இந்தியாவே எதிர்பார்த்த கார் இன்று வெளியானது! டாடா திட்டத்தில் மண்ணை அள்ளி போட்ட சிட்ரோன்!

சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் எஸ்யூவி கூபே காராக பசால்ட் காரை அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட்டுள்ளது. இந்த காரின் வடிவமைப்பு பலரை ஈர்த்துள்ள நிலையில், இந்த கார் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காரின் அறிமுகத்திற்காக பலர் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக இந்த கார் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு என்று தனி ரசிகர்களை இருக்கிறார்கள். இந்த ரக காரர்கள் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன. இதனால் வாகனம் தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு விதமான எஸ்யூவி கார்களை தயாரிக்க துவங்கி விட்டார்கள். விதவிதமான கார்கள் மார்கெட்டில் விற்பனையாகி வருகின்றது.

Citroen Basalt Unveils

இந்நிலையில் டாடா நிறுவனம் ஏற்கனவே தனது கர்வ் என்ற கார் மூலம் கூபே ஸ்டைல் எஸ்யூவி கார் ஒன்றை தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த காருக்கு போட்டியாக சிட்ரோன் நிறுவனமும் தனது பசால்ட் என்ற காரை இன்று வெளியிட்டுள்ளது.

இந்திய மார்க்கெட்டில் ஏற்கனவே எஸ்யூவி கூபே கார்கள் விற்பனையாகிக் கொண்டிருந்தாலும், இந்த கார்கள் எல்லாம் சொகுசு கார் தயாரிப்பு பிராண்டில் இருந்து வெளியாகியுள்ள கார்களாக இருக்கின்றன. இதனால் இதன் விலை அதிகமாக இருக்கும். இந்நிலையில் பட்ஜெட் எஸ்யூவி கூபே கார்ராக இந்த கார தான் வெளியாகி உள்ளது.

Citroen Basalt Unveils

சிட்ரோன் பசால்ட் காரின் வடிவமைப்பை பொறுத்தவரை வடிவமைப்பில் ஸ்மூத்தான பின்பக்க பாடி ஸ்டைல் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கூபே வடிவத்திற்கான கட்டமைப்பை பெறுவதற்காக இந்த வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டிராங்கான ஃபென்டர்கள் காரின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துகின்றன. காரின் வீல் ஆர்ச்கள் காரின் உறுதித் தன்மையை காட்டும் விதமாக இருக்கிறது.

இந்த காரின் முன்பக்கம் பானட் பகுதி மஸ்குலராகவும் அதே நேரம் எலகன்ட் டச் உடனும் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பக்க கிரில் பகுதி கிளாசி ப்ளக் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குரோம் இன்செர்ட்களும் உள்ளன. இதன் நடுவே லோகோ இருக்கிறது. இது லைட் வடிவமைப்பை இணைக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. ஏர் இன் டேக் பகுதிக்காக வழங்கப்பட்டுள்ளன. இதன் கிரில் பகுதி 3d எஃபேக்ட் உடன் கூடியதாக இருக்கிறது.

Citroen Basalt Unveils

இந்த காரின் பாடி கலர் மற்றும் கிரில் ஆகியவற்றின் கலர் காம்பினேஷன் காரை அகலமான கார் போன்ற தோற்றத்தை கொடுக்கும் விதமாக வழங்கப்பட்டுள்ளது. பின் பக்க டிசைனை பொருத்தவரை ஃப்ளோட்டிங் பிளேடு போன்ற வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் டெய்ல் லைட் பொருத்தப்பட்டுள்ளது. இது கார் அகலமான லுக்கில் இருப்பது போன்ற தோற்றத்தை கொடுக்கிறது.

இந்த காரின் முன்பக்கமும், பின்பக்கமும் சில்வர் நிற ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளன. இது காருக்கு பாதுகாப்பையும், அதேநேரம் டிசைனிற்க்கு தனித்துவமான அம்சத்தையும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் ஸ்பிலிட் டிஆர்எல் உடன் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது காருக்கு தனித்துவமான லுக்கை கொடுக்கிறது.

பின்பக்க லைட்டை பொருத்தவரை மூன்று லைட் ஸ்ட்ரிப்புகளுடன், கிராடியன்ட் லைன் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு மேஜிக்கலான லைட்டிங் லுக்கை கொடுக்கிறது. பின்பக்க ஜன்னல் பகுதிக்கு அருகேயும் முன் பக்க பம்பரிலும் கலர் கிளிப் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது காரின் பாடி கலருக்கு காண்ட்ராஸ்ட்டான நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சிட்ரோன் பசால்ட் கார் குறித்த மேலும் பல தகவல்கள் மற்றும் இந்த காரில் உள்ள அம்சங்கள் மற்றும் புதுமையான விஷயங்கள் குறித்த தகவல்கள் எல்லாம் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிட்ரோன் நிறுவனம் இந்த காரில் அட்வான்ஸான தொழில்நுட்பங்களையும் சொகுசு வசதிகளையும் உட்பகுதி இருக்கும் என நிச்சயம் நாம் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரின் டிரைவிங் அனுபவமும் சிறப்பாக இருக்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. சிட்ரோன் நிறுவனம் இந்த பசால்ட் காரை புதுமை தனித்துவமான வடிவமைப்பு ஒப்பிட முடியாத சொகுசு வசதி ஆகிய மூன்று விதிமுறைகளை மனதில் வைத்து உருவாக்கி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 25, 2024, 15:31 [IST]
English summary
Citroen basalt unveils new era suv coupe elegance practicality
மேலும்... #citroen #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X