சைஸில் சிறியதாக இருந்தாலும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் கிடைக்கும் சிட்ரோன் கார்!! ஓட்டுவதற்கு எப்படி இருக்கு?
சிட்ரோன் (Citroen) நிறுவனம் அதன் சி3 ஏர்கிராஸ் காரில் புதியதாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. 2023 ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைத்துவந்த சி3 ஏர்கிராஸ் கார் இனி ஆட்டோமேட்டிக் ஆப்ஷனிலும் கிடைக்கும்.
இதன்படி, 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆட்டோமேட்டிக் காரில் வழங்கப்பட்டுள்ளது. மேனுவல் ஆப்ஷனில் சி3 ஏர்கிராஸ் ஓட்டுவதற்கு எவ்வாறு உள்ளது என்பதை ஏற்கனவே ரிவியூவாக தெரிவித்து இருந்தோம். இந்த நிலையில் தற்போது, புதிய சி3 ஏர்கிராஸ் ஆட்டோமேட்டிக் காரையும் ஓட்டிப் பார்த்து நாங்கள் வழங்கியுள்ள ரிவியூவை கீழேயுள்ள வீடியோவில் காணலாம்.
ஓர் பக்கா பிரெஞ்சு ஸ்டைல் எஸ்யூவி கார், சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆகும். புதிய ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களுக்காக காரின் டிசைனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆட்டோமேட்டிக் லோகோ கூட காரில் எங்கேயும் பொருத்தப்படவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். காரின் உட்பக்கத்தில், வழக்கமான மேனுவல் கியர்பாக்ஸ் லிவருக்கு பதிலாக, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸிற்கான லிவர் வழங்கப்பட்டுள்ளது.

இந்த டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை ஜப்பானை சேர்ந்த ஐசினி நிறுவனம் வடிவமைத்துள்ளது. சி3 ஏர்கிராஸ் காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த டர்போ என்ஜின் மேனுவல் ஆப்ஷனில் வழங்கும் இயக்க ஆற்றலை காட்டிலும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் கூடுதல் டார்க் திறனை வழங்கும் என சிட்ரோன் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








