8 லட்ச ரூபாயில் போட்டிக்கு வந்த கார்... டாடா காருக்கு கஸ்டமர்ஸ் கிடைப்பார்களா? இரண்டில் எது பெஸ்ட்?

சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt) இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.7.99 லட்சம் என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பசால்ட் காருக்கான முன்பதிவுகள் ரூ.11,001 என்கிற டோக்கன் தொகையில் ஏற்கப்பட்டு வருகின்றன. விற்பனையில் இந்த காருக்கு டாடா மோட்டார்ஸின் கர்வ் போட்டியாக உள்ளது. ஆனால், டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் கார் மட்டுமே தற்போதைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதே தவிர்த்து, பெட்ரோல்/ டீசல் என்ஜின் உடனான கர்வ் செப்டம்பர் 2இல் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்ரோன் பசால்ட் vs டாடா கர்வ்...

விலைகள்: சிட்ரோன் பசால்ட் காரின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ரூ.7.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற விலைகள் குறித்த விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மறுப்பக்கம், டாடா கர்வ் காரின் விலைகள் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. எங்களுக்கு தெரிந்தவரையில், டாடா கர்வ் காரின் ஆரம்ப விலை ரூ.10 லட்சம் என்கிற அளவில் நிர்ணயிக்கப்படலாம்.

citroen basalt vs tata curvv

என்ஜின்: சிட்ரோன் பசால்ட் காரில் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், அதிகப்பட்சமாக 110 பிஎஸ் மற்றும் 115 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை மட்டுமே பெற முடியும். அதுவே, அதிகப்பட்சமாக 110 பிஎஸ் மற்றும் 205 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய டர்போ என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெறலாம்.

மற்றப்படி, டீசல் என்ஜின் உடன் சிட்ரோன் பசால்ட் கார் விற்பனை செய்யப்பட போவதில்லை. மறுப்பக்கம், டாடா கர்வ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் அனைத்து என்ஜின் ஆப்ஷன் உடனும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸை பெறலாம்.

citroen basalt vs tata curvv

தொழிற்நுட்ப அம்சங்கள்: சிட்ரோன் பசால்ட் காரில் 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, 7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 15-வாட் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், ஸ்டோரேஜ் பகுதி உடன் முன் இருக்கைகளுக்கு மத்தியில் ஆர்ம்ரெஸ்ட், பின் இருக்கை பயணிகளுக்கு தொடைக்கான சப்போர்ட், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ, 3 யுஎஸ்பி துளைகள் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

இவற்றுடன், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம், ISOFIX குழந்தை இருக்கைக்கான கொக்கிகளும் பசால்ட்டில் இடம்பெற்றுள்ளன. டாடா கர்வ் காரில் 9-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், வாட்2வேர்ட்ஸ் நேவிகேஷன் சிஸ்டம், அலெக்ஸா வாய்ஸ் கமெண்ட்ஸ், எலக்ட்ரோ க்ரோமேட்டிக் ஆட்டோ டிம்மிங் IRVM உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

citroen basalt vs tata curvv

மேலும், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, 360-டிகிரி கேமரா, 4-ஸ்போக் ஸ்மார்ட் டிஜிட்டல் ஸ்டேரிங் சக்கரம், பெடில் ஷிஃப்டர்கள், ஆட்டோ ஹோல்ட் ஃபங்க்சன் உடன் எலக்ட்ரானிக் பார்கிங் பிரேக், லைட் அனிமேஷன்ஸ், 6 மொழிகளில் வாய்ஸ் அசிஸ்டன்ஸ், 8-வே பவர்டு டிரைவர் சீட், வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், லெதரேட்டட் இருக்கைகள் மற்றும் ஏரோ இன்செர்ட்களுடன் 18-இன்ச் அலாய் சக்கரங்கள் போன்றவற்றையும் கர்வ் காரில் டாடா வழங்கியுள்ளது.

இவற்றுடன், மல்டி-மோட் ரெகேன் பிரேக்கிங், இரு விதமாக சாய்க்கக்கூடிய பின் வரிசை இருக்கைகள், லெவல்-2 அடாஸ் மற்றும் 6 ஏர்பேக்குகளும் கர்வ் காரில் இடம்பெற்றுள்ளன. இந்த டாடா காரின் பின்பக்க டெயில்கேட் மற்றும் பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவற்றை குரல் மூலமாக கட்டுப்படுத்தலாம். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக 20க்கும் அதிகமான மொபைல் செயலிகளை வழங்கக்கூடிய ஆர்கேட்.இவி ஆப் தொகுப்பையும் இந்த டாடா காரில் பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொழிற்நுட்ப வசதிகளின்படி பார்த்தால், சிட்ரோன் பசால்ட்டை காட்டிலும் டாடா கர்வ் மேம்பட்டதாக இருக்கலாம். ஆனால், அதற்கேற்ப கர்வ் காரின் விலை அதிகமாக நிர்ணயிக்கப்படும். டீசல் என்ஜின் உடன் கிடைப்பது டாடா கர்வ் காருக்கு சாதகமாக இருக்கும். ஆனால், சிட்ரோன் பசால்ட் கார் மிடில்-கிளாஸ் மக்களாலும் வாங்கக்கூடிய விலையில் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த இரு கூபே-ஸ்டைல் எஸ்யூவி கார்களில் உங்களது சாய்ஸ் எது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 10, 2024, 23:59 [IST]
English summary
Citroen basalt vs tata curvv price engine features full comparison here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X