகரியமான ரைடு அனுபவத்தை வழங்கும். இந்த ஆர்ம் ரெஸ்ட்டில் ஸ்டோரேஜ் வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றுடன் நவீன கால தொழில்நுட்ப வசதியாக 10.2 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆகிய வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் அதிக லக்கேஜ்களை ஏற்றிச் செல்ல முடியும். இதற்காக 470 லிட்டர் அளவுள்ள ஸ்டோரேஜ் சிட்ரோன் பசால்ட் எஸ்யூவி காரில் வழங்கப்பட்டு உள்ளது.

விலை மற்றும் புக்கிங் விபரம்: இந்த கார் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. யு (You), பிளஸ் (Plus) மற்றும் மேக்ஸ் (Max) ஆகியவையே அவை ஆகும். இந்த வேரியண்டுகள் பற்றிய முழுமையான விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

விரைவில் இதுபற்றிய விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இதற்கு ஆரம்ப விலையாக ரூ. 7.99 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், ரூ. 11,001 என்கிற கட்டணத்தில் இந்த காருக்கான புக்கிங்குகளும் ஏற்கப்பட்டு வருகின்றன. ஆஃப்-லைன் மற்றும் ஆன்-லைன் என இரண்டின் வாயிலாகவும் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

எஞ்சின் மற்றும் மைலேஜ் விபரம்: இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் இந்த காரை வாங்கிக் கொள்ள முடியும். இரண்டுமே பெட்ரோல் மோட்டார் மட்டுமே ஆகும். 82 எச்பி மற்றும் 115 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன் இந்த காரில் வழங்கப்படுகின்றது.

கியர்பாக்ஸை பொருத்த வரை 5 ஸ்பீடு மேனுவல் மட்டுமே இந்த மோட்டாருடன் வழங்கப்படுகின்றது. ஆனால், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு வகையான கியர்பாக்ஸ ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 110 எச்பி ஆற்றலை உருவாக்கும்.

அதேவேளையில், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட தேர்வு அதிகபட்சமாக 190 என்எம் டார்க்கையும், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட தேர்வு அதிகபட்சமாக 205 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். மைலேஜை பொருத்த வரை ஒரு லிட்டருக்கு 18 கிமீ முதல் 19.5 கிமீ வரையில் மைலேஜை வழங்கும்.

நிற தேர்வு: ஒட்டுமொத்தமாக 7விதமான வண்ண ஆப்ஷன்களில் சிட்ரோன் பசால்ட் காரை வாங்கிக் கொள்ள முடியும். இதில் ஐந்து ஒற்றை நிறத்தால் அலங்கரிக்கப்பட்டவை ஆகும். மற்ற இரண்டு டூயல் டோன் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அந்தவகையில், ஒற்றை நிற தேர்வில் ஸ்டீல் கிரே (Steel Grey), கார்னெட் ரெட் (Garnet Red), பிளாட்டினம் கிரே (Platinum Grey), காஸ்மோ ப்ளூ (Cosmo Blue), போலார் ஒயிட் (Polar White) ஆகியவையே வழங்கப்படுகின்றன.

டூயல் டோன் நிற தேர்வில் கார்னெட் ரெட் - பெர்லா நேரா பிளாக் மற்றும் போலார் ஒயிட் மற்றும் பெர்லா நோரா பிளாக் ஆகிய வண்ண ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன. அதாவது, டூயல் டோன் வண்ண தேர்வின் மேற்கூரை கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்: சிட்ரோன் நிறுவனம் இந்த காரை அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த வாகனமாக மட்டுமல்ல அதிக பாதுகாப்பு கருவிகளைத் தாங்கிய காராகவும் தயார் செய்திருக்கின்றது. அந்தவகையில், சிட்ரோன் பசால்ட் கார் மாடலில் ஆறு ஏர் பேக்குகள் முக்கிய பாதுகாப்பு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர, இஎஸ்பி, ஹில் ஹோல்டு அம்சம், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான மவுண்ட், மும்முனை சீட் பெல்ட் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்களும் பசால்ட் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

போட்டியாளர்கள்: இந்த காரின் வருகையால் பல கார் மாடல்களுக்கு போட்டியான சூழல் ஏற்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் டாடா கர்வ்-க்கு இது மிகப் பெரிய போட்டியாக இருக்கும். இதுதவிர, ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஹோண்டா எலிவேட் (Honda Elevate) மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா (Maruti Grand Vitara) உள்ளிட்ட கார் மாடல்களுக்கும் இது சந்தையில் போட்டியாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக, சிட்ரோன் பசால்டின் வருகையால் இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்திருக்கின்றது. இது இந்தியர்களின் மனதைக் கவருமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, August 9, 2024, 17:51 [IST]
English summary
Citroen basalt suv coupe top things to know
மேலும்... #citroen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+