டாடாவுக்கு 'செக்' வைக்க ரெடியான டோனி டீம்... ரகசியமா புக்கிங் நடக்குது... சம்பவத்தை பெருசா பண்ண போறாங்க...

இந்திய சந்தையில் கூடிய விரைவில் 2 கூபே எஸ்யூவி (Coupe SUV) ரக கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. அவை டாடா கர்வ் (Tata Curvv) மற்றும் சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt) ஆகியவை ஆகும். இதில், டாடா கர்வ் காரானது, எலெக்ட்ரிக் மற்றும் ஐசி இன்ஜின் என 2 வெர்ஷன்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதை தொடர்ந்து ஒரு சில வாரங்களில் ஐசி இன்ஜின் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் சிட்ரோன் பசால்ட் கார், வரும் ஆகஸ்ட் 2ம் தேதி பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. அதை தொடர்ந்து கூடிய விரைவில் விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக சிட்ரோன் பசால்ட் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

Citroen Basalt

இவை அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகள் ஆகும். அதாவது இந்தியாவில் உள்ள ஒரு சில சிட்ரோன் டீலர்ஷிப்களில் மட்டும் முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன. சிட்ரோன் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமான முறையில் முன்பதிவுகளை ஏற்க தொடங்கவில்லை. எனவே விரிவான தகவல்களுக்கு உங்கள் அருகில் உள்ள சிட்ரோன் டீலர்ஷிப்களை அணுகலாம்.

விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி சிட்ரோன் பசால்ட் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் (Citroen C3 Aircross) காரின் அடிப்படையில்தான், சிட்ரோன் பசால்ட் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

MS Dhoni

எனவே அந்த காரில் பொருத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்தான், சிட்ரோன் பசால்ட் காரிலும் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 109 பிஹெச்பி மற்றும் 215 என்எம் என்ற அளவில் இருக்கலாம். இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

வசதிகளை பொறுத்தவரையில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களை எல்லாம் சிட்ரோன் பசால்ட் காரில் நாம் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சிட்ரோன் இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக எம்எஸ் டோனி நியமிக்கப்பட்டுள்ளார். இது சிட்ரோன் பசால்ட் காரை வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக்குவதற்கு உதவி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சிட்ரோன் பசால்ட் மற்றும் டாடா கர்வ் இடையேயான போட்டி கடுமையான இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஐசி இன்ஜின் வெர்ஷனுடன், எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் களமிறங்கவிருப்பது டாடா கர்வ் காரின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்-ஆக கருதப்படுகிறது. ஆனால் விலை நிர்ணயம் சரியாக செய்யப்பட வேண்டும். எந்த காருக்கு விலை நிர்ணயம் சரியாக செய்யப்படுகிறதோ? அதுவே வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 24, 2024, 17:04 [IST]
English summary
Citroen basalt unofficial bookings open full details here
மேலும்... #citroen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+